transport awareness2 - 2026

நெல்லை மாவட்டம், செங்கோட்டை அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனையில் 30வது சாலை பாதுகாப்பு வார விழா கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு பணிமனை கிளை மேலாளார் மீனாட்சி சுந்தரம் தலைமை தாங்கினார். புளியங்குடி, தென்காசி (பொறுப்பு) காவல் துணை கண்காணிப்பாளர் சக்திவேல், வட்டார போக்குவரத்து அலுவலர் கருப்பசாமி, மோட்டார் வாகன ஆய்வாளர் நிலை 1 ஆனந்த், அரசு மனநல மருத்துவர் சுரேஷ் அரசு சித்த மருத்துவர் கலா, செங்கோட்டை காவல் ஆய்வாளர் சுரேஷ் குமார், தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் செங்கோட்டை (பொறுப்பு) சிவசங்கரன், சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து பேசினர்.

transport awareness1 - 2026

நிகழ்ச்சியில் தீயணைப்புத்துறையினர் விபத்து நடந்தால் எப்படி தடுப்பது, முதலுதவி நடவடிக்கைகள் எப்படி மேற்கொள்ளவேண்டும், என்பன உள்ளிட்டவற்றை செய்முறை விளக்கத்துடன் செய்து காண்பித்தனர்.

transport awareness2 1 - 2026

நிகழ்ச்சியில் அரசு விரைவு போக்குவரத்துக்கழக அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள், ஓட்டுநர்கள், நடத்துனர்கள், டெக்னீசியன்கள், அலுவலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூரில் குண்டு வெடிக்குமாம்; தமிழகத்துக்கு பேராபத்து: எச்சரிக்கும் இந்து முன்னணி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending