படக்கதை..! ஆனால் படத்துக்கும் கதைக்கும் தொடர்பில்லை!

ஃபோட்டூன் அடடே... அப்படியா? சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
vaiko nirmalaseetharaman - 2026

முன்குறிப்பு: இது படம் சொல்லும் கதை. படத்துக்கும் கதைக்கும் தொடர்பு படுத்தினால் அதற்கு நாம் பொறுப்பேற்க இயலாது!

கிருஷ்ணனால் கொல்லப்பட்ட கம்சனின் மாமனார் ஜராசந்தன்…

மருமகன் கொல்லப்பட்ட கோபத்தில்… கிருஷ்ணனைக் கொல்ல ஒரு “மஹா கூட்டணி”யை படை திரட்டி வந்து 17 முறை போரிட்டு உள்ளான்…

ஒவ்வொரு முறையும் கிருஷ்ணன் ஜராசந்தனை மட்டும் விட்டு விட்டு அவனுடன் வந்த மற்ற எதிரிகளை மட்டுமே கொல்வான்…

பலராமனுக்கு ஆச்சரியம்… ஏன் இப்படிச் செய்கிறாய் என்று கிருஷ்ணனிடமே கேட்டான்…

மாயக்கண்ணன் சிரித்துக் கொண்டே… எதிரிகளை தேட வேண்டிய அவசியம் இல்லாமல் ஒவ்வொரு முறையும் ஜராசந்தன் கூட்டமாக அவர்களை அழைத்து வருகிறான்… எனக்கும் உட்கார்ந்த இடத்தில் இருந்தே எதிரிகளை கொல்ல முடிகிறது… ஜராசந்தனை உடனே கொன்று விட்டால் என்னுடைய எதிரிகளைத் தேடி நானே அல்லவா மெனக்கெட வேண்டும்…என்றான்… !

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.