இன்று நமது தேசம், 25 ஆண்டுகள் என்ற இலக்கை நோக்கிப் பணியாற்றும் வேளையிலே, அடுத்த ஐந்தாண்டுகளுக்கான திட்டத்தைத் தீட்டி வருகிறது. மேலும் ஆட்சிக்கு வந்த பிறகு, முதல் 100 நாட்களின் தீர்மானங்களின் மீது, பணிகள் நடந்து வருகின்றன.
இங்கே இண்டிக்கூட்டணிக்காரர்களும் கூட, தங்கள் தாளம், தங்கள் ராகம், பாடி வருகிறார்கள். இதைக் கேட்டு உங்களுக்குச் சிரிப்புக் கூட வரக்கூடும். பயமும் கூட ஏற்படலாம். சில ஊடக அறிக்கைகளில் வந்திருக்கிறது, இந்த இண்டிக் கூட்டணிக்காரர்களிடம் விவாதம் நடைபெறுகிறதாம். ஏனென்றால் மோதி மீண்டும்மீண்டும் கேட்கிறார், சொல்லுங்க ஐயா, இத்தனை பெரிய தேசம், இதை யார் ஆளுவார்கள். பெயரைச் சொல்ல வேண்டுமில்லையா சொல்லுங்கள்.
பெயரே தெரியாமல் இத்தனை பெரிய தேசத்தை ஒப்படைக்க உஙகளால் முடியுமா? இவர்களோ பெயரைச் சொல்லத் தயாராக இல்லை. இங்கே மோதி இருக்கிறார் நீங்கள் சொல்லுங்கள் என்கிறார்கள் இவர்கள். வாக்களிக்க விரும்புவோர் மோதிக்கு அளியுங்கள் என்கிறார்கள். சொன்னார்களா இல்லையா?
உங்கள் முன்பாக பெயர் இருக்கிறதில்லையா? அந்தப்பக்கத்திலே பெயரே இல்லை. இத்தனை பெரிய தேசம், யாருக்கு அளிக்கிறோம், என்ற விபரம் தெரிந்திருக்க வேண்டுமா இல்லையா? தெரிந்திருக்க வேண்டுமா இல்லையா சொல்லுங்கள்?
யாருக்கு அளிக்க விரும்புகிறார்கள் உங்களுக்குத் தெரியுமா சொல்லுங்கள்? யாருக்காவது தெரியுமா? இப்படி இருட்டில குறிபார்க்க முடியுமா சொல்லுங்கள்? இங்கே தெளிவாக பத்தாண்டுகள் அனுபவம் இருக்கிறது. மோதி உங்கள் முன்பாக இருக்கிறார்.
இங்கே அனைவரும் கூறிவிட்டார்கள், மோதி நம்முடைய வேட்பாளர் என்று. இவர்கள் எல்லாம், இதற்கான விடையைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். விடையோ அவர்களுக்குக் கிடைத்தபாடில்லை.
ஆனால் சில ஊடகங்களில் என்ன வருகிறதென்றால், இந்த மோதி மீண்டும்மீண்டும் கேட்கிறார், உங்கள் தலைவர் யார்……. யாரிடம் பொறுப்பை ஒப்படைக்க இருக்கிறீர்கள்? ஃபார்முலா ஒன்றை ஏற்படுத்தியிருப்பதாகச் சொல்கிறார்கள்.
யார் பிரதமர் ஆவார்கள் என்பதற்கு ஒரு ஃபார்முலாவை ஏற்படுத்தியிருக்கிறார்கள். என்ன சொல்கிறார்கள் என்றால், இவர்கள், ஓராண்டுக்கு, ஒரு பிரதமர் ஃபார்முலாவை ஏற்படுத்தி வருகிறார்களாம். அதாவது, ஓராண்டுக்காலம் ஒரு பிரதமர், இரண்டாவது ஆண்டு…. இரண்டாவது பிரதமர், 3ஆவது ஆண்டு…. 3ஆவது பிரதமர், 4ஆவது ஆண்டு, 4ஆவது பிரதமர், 5ஆவது ஆண்டு, 5ஆவது பிரதமர், தேசம் என்னவாகும் சொல்லுங்கள்? என்ன ஆகும்? என்ன ஆகும் என்று கூறுங்கள் நண்பர்களே. தேசம் தப்பிக்குமா?
உங்களுடைய கனவுகள் பிழைக்குமா? உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் தப்பிப் பிழைக்குமா? என்ன அர்த்தம் என்றால் இவர்கள் பிரதமர் நாற்காலியை ஏலத்தில் விட்டுவிட்டார்கள் என்று புரிகிறதா!! யார் பையை நிரப்புகிறார்களோ அவர்கள் ஓராண்டுக்கு அமர்வார்கள். இதன் பிறகு என்ன வேடிக்கை நடக்கும் தெரியுமா?
மேலே அமர்பவர் இருக்கிறாரே, அதிலே நான்கு நபர்கள் நாற்காலியின், கால்களைப் பிடித்துக் கொண்டு அமர்வார்கள். எப்போது இவருடைய ஓராண்டு முடிவடையும் என்ற சந்தர்ப்பத்துக்குக் காத்துக் கிடப்பார்கள். அதை ஆட்டிக் கொண்டே இருப்பார்கள்.
சகோதர சகோதரிகளே, இதை எல்லாம் கேட்ட பிறகு என்ன தோணுதுன்னா ஆசை இருக்கு தாசில் பண்ண ஆனா அதிர்ஷ்டம் இருக்கு சிரிப்பு. ஆனால் நண்பர்களே உங்களுக்குள்ளே, விழிப்புணர்வை ஏற்படுத்த விரும்புகிறேன்.
எச்சரிக்கை அளிக்க விரும்புகிறேன். இது ஆசை இருக்கு தாசில் பண்ண எனும் பழமொழியைச் சொல்லி, உறங்கச் செல்லும் விஷயம் அல்ல. இது மிகவும் பயங்கரமான விளையாட்டு. இது தேசத்தை அழிக்கின்ற விளையாட்டு. இந்த ஆசை அழகானது இல்லை நண்பர்களே.
இந்த ஆசை உங்கள் கனவுகளை எல்லாம் தவிடுபொடியாக்கும் நாசகார ஆசை சொந்தங்களே. ஆகையால் நீங்கள் விழித்துக் கொள்ளுங்கள். விழிப்புணர்வு பெறுங்கள். உங்கள் வாக்குகளின் சக்தியைப் புரிந்து கொள்ளுங்கள்.
எனக்குப் பிரியமான சகோதர சகோதரிகளே, தேசத்தைக் காப்பாற்ற நீங்கள் முன்வாருங்கள். ரீல்களிலே, சமூக வலைத்தளங்களிலே விளையாட்டாக மக்கள் கூறுவதை, அவை பற்றி, இண்டிக் கூட்டணி, மிகவும் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறதாம்.
நீங்கள் கூறுங்கள் மக்களே, சரி ஓராண்டுக்கு ஒரு பிரதமர் என்ற ஃபார்முலா உங்களுக்கு சம்மதமா சொல்லுங்கள்?
ஐந்தாண்டுகளிலே ஐந்து பிரதமர்கள் என்பது உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? சரி தேசத்தை இப்படிப்பட்ட சூழ்நிலையில் நாம் விட்டுவிட முடியுமா? சரி உலகமே நம்மைப் பார்த்துக் கைகொட்டிச் சிரிக்குமா சிரிக்காதா?
சரி உலகத்திலே நாம் கஷ்டப்பட்டு சேர்த்திருக்கும் நற்பெயர், மண்ணோடு மண்ணாகிப் போய் விடாதா சொல்லுங்கள்? இதோ சந்திரயான் அனுப்பியிருக்கிறோம், அடுத்து ககன்யான் அனுப்ப இருக்கிறோம், அதை அனுப்ப முடியுமா?
பிரதமர் மோடியின் தேர்தல் உரைகள்
தமிழில் : ராமஸ்வாமி சுதர்ஸன்