விவசாயிகள் பயிர்க்கடன் குறித்து… திமுக., தேர்தல் அறிக்கையில் திருத்தம்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் தமிழகம்

’stalin press meet - 2026திமுக., நேற்று வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் ஒரு திருத்தம் செய்யப் பட்டுள்ளது.

திருவாரூர் திருக்காரவாசலில் விவசாயிகள் மத்தியில் பேசினார் ஸ்டாலின்! அப்போது அவர், வரும் தேர்தலில் (முஸ்லிம் லீக், கிறிஸ்துவ அமைப்புகளின் ஆதரவு பெற்ற) மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவளித்து வெற்றி பெறச் செய்தால், அனைத்து விவசாயிகளின் பயிர்க்கடனும் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தார்.

விவசாயிகள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் கோரிக்கையை ஏற்று இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதாக அவர் கூறினார்.

முன்னதாக சிறு, குறு விவசாயிகளின் பயிர்க் கடன் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப் பட்டிருந்தது. இந்நிலையில் அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் திருத்தம் செய்யப்பட்டு, அனைத்து விவசாயிகளின் பயிர்க்கடன்களும் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.