மோடிக்கு வாரிசு இல்லை… அதனால் பரம்பரை அரசியல் குறித்து பேசுகிறார்! சீண்டும் காங்கிரஸ்!

இந்தியா சற்றுமுன்
nehru gandhi family - 2026
காங்கிரஸின் பரம்பரை அரசியல்… நேரு, இந்திரா, ராஜிவ், சோனியா, ராகுல்

மோடிக்கு வாரிசு இல்லை… அதனால் பரம்பரை அரசியல் குறித்து பேசுகிறார்! சீண்டும் காங்கிரஸ்!

நரேந்திர மோடி பரம்பரை அரசியல் குடும்ப அரசியல் இவை குறித்து ஏன் அடிக்கடி பேசுகிறார் என்றால், அவருக்கு என்று பெரிய வம்சம் எதுவும் கிடையாது. அவருக்கு குழந்தைகள் இல்லை. தனது வம்சத்தை எதிர்காலத்தில் எடுத்துச் செல்ல வாய்ப்பு இல்லை என்பதால் அவர் ராகுலை பார்த்து இவ்வாறு கூறுகிறார் என்று கூறியுள்ளார் காங்கிரஸ் தலைவர் தாரிக் அன்வர்!

இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் தாரிக் அன்வர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பரம்பரை அரசியல் என்பதை நியாயப்படுத்தியதுடன் பிரதமர் நரேந்திர மோடி பரம்பரை அரசியல் குறித்து பேசியதற்கு பதில் அளித்துள்ளார்!


அப்போது அவர் பிரதமர் மோடிக்கு என்று தனியாக குடும்பம் இல்லை! அவருக்கு வாரிசு குழந்தைகள் என்று எதுவுமில்லை! தனது வம்சத்தை முன்னெடுத்துச் செல்ல வழியில்லை என்பதால், அவர் பரம்பரை அரசியல் குறித்து அவ்வளவு கோபமுடன் பேசுகிறார் என்று குறிப்பிட்டார்!

மேலும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு துறையில் தங்கள் வாரிசுகளை பயிற்சி செய்து வளப்படுத்த எண்ணம் இருக்கும்! அதுபோல் அரசியலிலும் இருப்பது தவறு இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்!

பிரதமர் நரேந்திர மோடி காங்கிரசின் பரம்பரை அரசியல் கலாச்சாரம் குறித்து தனது ட்விட்டர் பதிவில் கருத்து தெரிவித்திருந்தார்! அந்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் தாரிக் அன்வர் இத்தகைய வார்த்தைகளை மோடியின் மீது பயன்படுத்தி யிருக்கிறார்!

முன்னதாக நரேந்திர மோடி தனது ட்விட்டர் பதிவில் பரம்பரை அரசியலால் மிகப் பெரும் பாதிப்புக்கு உள்ளானது இன்ஸ்டிடூஷன்ஸ் நிறுவனங்கள் மற்றும், பத்திரிகைகளில் இருந்து பார்லிமென்ட் வரை… வீரர்களில் இருந்து பேச்சுரிமை வரை… அரசியல் அமைப்பில் இருந்து நீதிமன்றங்கள் வரை… என எதையும் விட்டுவைக்க வில்லை என்று பரம்பரை அரசியல் குறித்து ட்விட்டரில் பதிவு செய்து இருந்தார் பிரதமர் மோடி!


நரேந்திர மோடி வழக்கமாக காங்கிரஸ் கட்சியின் பரம்பரை அரசியல் குறித்தும் ஆதிக்கம் குறித்தும் அவ்வப்போது பேசி வருகிறார்!

தற்போதைய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மகன்… இந்திரா காந்தியின் பேரன்… ஜவகர்லால் நேருவின் கொள்ளுப் பேரன்! மேலும், இரு தலைமுறைகளாக சோனியா காந்தி கட்சியின் தலைவராக இருந்தவர்! அதையடுத்து ராகுல் தற்போது அந்த பதவியை பிடித்து இருக்கிறார் என்பது காங்கிரஸ் கட்சியின் வரலாறு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.