மீண்டும் பாஜக., ஆட்சிதான்! ஒடிசா, மேற்கு வங்கத்தில் பாஜக.,வுக்கு பெருகும் ஆதரவு!

இந்தியா சற்றுமுன்

modi in up kjissan - 2026

ஒடிசா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் பாஜக.,வுக்கு ஆதரவு பெருகியிருப்பதாக கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் 2-ஆம்தேதி முதல் 22 ஆம் தேதி வரை சுமார் 20 நாட்களுக்கு நாடு முழுவதும் நேஷனல் டிரஸ்ட் என்ற அமைப்பு ஒரு கருத்து கணிப்பு நடத்தியது.

இதில் சுமார் 31 ஆயிரம் பேர் பங்கேற்று தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர். அந்த முடிவுகளின் படி, பிரதமர் நரேந்திர மோடிக்கு நாடு முழுவதும் செல்வாக்கு அதிகரித்துள்ளது. மோடியே வலுவான, சிறந்த தலைவர் என்கின்றனர் பெரும்பாலானவர்கள்.

ஆந்திரா, தெலுங்கானா, தமிழகம், ஒடிசா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் தொடர்ந்து மாநில கட்சிகளுக்குத்தான் அதிக வரவேற்பு உள்ளது. இருப்பினும், இந்த மாநிலங்களில் ஒடிசா, மேற்கு வங்காளம் ஆகிய இரு மாநிலங்களில் மோடிக்கு செல்வாக்கு அதிகரித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.