மீண்டும் பாஜக., ஆட்சிதான்! மீண்டும் மோடிதான்! பெருகிய ஆதரவு!

Published:

modi wardha2 - 2026

மத்தியில் மீண்டும் பாஜக., ஆட்சிதான் என்றும், மோடியே மீண்டும் பிரதமர் ஆவார் என்றும் நாட்டின் பெரும்பான்மை மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் 2-ஆம்தேதி முதல் 22 ஆம் தேதி வரை சுமார் 20 நாட்களுக்கு நாடு முழுவதும் நேஷனல் டிரஸ்ட் என்ற அமைப்பு ஒரு கருத்து கணிப்பு நடத்தியது.

இதில் சுமார் 31 ஆயிரம் பேர் பங்கேற்று தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர். அந்த முடிவுகளின் படி, பிரதமர் நரேந்திர மோடிக்கு நாடு முழுவதும் செல்வாக்கு அதிகரித்துள்ளது. மோடியே வலுவான, சிறந்த தலைவர் என்கின்றனர் பெரும்பாலானவர்கள்.

பிரதமராக மோடியே வர வேண்டும் என்று 63.4 சதவீதம் பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர். அதே நேரம், கடந்த பிப்ரவரி மாதம் இதே அமைப்பு நடத்திய கருத்துக் கணிப்பில் மோடி பிரதமராக 52.8 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்திருந்தனர். பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்கள் மீது துல்லியத் தாக்குதல் நடத்தப் பட்ட பின்னர், மோடியின் செல்வாக்கு 10 சதவீதம் அதிகரித்து 63 சதவீதமாக உயர்ந்துள்ளது.

ALSO READ:  விநாயகர் சதுர்த்தி நேரத்தில் இடைத்தேர்தல்; மாற்றி அறிவிக்க இந்து முன்னணி கோரிக்கை!

Related articles

Recent articles

spot_img