விமர்சனம்: உறியடி 2 – URIYADI 2 – ஸ்டெர்லைட் நெடி …

uriyadi2 - 2026சாதாரண பின்புலத்திலிருந்து வந்து உறியடி மூலம் அனைவரையும் அட போட வைத்த விஜயகுமார் இப்போது தனது நடிப்பு , இயக்கத்தில் நடிகர் சூர்யா வுடன் இணைந்து தயாரித்திருக்கும் படம் உறியடி 2 . ஹீரோ , டைட்டில் , கொஞ்சம் சாதி அரசியல் தவிர இரண்டு படத்துக்கும் பெரிதான தொடர்பு இல்லை …

சொந்த ஊரிலேயே பூச்சிக் கொல்லி மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் தன் நண்பர்களுடன் கெமிக்கல் இன்ஜினியராக வேலைக்கு சேர்கிறார் லெனின் விஜய் ( விஜயகுமார் ) . சரியான பராமரிப்பு இல்ல்லாததால் அங்கிருந்து கசியும் விஷ வாயு நண்பன் , பெற்றோருடன் சேர்த்து கிராமத்தையே  காவு வாங்குகிறது . இதற்கு காரணமான தொழிலதிபர் , அவருக்கு உடந்தையாக இருக்கும் அரசியல்வாதிகளை ஹீரோ எப்படி பழி வாங்குகிறர் என்பதே உறியடி 2 …

வேலைக்கு போனாலும் கல்லூரி மாணவன் போலவே க்யூட்டாக இருக்கிறார் விஜயகுமார் . ஒரு பார்வையிலேயே  காதலை சொல்லிவிடுவது அருமை . நண்பன்  மெட்ராஸ் சென்ட்ரல்  சுதாகரும் , அரசியல் வாதிகளில் சின்ன சாதிக் கட்சி தலைவராக வருபவரும்  கவனிக்க வைக்கிறார்கள் . ஹீரோயினுக்கு இந்த படத்தில் டூயட்டோடு சேர்த்து பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவம் பார்க்கும் கூடுதல் வேலையையும் கொடுத்திருக்கிறார்கள் . கோவிந்த் வசந்தா வின் பின்னணி இசை சில சமயம் கோரஸாக இரைந்தாலும் பெரும்பாலும் படத்திற்கு பலம் கூட்டுகிறது . படத்தில் அனைவரையும் ரொம்ப இயல்பாக நடிக்க  வைத்த இயக்குனருக்கு பாராட்டுக்கள் …

ALSO READ:  ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

uriyadi2a - 2026கல்லூரி மாணவர்களின் நட்புக்கிடையே புகும் சாதி அரசியலை தெளிவாக , தைரியமாக உறியடியில் சொன்ன விஜயகுமார் இதில் தொழிற்சாலையின் விஷ வாயு வெளியேற்றத்தால் சமூகத்துக்கு ஏற்படும் பாதிப்பை கையிலெடுத்திருக்கிறார் . ஆளுங்கட்சி , எதிர்க்கட்சி எல்லோரும் பணத்துக்கும் , அதிகாரத்துக்கும் அடிமை என்பதை தெளிவாக சொல்கிறார் .
விஷவாயுவால் மக்கள் பாதிக்கப்படும் ஸீன்களை  மிக இயல்பாகவும் , நுட்பமாகவும் , டீட்லைல்டாக எடுத்திருப்பது ஹைலைட் …

போலீஸ் வாடா என கூப்பிடும் போது என்னடா என்று விஜய் கேட்பது , பிணத்தில் கூட தனது சாதிக்காரனா என அரசியல்வாதி பார்ப்பது  போன்ற சில ஸீன்கள் மட்டுமே ஜெர்க் . முதலில் ப்ராமிசிங்காக ஆரம்பிக்கும் படம் இடைவேளைக்கு பிறகு மக்கள் போராட்டம் , டிவி விவாதம் என ஸ்டர்லைட் நெடியோடு சுற்றி வருவது அயர்ச்சி . மாற்று அரசியல் , மக்கள் எழுச்சி எல்லாம் பேசி விட்டு க்ளைமேக்ஸில் பழிவாங்கலோடு படத்தை சப்பென்று முடித்து இதுக்கு  ஏன்யா இத்தனை நேரமா டேபிள் சேரல்லாம் உடைச்சீங்க என கேட்க வைக்கிறார்கள் . படம் முடிந்து வரும் போது உறியடியை மீண்டும் பார்க்க வேண்டுமென தோன்றுவது உறியடி 2 க்கு பெரிய மைனஸ் …

ALSO READ:  காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை... முக்கியத்துவம் என்ன?

டிஸ்கி : ஸ்டெர்லைட் மேட்டரை வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படத்தை தேர்தல் நேரத்தில் ரிலீஸ் செய்தால் சரியாக இருக்கும் என நினைத்திருப்பார்கள் போல ஆனால் படம் ஏப்ரல் 18 வரை ஓடுவது கடினமே …

ரேட்டிங்க்  : 2.75 */ 5 *  

ஸ்கோர் கார்ட் : 42

  • விமர்சனம்: அனந்து (வாங்க ப்ளாக்கலாம் அனந்து)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories