கோலியை பின்னுக்கு தள்ளி… ராகுலை முன்னிருத்தி… சோதனை முறைத் திட்டம்!

Published:

dhony kholi - 2026

இங்கிலாந்துடன் அடுத்து மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுகிறது இந்திய அணி. ஏற்கெனவே, இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் 2-1 என்ற கணக்கில் டி20 தொடரில் வென்று விட்டதால், ஒரு தெம்புடன் களத்தில் இறங்குகிறது இந்திய அணி.

டி20 தொடரில் கலக்கிய கே.எல்.ராகுல் இப்போது அணிக்கு பெரிய தலைவலியாகவே உருவெடுத்துள்ளார் எனலாம். காரணம், அவரை எந்த இடத்தில் களம் இறக்குவது என்பது இப்போதைய உச்ச பட்ச விவாதமாக இருக்கிறது. கே.எல்.ராகுலின் உச்ச பட்ச திறமையையும் பார்மையும் இப்போது சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அணியில் அனைவரும் விரும்புகின்றனர்.

இந்நிலையில் அணியின் துணை தலைவரான ரோஹித் சர்மா புதன்கிழமை அணியின் நிலை குறித்துக் கூறியபோது, நான் எந்த நிலையிலும் இறங்கத் தயார். அது 3, அல்லது 4 எதுவாக இருந்தாலும் சரி, அணியின் ஆலோசனைப் படி இறங்குவேன். ராகுலின் அபார பேட்டிங் கைகொடுக்க அவர் எந்த நிலையில் இறங்குவார் என்பது அணித்தலைவர் விராட் கோலி கையில் இருக்கிறது என்று கூறியுள்ளார்.

ALSO READ:  செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img