
மகள் சூரியன் அஸ்தமித்த பிறகு வீட்டுக்கு வந்ததால் திருமணம் செய்வித்த பெற்றோர்!
வயதோடு தொடர்பு இன்றி பெண்கள் யாராவது சூரியன் அஸ்தமித்த பிறகு மாலை நேரம் கழித்து வீட்டுக்கு வந்தால் அந்தப் பெண்ணுக்கு திருமணம் செய்து விடுவார்கள் பெற்றோர்கள். இது அவர்களின் சம்பிரதாயம். சிறு பெண்கள் ஆனாலும் பால்ய விவாகம் செய்வதற்கு ரெடி ஆகி விடுவார்கள்.
அவ்வாறு 12 வயது நூர் ஹெராவதி என்ற பெண் சூரியன் மறைந்த பிறகு வீட்டுக்குத் திரும்பி வந்தாள். அதுவரை எங்கு சென்று இருந்தாய் என்று பெற்றோர் கேட்டபோது அந்தப் பெண் சுஹைமி என்ற 15 வயது பையனின் வீட்டுக்கு சென்று வருகிறேன் என்று கூறினாள். அதனால் பெற்றோர் சிறுவர்கள் என்று கூட பாராமல் அவர்கள் இருவருக்கும் பால்ய விவாகம் செய்து வைத்தார்கள்.
இந்த சம்பிரதாயம் எங்கு நடக்கிறது என்று கேட்கிறீர்களா? இந்தோனேஷியாவில்.
இந்தப் பழக்கம் குறித்து அரசாங்கம் பலவித தடைகளை விதித்து இருந்தபோதிலும் பெரியவர்கள் அதை கண்டுகொள்வதில்லை. இது தொடர்பான வீடியோ சோஷல் மீடியாவில் வைரலாகி வருவதால் இது குறித்து பெரிய அளவில் சர்ச்சைகள் நடந்து வருகின்றன.
ஆனால், இந்தோனேஷியா ரிலீஜியஸ் அஃபைர்ஸ் ஆபீஸ் (கேயூஏ) இந்த திருமணத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கவில்லை.
அந்த வீடியோ இதோ…