
விரைவில் கொரோனா வேக்சின் கோவாக்ஜின் அனைவருக்கும் கிடைக்கும்… என்றார் தெலங்காணா ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன்.
கொரோனா வைரஸை எதிர்ப்பதற்கு பார்மா ஜாம்பவான்கள் பாரத் பயோடெக் தயார் செய்து வரும் கோவாக்ஜின் விரைவில் பொதுமக்கள் உபயோகத்திற்கு வரும் என்று தெலங்காணா கவர்னர் தமிழிசை நம்பிக்கை தெரிவித்தார்.
ஹைதராபாத் சாமீர்பேட்டில் உள்ள பாரத் பயோடெக்கை செவ்வாயன்று சென்று பார்த்த கவர்னர் வேக்சின் தயாரிப்பதில் முனைந்துள்ள விஞ்ஞானிகளுடன் உரையாடினார்.
கொரோனா வாக்சின் குறித்து விஞ்ஞானிகள் மிகவும் பொறுப்புடன் பணியாற்றி வருகிறார்கள் என்றார். பிரதமர் நரேந்திர மோடி கூறியபடி நம் நாட்டில் கொரோனாவுக்கு வாக்சின் தயாரிக்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன என்று குறிப்பிட்டார்.
2020 க்குள்ளாகவே கொரோனாவுக்கு வாக்சின் கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது என்று தெளிவாகக் கூறினார். வாக்சின் தயாரிப்பில் ஓய்வின்றி உழைக்கும் விஞ்ஞானிகளுக்கு நன்றி தெரிவிப்பதற்காக வந்ததாக கவர்னர் கூறினார்.