மின்கட்டணம் எகிறுது… தெலங்காணா சட்டசபையில் புயல்!

Published:

kcr - 2026
  • தெலங்காணாவில் மின்சாரத்தோடு கூட மின்சார கட்டணமும் அதிகரிப்பு.
  • அதில் ஏதாவது தவறு நேர்ந்தால் இருபத்தைந்து மடங்கு அபராதம்… கேசிஆர் அறிவிப்பு.

தெலங்காணா மாநிலத்தில் கிராமங்கள் மற்றும் முனிசிபாலிட்டிகளில் சொத்துவரி அதிகரிக்க வேண்டிய தேவை இருப்பதாக முதலமைச்சர் தெரிவித்தார். பஞ்சாயத்துகளும் முனிசிபாலிட்டிகளும் மேலும் முன்னேற்றம் அடைய வேண்டி உள்ளதால் இந்த வரி அதிகரிப்பு தவிர வேறு வழியில்லை என்று தீர்மானமாக கூறிவிட்டார்.

சட்டசபையில் வெள்ளிக்கிழமையன்று கிராம முன்னேற்றம் குறித்த சர்ச்சை நிகழ்ந்தது. அப்போது முதலமைச்சர் கேசிஆர் உரையாற்றினார்.

எது எப்படியானாலும் புதிதாக எடுத்து வந்துள்ள பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை எந்த சூழ்நிலையிலும் அமல்படுத்தி தீருவோம் என்று மீண்டும் தீர்மானமாக தெரிவித்தார். மக்கள் பிரதிநிதிகளுக்கு விதிகள், பொறுப்புகளை தெளிவாக கூறி இந்த சட்டம் எடுத்து வந்ததாக தெரிவித்தார்.

ஒருவேளை இதில் தாமதத்தை காண்பித்தால் மக்கள் பிரதிநிதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார். அரசாட்சியில் மக்களும் ஒரு பாகம்தான் என்று ஸ்டாண்டிங் கமிட்டிகள் ஏற்பாடு செய்ததாக கூறினார். புதிய பஞ்சாயத்துராஜ் சட்டத்தின் மூலம் பலவித திருத்தங்களும் எடுத்து வந்ததாக தெரிவித்தார்.

eb - 2026

2020- 21 ஆண்டில் 23 கோடிக்கும் மேலாக செடிகளை நட்டதாகக் கூறினார்.

ALSO READ:  வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

கிராம அபிவிருத்தியின் நடைமுறைக்கு சீனியர் அதிகாரிகளை நியமித்து இருப்பதாக தெரிவித்தார். 45 பேர் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாரிகளோடு கமிட்டி ஏற்பாடு செய்ததாகவும் முதல்வர் தெரிவித்தார். கிராம பஞ்சாயத்துகளுக்கு ஒவ்வொரு மாதமும் கட்டாயமாக நிதி அனுப்புவோம். தேவையானால் எம்எல்ஏக்களின் சம்பளத்தை நிறுத்தியாவது கிராம பஞ்சாயத்துகளுக்கு நிதிகளை அனுப்புவோம். மாநிலத்தில் 500 மக்கள்தொகை இருக்கும் கிராம பஞ்சாயத்துகள் சுமார் 20 வரை உள்ளன. இவற்றிலும் ஐந்து ஆண்டுகளில் ரூபாய் 40 லட்சம் வரும்.

கிராம முன்னேற்றத்திற்காக பலர் நன்கொடை அளித்து வருகிறார்கள். வாரங்கல் ரூரல் மாவட்டத்தில் தம்மன்னபேட்ட என்ற கிராமத்தைச் சேர்ந்த காமிடி நரசிம்ம ரெட்டி 25 கோடி ரூபாய் நன்கொடை அளித்தார். கடமையில் அலட்சியம் காட்டினால் சர் பஞ்சுகளை பதவியிலிருந்து நீக்கி விடுவோம்.

வெற்றி பெற்ற ஒவ்வொருவரும் பொறுப்போடு கூட கடமையாற்ற வேண்டும் என்று கேசிஆர் எச்சரித்தார்.
மின்சாரம் அனுப்பும் நிறுவனங்கள் உயிரோடு இருக்க வேண்டுமானால் கட்டணத்தை அதிகரிப்பதை தவிர வேறு வழி இல்லை. அதேசமயம் ஏழைகளுக்கு பாரமில்லாமல் மின்சார கட்டணங்களை அதிகரிப்போம். 24 மணிநேரம் தடையில்லாமல் கரெண்ட் அளிக்கும்போது கட்டணத்தை பெருக்குவதைத் தவிர வேறு வழி இல்லை.

ALSO READ:  காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை... முக்கியத்துவம் என்ன?

வரி செலுத்தும் சாமர்த்தியம் உள்ளவர்களுக்கே வரிவிதிப்பை அதிகரிக்க போகிறோம். லே அவுட்கள் அனுமதியில் கலெக்டர்களுக்கு தவிர வேறு எவருக்கும் அதிகாரம் இல்லை. வீட்டு அளவுகளை அந்தந்த வீட்டுக்காரரே தருவார். அதன்படியே வரிவிதிப்பு இருக்கும். ஒருவேளை இதில் அக்கிரமங்கள் நடந்தால் 25 மடங்கு அதிக அபராதம் விதிப்போம். ரூ ஒரு லட்சம் அக்கிரமம் நடந்தால் ரூ25 லட்சம் அபராதம் இருக்கும். செடிகளை வளர்க்கும் பொறுப்பு கூட மக்கள் பிரதிநிதிகளுடையதே.

ஓட்டுக்காக அச்சம் கொள்ளும் நிலைமை எங்களுக்கு கிடையாது. மக்களுக்கு எங்கள் மேல் நம்பிக்கை ஏற்படும் விதமாக நாங்கள் அரசாட்சி செய்கிறோம். இந்திய நாட்டில் தெலங்காணாவை முக்கிய இடத்தில் வைக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.

மாநிலத்தில் 8 ஆயிரத்து 690 கிராம பஞ்சாயத்துகள் இருக்கையில் அவற்றின் எண்ணிக்கையை 12,751ஆக அதிகரிக்க போகிறோம் . அதில் மக்களே ஆட்சி செய்வார்கள். அவர்களே ஆட்சியாளர்களாக இருக்கிறார்கள். கிராம முன்னேற்றத்தின் மூலம் கிராமங்களின் உருவத்தையே மாற்றப் போகிறோம்.

ஒவ்வொரு கிராமத்திலும் “வைகுண்ட தாமங்கள்” கட்டி முடிக்கப் போகிறோம். 100% “வைகுண்ட தாமங்கள்” (சுடுகாடு) உள்ள மாநிலமாக தெலங்காணாவை மாற்றப் போகிறோம். பொறுப்புகளிலோ கடமைகளிலோ அலட்சியமாக நடந்து கொண்டால் அப்படிப்பட்ட அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் மீது நடவடிக்கை எடுப்போம். கிராமங்கள் அனைத்தும் பசுமையாக இருக்கும்படியாக செடிகளை நடும் நிகழ்ச்சிகளை நடத்துவோம் என்று முதல்வர் தெரிவித்தார்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் கோலாகலம்!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img