மோடியின் பாணியில்… சௌக்கிதார் ரஜினி! நானும் ‘காவல்காரன்’ ஆகிவிட்டார்!

Published:

chowkidarrajini - 2026

தேர்தல் களைகட்டியுள்ள இந்நாளில் இப்போதைய பரபரப்பான வார்த்தை சௌக்கிதார் என்பதுதான்! முந்தைய 2014 தேர்தலில் மோடிக்கு ‘சாய்வாலா’ டீக்கடைக்காரன் என்ற பட்டத்தைக் கொடுத்தது காங்கிரஸ்.

எச்சி க்ளாஸ் கழுவுற டீக்கடைக்காரன் என்று மிக உயர்ந்த பட்டத்தை கொடுத்தார் சசிதரூர் அந்நாளில். அது போல் இப்போதும், கக்கூஸை காவல் காக்குற சௌக்கிதார் என்று புது பட்டத்தை கொடுத்திருக்கிறார்கள் காங்கிரஸார். ஆனால் முந்தைய சாய்வாலா பட்டம் போல், இப்போதும் சௌக்கிதார் என்ற சொல்லை விளம்பரப்படுத்திவிட்டார் மோடி.

இப்போது பலருக்கும் சௌக்கிதார் வார்த்தை ஆட்டிப் படைக்கிறது. சமூக வலைத்தளங்களில் சௌக்கிதார் என்ற பேரைப் போட்டு, தங்கள் பேரை வெளியிட்டு வருகின்றனர்.

chowkidar modi - 2026

இந்த ட்ரெண்டை விட்டுவிட மனசின்றி, ரஜினியும் இப்போது ஒரு சௌக்கிதார் ஆகியிருக்கிறார். ஆனால் இது கொஞ்சம் வித்தியாசமான சௌக்கிதார்!

‘பேட்ட’ படத்துக்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார். ஜோடியாக நயன்தாரா! இதன் படப் பிடிப்பு வரும் 10-ஆம் தேதி மும்பையில் தொடங்குகிறது. முதல்நாளில் வில்லன்களுடன் ரஜினிகாந்த் மோதுவது போன்ற அதிரடி சண்டை காட்சியை படமாக்குகின்றனர்.

ALSO READ:  திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

இதற்காக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. மூன்று மாதங்கள் தொடர்ந்து மும்பையில் படப்பிடிப்பு. நடுவே ஓட்டு போட 18ஆம் தேதி சென்னை வந்துவிட்டு உடனே திரும்பிவிடுகிறார் ரஜினி.

இந்தப் படத்துக்காக, படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கு அவர்கள் கதாபாத்திரங்களுக்கு ஏற்ற வகையில், சென்னையிலுள்ள ஸ்டூடியோ ஒன்றில், போட்டோ ஷூட் நடத்தப்பட்டது. ரஜினிகாந்துக்கு போலீஸ் உடை அணிவித்து புகைப்படம் எடுத்துள்ளனர்.

சௌக்கிதார் கோஷம் விண்ணை முட்டும் இந்நேரம், காவல்காரர் ரஜினி தோற்றம் வெளியாகி ரகசியம் கசிந்து விடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தனர். படப்ப்பிடிப்புக் குழுவினர். ஆனால், தொலைதூரப் பார்வையாளர் யாரோ, ரஜினியின் போலீஸ் அதிகாரி வேடத்தை செல்போனில் படம் பிடித்து இணையதளத்தில் கசியவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் நடுத்தர வயதில், ரஜினிகாந்த் போலீஸ் உடையில் இருக்கிறார்.

சமூக வலைத்தளத்தில் இந்தப் படம் வைரலாகி வருகிறது. இதனால் ரகசியம் காக்க இயலாத படக்குழுவினர் தற்போது அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

Related articles

Recent articles

spot_img