லயோலா லட்சணம் இதாம்லே..! கல்லூரி நிர்வாகம் ஏன் அலறுறான்னு தெரியும்ல…?!

Published:

loyola college poll - 2026

நேற்று ஊடகங்களில் பெரும் பரபரப்பை கிளப்பிய விஷயமாக லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் எடுத்த கருத்துக் கணிப்பு அமைந்தது

அதேபோல் இந்த கருத்துக் கணிப்புக்கு எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை எங்கள் கல்லூரியின் துறை எந்தவகையிலும் இதில் ஈடுபடவில்லை. எந்த துறைகளுக்கும் இதில் தொடர்பு இல்லை என்று அவசரம் அவசரமாக லயோலா கல்லூரி நிர்வாகத்தில் இருந்து ஒரு மறுப்பு அறிக்கையும் வெளியானது.

உண்மையில் லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் என்ற பெயரில் இந்தக் கருத்துக் கணிப்பை நடத்தி வெளியிட்டவர்கள் திமுகவின் it wing பிரிவை சேர்ந்தவர்கள் என்று கூறப்பட்டது.

லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் கருத்துக் கணிப்பு எடுத்ததாக வெளியான தகவலில் திமுக அதிக இடங்களை பிடிக்கும் என கூறப்பட்டிருந்தது.

இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன திமுகவுக்கு சாதகமாக ஒரு கருத்துக் கணிப்பை வெளியிடுவதற்காக லயோலா கல்லூரியின் பெயரை பயன்படுத்தி கொண்டு வருகிறார்கள் என்ற விமர்சனமும் எழுந்தது

ALSO READ:  இருக்கன்குடி மாரியம்மன் கோவில் ஆடி மாத திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

கடந்த கால கருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாகவே வெளியிடப்பட்டன ஆனால் அவை பொதுமக்களின் கணிப்புகளுடன் அல்லது கருத்துக்களுடன் ஒத்துப் போனதேயில்லை. 2011 லிருந்து “புலனாய்வு புலி” லயோலா கருத்துக்கணிப்புகள் வருமாறு:

“திமுக கூட்டணி” வெற்றி வாய்ப்பு உண்மை நிலவரம்:
1..லயோலா 128+/234 (2011)..மக்கள் தீர்ப்பு 18/234.
2..லயோலா 25+/39. (2014)…மக்கள் தீர்ப்பு 0/39.
3..லயோலா 160+/234. (2016)..மக்கள் 89/234.
4..லயோலா (ஆர் கே நகர்).20000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.மக்கள்: டெபாஸிட் காலி..

இப்படி சமூகவலை தளங்களில் தகவல்கள் வைரலாக பரவுகின்றன..

Related articles

Recent articles

spot_img