ஏப்ரல் 23, 2021, 8:37 காலை வெள்ளிக்கிழமை
More

  இந்தியுள்ள இந்தியனும்; இந்தியற்ற இந்தியனும்!

  எதையும் மக்கள் நம்பும் வகையில் கனிமொழி பேச வேண்டும்!

  kanimozhi-tweet1
  kanimozhi-tweet1

  கனிமொழிக்கு ஹிந்தி தெரியாது… ஹிந்தி தெரியாத நீ எல்லாம் ஒரு இந்தியனா என்று விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் கேட்டதாகவும், ஹிந்தி தெரியாவிட்டால் நான் இந்தியன் இல்லையா என்று டிவிட்டரில் டிவீட் செய்து வழக்கமாக மொழி அரசியல் செய்து உள்ளார்…

  வேடிக்கை என்னவென்றால்… ஹிந்தி தெரியாத லட்சக்கணக்கான தமிழர்கள் விமானத்தில் பயணம் செய்து வருகின்றனர்… அவர்களில் யாரும் கனிமொழி சொன்னது போல இதுவரை சொன்னது இல்லை…

  2G ஊழலில் 200 கோடி ரூபாய் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்ட கனிமொழி பேசிய நபர்கள் எல்லாமே ஹிந்திவாலா ஷாகித் பல்வா, கரீம் மொரானி, வினோத் கோயங்கா… ஆனால் கனிமொழிக்கு ஹிந்தி தெரியாது…..

  2009 மே மாதம் நீரா ராடியா உடன் கனிமொழி பேசிய ஒலி நாடாவில்,… தான் மாலியில் இருப்பதாகவும் பாகிஸ்தான் பிரபல பாடகர் பதே அலிகான் பாடல்கள் சிடி வாங்கியதாக தெரிவித்துள்ளார்… ஆனால் கனிமொழிக்கு ஹிந்தி தெரியாது…

  உயர் நீதிமன்றத்தில் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் தங்களது வழக்கறிஞர்கள் எல்லாம் ஹிந்தி பேசும் கபில் சிபல், அபிஷேக் சிங்வி, ராம் ஜெத்மலானி போன்றவர்கள் தான்…

  டெல்லி உயர் நீதிமன்றத்தில் 2G வழக்கு மேல்முறையீடு வாதாட கனிமொழிக்கு தமிழக வழக்கறிஞர்களா அல்லது ஹிந்தி தெரிந்த வழக்கறிஞர்களா?…

  தமிழ் தமிழ் என்று மூச்சு விடும், கனிமொழியின் மகன் பெயர் ஆதித்யா என்பது தமிழ் பெயரா அல்லது சமஸ்கிருத திணிப்பு பெயரா?…

  கனிமொழியின் தந்தை கருணாநிதி என்பது தமிழ் பெயரா அல்லது சமஸ்கிருத திணிப்பு பெயரா? கருணாநிதியின் அசல் பெயர் தட்சிணாமூர்த்தி தமிழ் பெயரா அல்லது சமஸ்கிருத திணிப்பு பெயரா?…

  ஸ்டாலின் மகள் நடத்தும் வேளச்சேரி ஷன் ஷைன் பள்ளியில் ஹிந்தி மற்றும் சமஸ்கிருதம் கற்று தருவது உங்களுக்கு மட்டும் மும்மொழிக் கொள்கை… அரசியலுக்கு இரு மொழி கொள்கையா?

  2G ஊழல் வழக்கில் சிக்கி திகார் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வரும் வரை கனிமொழிக்கு திகார் சிறையில் ஹிந்தி மொழியால் எந்த ஒரு பிரச்சினையும் வரவில்லை…

  திகார் சிறையில் உள்ள காவலர்கள் மற்றும் சிறை அதிகாரிகளிடம் கனிமொழி எந்த மொழியில் பேசினார் என்று இதுவரை சொல்லவில்லை…

  எந்த ஒரு எம்பியை பார்த்து விமான நிலையத்தில் உள்ள காவலர்கள் கேள்வி கேட்கும் அளவுக்கு துணிவு இல்லாதவர்கள்… கனிமொழி போன்றவர்கள் எல்லாம் விஐபி என்ற அந்தஸ்தை வைத்து விமான நிலையம் செல்கையில் யார் வந்து இப்படி எல்லாம் கேள்வி கேட்க முடியாது…

  எதையும் மக்கள் நம்பும் வகையில் கனிமொழி பேச வேண்டும்!

  • உஷா சங்கர் ( Usha Sankar)

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,233FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,121FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-