May 12, 2021, 4:00 am Wednesday
More

  கோயில்களை அரசின் பிடியில் இருந்து விடுவிக்க வேண்டும்!

  [கோவில் என்றாலே அது இந்து வழிபாட்டு தளங்களை மட்டுமே குறிக்கும் சொல். அதனால்..இந்து கோவில்கள் என்று குறிப்பிட

  jaggi - 1

  தமிழக கோவில்கள் [கோவில் என்றாலே அது இந்து வழிபாட்டு தளங்களை மட்டுமே குறிக்கும் சொல். அதனால்..இந்து கோவில்கள் என்று குறிப்பிட வேண்டிய நிர்பந்தம் இல்லை. ]

  அதே போல…இந்து எனும்போது…அதில்…அனைத்து பெருந்தெய்வ, சிறுதெய்வ, பவுத்த, சமண, நாட்டார், மூத்தோர்,முன்னோர், நடுகல் தெய்வங்களும், வழிபாட்டு தளங்களும் அடக்கம்.
  ஜக்கி எழுப்பி இருக்கும் ..அரசிடமிருந்து கோவில்களை மீட்கும் குரலானது…பல 10 வருடங்களாக …இங்கு எழுப்பப் பட்டுக் கொண்டிருக்கும் குரல். அதற்கு வலு கொடுத்திருக்கிறார் ஜக்கி. அந்த அளவில்…இது பாராட்டுதலுக்குரியது. இந்து மக்களின் ஒத்துழைப்புக்கு உரியது.
  நிற்க.

  தமிழகத்தில் கடந்த 60 வருடங்களாக திணிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இந்துவெறுப்பும், இந்து எதிர்ப்பு பகுத்தறிவும்..ஏற்படுத்தி இருக்கும் விளைவு என்ன ? என்பதே முதலில் கவனிக்க வேண்டியது .

  ஆகப்பெரும் தொன்ம வரலாறும், பெருமைகளும் வாய்ந்த தமிழர்களை மட்டும் குறிப்பாக..அவர்களின் பெருமைகளில் இருந்து பிரித்து…தம் பெருமை அறியாத சுயமற்றவர்களாக மாற்றி இருக்கிறது. இத்தகைய விளைவு ஏற்படுத்தி இருக்கும் கேடுகளையும் நாம் பார்க்கத்தான் செய்கிறோம். இதுவே…தமிழை தாய் மொழியாக கொண்ட தமிழர்கள் எதிகொள்ளும் அபாயத்தை குறிக்கும் எச்சரிக்கை மணி.!

  60 வருட இந்துவெறுப்பு திராவிட நாத்திக அரசியலுக்கு மீண்டும் மீண்டும் தமிழர்கள் வாய்ப்பளித்தது அரசியல் உண்மை. அதன் விளைவாக… ”தமிழை தாய் மொழியாக கொண்ட தமிழர்கள் மட்டும்” தங்கள் தொன்மத்திலிருந்தும், பெருமைகளில் இருந்தும், வரலாறுகளில் இருந்தும் அந்நியப்படுத்தப்பட்டு…தம் வேரின் பெருமை அறியாத திரளாக மாற்றப்பட்டிருப்பதும் கள எதார்த்தம் காட்டும் உண்மை.

  தொன்ம குடியான தமிழர்களை அவர்களின் பெருமை மிகு வேர்களில் இருந்து அந்நியப்படுத்துவது …பிற வாக்கு வங்கி அரசியல் / மத மாற்ற நோக்கங்களுக்கு எளிதாக இருக்கிறது என்பதும் களம் காட்டும் வருத்தமான உண்மை.

  இந்து ஆலய மீட்பு குறித்து பேசும் ஜக்கிக்கு.. எதிர்ப்பு தெரிவிக்கும் டேவிட்களின் குரல்கள்…மேற்கூறிய கள நிலவரத்தை மேலும் உறுதி செய்கின்றன.
  களம் காட்டும் இத்தகைய விளைவுகள் எனும் உண்மைகளில் இருந்தே…அரசிடம் இருந்து ஆலயங்கள் மீட்கப்படவேண்டும் என்கிற குரல்களும், அதற்கான ஆதரவும் எழுகிறது.

  இவ்விவகாரத்தில் என்னுடைய தனிப்பட்ட நிலைப்பாடு என்ன?

  1.தமிழக கோவில்களை… அரசின் அறநிலையத்துறை நிர்வகிக்க கூடாது.

  மாறாக….தனியாக வாரியம் ஏற்படுத்தி…அதன் கீழ் கோவில்கள் அனைத்தும் கொண்டுவரப்பட்டு…நிர்வாகம் செய்யப்படவேண்டும்.

  கோவில்களின் பராமரிப்பு செலவு போக..மீதமுள்ள நிதியில்…”சமய பற்றுள்ள இந்துக்களுக்கு”…கல்வி உதவியும், மருத்துவ உதவியும், குக்கிராமங்கள் முதல் பெரு நகரங்கள் வரை அளிக்கப்பட வேண்டும்.

  தமிழ் மொழியின் தொன்ம இலக்கியங்கள் இந்து சமய பக்தியினை பேசிப் பேசியே பெருமையுற்றது. தேவாரம், திருவாசகம்,திருப்பாவை, திருவெம்பாவை, திவ்ய பிரபந்தம், போன்றவை பெரும்பான்மை மக்களுக்கு பெயரளவிலாவது பரிச்சயமானவை.ஆனால்…இவை தவிர ஏராளமான பண்டைய தமிழ் நூல்கள் உள்ளன. அவை…இந்து சமய பற்றை பேசுபவை. இந்து தெய்வங்களை போற்றுபவை என்பதனாலேயே…கற்றுக் கொடுக்கப்படாமல், வெளிச்சமின்றி இருளில் உள்ளன. இவற்றை.. அவை பேசும் பக்திக்காக.. …வார இறுதி நாட்களில் …கோவில்களின் கலாமண்டபத்தில்….ஆன்மீக வகுப்புகள், சமய சொற்பொழிவுகள் மூலம் இந்துக்களுக்கு கற்றுக் கொடுக்கலாம்.

  வேரும் , மூலமும் அறியாது… அலையின் போக்கில் மிதக்கும் வேர் பிடுங்கப்பட்ட செடியாக இருக்கும் தமிழக இந்துக்களுக்கும், ஊழல்வாதிகளிடம் சிக்காமல் தப்பிக்க கோவில்களுக்கும்… இதுவே வழி !…என்பது என் பார்வை/ நிலை.

  ஏறக்குறைய …சீக்கிய குருத்வாராக்களின் நிர்வாகத்தை ஒட்டிய பார்வை இது. ஆனால்…குருத்துவாரா நிர்வாகத்தில் இருக்கும் குறைகளை நீக்கிய ஒரு மேம்பட்ட முறையினை….இங்கு ..வாரிய நிர்வாகத்தின் கீழ் அமல்படுத்தலாம்.

  இவை அனைத்தும் நடப்பதற்கு ….இந்து சமய பற்றுள்ள மக்கள் …வேற்றுமைகள், சாதி பிரிவினைகள் இன்றி ஒண்றிணைய வேண்டும்.

  அவ்வாறு ஒன்றிணைய…வாக்குவங்கி அரசியல் விடாது !

  அதனை புரிந்து கொண்டு ஒற்றுமையாக இருந்தால் …கோவில்களின் நிர்வாகமும், தொன்மமும், ‘தமிழை தாய் மொழியாகக் கொண்ட பெருமை மிகு தமிழர்களின்’ வேரும் காக்கப்படும்.

  • பானு கோம்ஸ்

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,241FansLike
  0FollowersFollow
  19FollowersFollow
  74FollowersFollow
  1,182FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »