May 12, 2021, 5:19 am Wednesday
More

  சர்ச்களின் குரலை ஒலிக்கும் மணியரசன்கள்! தெய்வத் தமிழ் பற்றிப் பேச என்ன தகுதி இருக்கிறது?!

  இன்று என் பொறுப்பில், இந்த ஜனநாயக நாட்டில், எனக்குள்ள பேச்சுரிமை வட்டத்திற்குள் நான் என் வரை எதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்

  maniarasan group - 1

  சர்ச்களின் குரல் என்பதை விட தேச விரோத சக்திகளின் குரலாக ஒலிக்கும் பெ.மணியரசன் போன்றவர்கள் ….. குரல்வளை நெறிக்கப் பட வேண்டும்..

  கோவில்களிலிருந்து பாரம்பரியமாக பூஜை செய்யும் குருக்களை அகற்றி விடலாமா?

  கோவில் matter இனி சர்வ நாசம் தான். இதுவரை சிலை திருட்டு, நகை திருட்டு, உண்டியல் களவாடல், கோவில் நிலங்கள் அபஹரித்தல் என்று தான் இருந்தது. இனி கோவில்கள் எல்லாம் ஒரு பொம்மைக்கொலு அளவிற்கு வந்து விடப்போகிறது.

  எனக்கு மிகவும் தெரிந்த, practically spiritual இளைஞர்களும் தவறை தவறு என்று அறியாத நிலையில் அதள பாதாளத்தில் இருக்கிறார்கள் என்றால், நன்கு படித்த நல்ல சிறப்பான வேலை பார்த்து குடும்பத்தைக்காக்கும் middle aged உம் சகதியில் வீழ்ந்து விட்டார்கள் என்றால், அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிலர், உண்மையை உரக்கக் கூறினாலும், என்ன பயன்.

  திருமாவளவன், கோவில்களை இடிப்பதற்கு அறை கூவல் விடுவதற்கும், இந்த விதமான துஷ்ட சக்திகளுக்கு ஜால்ரா போடுவதற்கும் எந்த வித வித்தியாசத்தையும் நான் காணவில்லை.

  தமிழ் நாட்டில் உள்ள பழம்பெரும் கோவில்கள் எதுவுமே, இன்று நேற்று கட்டியவை அல்ல. குறைந்த பக்ஷம் 1000 வருடங்கள், கூடின பக்ஷம் 3000 வருடங்கள் பழமையானவை. அந்த கோவில்களில் பூஜைகள் யாவும் இப்படித்தான் செய்யவேண்டும்; இன்ன பாரம்பரியம் உள்ளவர்கள் தான் பூஜை செய்ய வேண்டும் என்று ஆன்றோர் வரையறுத்துள்ளனர்.

  பல ஆகம விதிகள் பரம்பொருளே, சிவ பெருமானே வகுத்து கூறியுள்ளார்.

  கோவில்களை கட்டிய மன்னர்கள், கோவில் பராமரிப்பிற்கு, நிரந்தர தன வரவையும் ஏற்படுத்தியுளளனர். கோவிலில் நாதசுவரம், தவில் வாசிப்பவர்களும், கோவில் அர்ச்சகர்களும், கோவில் நிர்வாகம் என்ற கண்ணோட்டத்தில் சம்மானவர்களே.
  ஏற்கனவே, நாதசுவரம் வாசிப்பவர்களை பெருமளவு அகற்றி, electric மேளத்தை புகுத்தியாயிற்று.

  தற்போது, கோவில் குருக்கள், பட்டாச்சாரியர் எல்லோரையும் வீட்டுக்கு அனுப்பி விட்டு, கோவில் ஆகமங்களைப்பற்றிய zero knowledge, zero discipline உள்ளவர்களை உள்ளே புகுத்தி, கோவில்களை,வெறும் business centre ஆக்கி விடபபோகிறார்கள்.
  கோவில் குருக்களை பட்டினி போட காரணமாயிருப்பவர்களுக்கு ஒத்துழைப்பவர்களுக்கும் பகவத் கடாக்ஷம் கிட்டாமல் போக்க்கூடும்.

  கோவில் குருக்கள் மாரை வீட்டுக்கு அனுப்புவதும், கோவில்களை இஸ்லாமிய படையெடுப்பில் நிற்மூலமாக்கியதற்கும் என்ன வித்தியாசம்.

  பாகவதர் இல்லையேல் பகவான் இல்லை. நான் ஒரு spiritual நிறுவனத்தில் பார்த்துள்ளேன்: அங்கு, பெண்கள் தீட்டாக இருக்கும் போதும், கால பைரவர் சிலையை கட்டித்தழுவ முடியும். அந்த இடங்கள் கோவில் ஆகம விதிகளுக்கு உட்பட்டவை அல்ல.

  மேல் மருவத்தூர் கோவிலில் கர்ப்பக்ருஹத்தில் யார் வேணுமானாலும் போய் பூஜை, ஆரத்தி யாவும் செய்யலாம்.
  அந்த இடமும், கோவில் ஆகம விதிகளுக்கு உட்பட்டது அல்ல.
  மேலும், ஏதோ ஒரு சிலையை நிறுவி, சிவனுக்குச் செய்யப் பட வேண்டிய எந்த நித்ய பூஜையும் செய்யாமல், நித்திய பட்டினி போட்டு, இது தான் சிவன் என்றால் அது சிவன் ஆகாது; எக்காரணங்கொண்டும் ஆகாது.

  நமது கோவில்களின் சக்தி என்பது கோவிலுக்குக் கோவில் மாறுபடும். சில சிவன் கோவில்களில் நந்தி இருக்கமாட்டார். ஆனால் அங்குள்ள பலிபீடத்துக்கு ச்செய்கிற பூஜை வித்தியாசமாக இருக்கும்.

  மேற்கே பார்த்த சிவனுக்கு ஒரு வித சக்தி என்றால், தெற்கே பார்த்த சிவன் கோவிலில் ஒரு வித பரிஹார பூஜைகள் பலிதமாகும்.

  இப்படியாக, கோவில்கள், அவற்றின் அமைப்பு, அங்கே உள்ளது இல்லாதது என்று பல வித சக்திகளை உள்ளடக்கியதே நமது கோவில்கள்.

  கோவில் குருக்கள் மார், அந்த ஏழை குருக்கள் மார் தான் கண்ணை உறுத்துகிறதா?

  தெய்வம் உடனுக்குடனே எந்த தண்டனையையும், எவருக்கும் கொடுப்பதில்லை. ஆனால், தெய்வம் நின்று கொல்லும்.
  உடனுக்குடனே தண்டனை மட்டும் கடவுள் கொடுத்திருந்தால், கட்ட பொம்மன் கொலைக்கும், மருது சஹோதர்ர்களின் கொலைக்கும், வீர சாவர்க்கர் அனுபவித்த கொடுமைக்கும்,வ உ சிக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கும் என்றோ, நியாயம் கிடைத்திருக்குமே.

  ஆகவே இன்று என் பொறுப்பில், இந்த ஜனநாயக நாட்டில், எனக்குள்ள பேச்சுரிமை வட்டத்திற்குள் நான் என் வரை எதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று அறிந்திருத்தல் அவசியம்.

  • எம். சந்திரன்

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,241FansLike
  0FollowersFollow
  19FollowersFollow
  74FollowersFollow
  1,183FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »