spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉரத்த சிந்தனைராகுலின் ரஃபேல் ஊழல் குற்றச்சாட்டு! ‘இதை’ செய்வாரா மோதி..?!

ராகுலின் ரஃபேல் ஊழல் குற்றச்சாட்டு! ‘இதை’ செய்வாரா மோதி..?!

- Advertisement -
rafale deal modi rahul
rafale deal modi rahul

மோதி அரசை நோக்கி காங்கிரஸ் தன் கைத்தடியைக் கொண்டு ரஃபால் பூதத்தை ஏவியுள்ளது. ஆனால், அந்த பூதம் ஏவியவனையே ஒழிக்கும் போல தெரிகிறது!

ஏற்கனவே இந்திய நீதிமன்ற மூவர் அமர்வு பல மாதங்கள் விசாரித்து, “ரஃபால் விவகாரத்தில் எந்த ஊழலும் இல்லை” என தீர்ப்பளித்திருந்தாலும், மீண்டும் கிளம்பியிருக்கிறது இந்த விவகாரம். இம்முறை ஃப்ரான்ஸ் நீதிமன்றத்தில்!

“ரஃபால் விவகாரத்தில் 8 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப் பட்டுள்ளது என்பதற்கான ஆதாரங்களை மீடியாபார்ட் ஊடகம் (Mediapart) ஏப்ரலில் வெளியிட்டுள்ளது (https://tinyurl.com/38hzmj3m). இது ஃபிரான்ஸ் அரசின் லஞ்ச ஒழிப்பு விதிமுறைகளுக்கு எதிரானது. அதை விசாரிக்கவும்” என ஃபிரான்ஸ் நீதிமன்றம் ஒன்றில் பொது நல வழக்கு தொடுத்துள்ளது வில்லியம் போர்டோன் (William Bourdon) என்பவரது ஷெர்பா என்.ஜி.ஓ.

இந்த வில்லியம் போர்டோனுக்கும் ஜார்ஜ் சோரோசுக்கும் உள்ள தொடர்பு @ https://twitter.com/pockinglib…/status/1411354085773635584.

(ஃப்ரான்ஸின் வில்லியம் = இந்தியாவின் பிரஷாந்த் பூஷன். பொது நல ‘மிரட்டல்’ வழக்கு போட்டு வயிறு வளர்ப்பவர்)

1, ஏப்ரலில் தொடுத்த வழக்கை, ஜூன் மாதம் விசாரிக்க எடுத்துக் கொண்டுள்ளது ஃபிரான்ஸ் நீதிமன்றம். என்றாலும், இப்போது – ஒரு மாதம் கழித்து – அதை காங்கிரஸ் கைத்தடி இந்திய ஊடகங்கள் ஊதி பெரிதாக்கிவருகின்றன.

2, ஜார்ஜ் சோரோஸ் தொடர்புடைய மீடியாபார்ட் ஊடகத்தை கொண்டு 2014 முதல் பல போலி குற்றச்சாட்டுகளை மோதி அரசுக்கு எதிராக வைத்து வந்தது சோனியா காங்கிரஸ் கட்சி என்றாலும், மார்ச் – ஏப்ரலில் மீடியாபார்ட் வைத்த இந்த குற்றச்சாட்டை நீதிமன்றம் கொண்டு சென்றிருக்கிறது ஷெர்பா என்.ஜி.ஓ (வில்லியம் போர்டோன்).

3, ஏப்ரல் 5: “என்ன குற்றச்சாட்டு?” —> “ரஃபால் விமான விவகாரத்தில் ரூ 8 கோடி (ஒரு மில்லியன் யூரோ) லஞ்சத்தை இந்திய நிறுவனம் ஒன்றுக்கு ரஃபால் தயாரிக்கும் டஸ்ஸோ (Dassault) நிறுவனம் கொடுத்தது. அதை ‘லஞ்சமாக’ நேரடியாக’ கொடுக்க முடியாததால், ’50 ரஃபால் விமான மாதிரிகள் (50 large replica models of Rafale jets) தயாரிக்க’ என்று கொடுத்தது. அதை பெற்ற அந்த இந்திய நிறுவனம் டெஃப்ஸிஸ் (Defsys) எந்த மாதிரியும் (models) தந்ததாக தெரியவில்லை. டஸ்ஸோ நிறுவனமும் அதை ‘வாடிக்கையாளர்களுக்கு கொடுத்த பரிசு’ (gift to clients) என்று தன் கணக்கில் குறிப்பிட்டுள்ளது ஏன்?” என்பது குற்றச்சாட்டு. (https://tinyurl.com/2ybuzx35)

4, “யாரிந்த Defsys / Sushen Gupta?” – Defsys என்ற இந்திய நிறுவனத்தின் தலைவர் சுஷேன் குப்தா என்பவர் ஏற்கனவே அகஸ்டாவெஸ்ட்லாண்ட் ஹெலிகாப்டர் ஊழலில் (AgustaWestland VVIP Chopper case) குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டவர். காங்கிரஸ் தொடர்புடையவர் (https://tinyurl.com/2ybuzx35https://tinyurl.com/7st8kbnt , bit.ly/2U9MIF9https://tinyurl.com/cacy86ma).

5, ஏப்ரல் 6: “மீடியாபார்ட் ஊடக எக்ஸ்போஸேக்கு Defsys / Sushen Gupta பதில்?” —> “மீடியாபார்ட் அறிக்கை தவறானது. டஸ்ஸோவுக்கும் எங்கள் டெஃப்சிஸ்க்கும் இடையே ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் இல்லை. ஒப்பந்தப்படி, 50 ரஃபால் மாதிரிகளை தயாரித்து டஸ்ஸோவுக்கு வழங்கிவிட்டோம். அதற்கான delivery challans, E-way bills and GST returns ஆதாரம் இதோ” , என Defsys அறிக்கை விட்டது. (https://tinyurl.com/c4vn25cp)

6, சுஷேன் குப்தா / Defsys பெயர் வெளியானதும் – அவரது காங்கிரஸ் தொடர்பும் வெளியானது. ஏப்ரல் 5இல் ஆரம்பித்த இந்த ‘சூடான’ செய்தியை ஏப்ரல் 6இலேயே ‘ஆறப்’ போட்டன ஊடகங்கள். (‘இதை கண்டுக்காதீங்க’ என சோனியா இந்த ஊடக அடிமைகளுக்கு உத்தரவிட்டிருக்க வாய்ப்பு)

7, என்றாலும், ஃப்ரான்ஸ் நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் மாதம் எடுத்துக் கொண்ட காரணத்தால், இப்போது அதை, “இதோ பார்…. மோதியின் ரஃபாலில் ஊழல்” என அத்தனை பேரும் கூவுகிறார்கள்.

8, சுஷேன் குப்தா / Defsys – அகஸ்டாவெஸ்ட்லாண்ட் ஊழலை மறைக்கும் இந்த ஊடகங்கள் இன்னுமொரு முக்கியமான விஷயத்தை கவனிக்க தவறிவிட்டார்கள். அது: இந்த ‘ஊழலுக்கு’ சுஷேன் குப்தா / Defsysக்கு டஸ்ஸோ பணம் கொடுத்தது 2004 முதல் 2013 வரை (யுபிஏ காலத்தில்) என்பதை!

9, ஆடு கசாப்புக் கடைக்குள் கத்தியோடு வந்து “என்னை வெட்டு, வெட்டு” என கெஞ்சுகிறது. அதை மோதி ஜி உபயோகித்துக் கொன்டு, நீதிமன்ற மேற்பார்வையில் ஒரு சிறப்பு புலனாய்வை அமைத்தால்…. ஆப்பு அப்படியே ராகுல் பக்கம் திரும்பும். (படத்தில் – ராகுல் இன்ஸ்டாவில் மீம்).

அடுத்த வருடம் கிட்டத்தட்ட 7 தேர்தல்கள் இருப்பதால், இதை விரைந்து விசாரித்தால், தேர்தலுக்கும் பிரயோஜனப்படும். செய்வாரா மோதி ஜி….?

  • செல்வ நாயகம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe