spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉரத்த சிந்தனைடிராகனின் பல் பிடித்து பார்க்கும் யுவான் வாங் படலம் 'சுபம்'!

டிராகனின் பல் பிடித்து பார்க்கும் யுவான் வாங் படலம் ‘சுபம்’!

- Advertisement -

டிராகனின் பல் பிடித்து பார்க்கும் படலம் முடிந்தது.

சீனாவின் உளவு கப்பல் யுவான் வாங் 5 இலங்கை ஹம்பாந்தோட்டா துறைமுகத்தை விட்டு கிளம்பிவிட்டது. அது வந்த நோக்கம் நிறைவேறியதா என்றால்……. இல்லை என்கிறார்கள் விஷயம் அறிந்த வட்டாரங்களில்…… ஏனெனில் இந்த கப்பல் மீண்டும் சீன துறைமுகத்திற்கே தனது பயணத்தை தொடங்கி இருக்கிறது.

அது இலங்கை ஹம்பாந்தோட்டா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த சமயத்தில் கப்பலில் வந்த பணியாளர்களை மாற்றீடு செய்ய போவதாக வந்த தகவலும் உண்மை இல்லை. காரணம் வந்த அனைவரும் திரும்பவும் கப்பலோடே கிளம்பி சென்று இருக்கிறார்கள்.

சரி உளவு பார்க்கும் வேலையாவது நடந்ததா என்றால்……. நடந்தது என நமட்டு சிரிப்புடன் நம்மவர்கள் சொல்ல…… அது என்னவென்று கூர்ந்து கவனித்து பார்த்தால்….. அந்த கப்பலின் தகவல் தொடர்பு சாதனங்கள் மற்றும் அது தொடர்பு கொள்ளும் சாட்டிலைட் எவையெவை என்பதெல்லாம் நம்மவர்கள் தெள்ளத் தெளிவாக உளவு பார்த்து இருப்பதாக சொல்கிறார்கள்.

போதாக்குறைக்கு உளவு கப்பலின் பல மின்னியல் மற்றும் மின்னணு உபகரணங்களுக்கு பலத்த சேதாரத்தை செய்கூலி இல்லாமல் செய்து கொடுத்து கெத்து காட்டியிருக்கிறார்களாம். மங்க்கி வைரஸ்….. என சில மங்குணி சீனர்கள் மகுடி வாசித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

இந்த கப்பல் இலங்கை வருவது இது முதல் முறை இல்லை… தவிர இது முன்னர் வந்திருந்த சமயத்திற்கும் தற்போது வந்திருந்த போதும் சரி….. பலத்த எதிர்வினையை எதிர் கொள்ள வேண்டி இருந்திருக்கிறது.

தொழில்நுட்ப ரீதியாக இம்முறை இந்த கப்பலை நம்மவர்கள் முழுமையாக முடக்கி அதன் தரவுகளை சேகரித்ததாகவும் சொல்கிறார்கள்.

இந்த கப்பல் இங்கு நின்றிருந்த சமயத்தில் இது சீனாவின் செயற்கை கோள்களுடன் தொடர்பு கொண்டு அங்கு இருந்து சீனாவின் ஹைனான் மாகாணத்தில் அமைந்துள்ள சீன ராணுவ தொழில்நுட்ப கேந்திரத்துடன் தகவல் பரிமாற்றம் செய்து உள்ளது. அங்கு இருந்து பெறப்பட்ட கட்டளைக்கு ஏற்ப சீனா, விண்வெளியில் நிலைநிறுத்தி வைத்துள்ள பத்துக்கும் மேற்பட்ட செயற்கை கோள்களுடன் இணைந்து தகவல்களை தரவுகளாக மாற்றீடு செய்துள்ளது. இதில் இரண்டு செயற்கை கோள்கள் ஹைப்பர் ஸ்பெக்டர் ரகத்திலானவை …. இரண்டு ஆஃப்டிகல் ரகத்திலானவை மற்றவை அனைத்தும் ரேடார் சாதனங்கள் கொண்டவை, என்பது வரை நம்மவர்கள் வெகு துல்லியமாக கண்டறிந்துள்ளனர்.

தவிர….உளவு விமானம் மூலம்…. ஆம், நம்மவர்கள் அமெரிக்க லாக்கீட் மார்டீன் நிறுவன தயாரிப்பு MQ 9RV ரகத்திலான ஆளில்லா உளவு விமானம் மூலம் குறிப்பிட்ட தகவல்களை…. கடந்த காலத்தில் பெற்ற தரவுகளையும் இந்த தடவை சரிபார்க்கவும் செய்திருக்கிறார்கள்.

ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு….. அமெரிக்க தயாரிப்பு ஆளில்லா உளவு விமானங்கள் இரண்டை… லீஸ் அடிப்படையில் பெற்று இயக்கி வருகிறார்கள். இஃது இந்நிறுவனத்தினால் நேரிடையாக இங்கு இயக்கப் படும் ஆளில்லா உளவு விமானம் ஆகும். இது அனுப்பி வைக்கும் தரவுகளை …….. நம்மவர்கள் மட்டுமே கையாளக்கூடியவிதத்தில் இதன் மென்பொருளில் கொஞ்சமே கொஞ்சம் மாற்றி அமைத்து இயக்கி வருகிறார்கள்.

இது கொஞ்சம் சுவாரஸ்யமான விஷயம். இந்திய ராணுவத்தினருக்கு அவசர கால நிதியாக ஓர் குறிப்பிட்ட தொகையை அவர்கள் நேரடியாக செலவு செய்துக்கொள்ள சில பிரத்தியேக அனுமதிகளை வழங்கி இந்த அரசு உத்தரவு பிறப்பித்தது. அதனை கொண்டு நம் இந்திய கடற்படை பிரிவில் உள்ளவர்கள் நேரிடையாக அமெரிக்காவில் உள்ள லாக்ஹீட் மார்டீன் நிறுவனத்தோடு தொடர்பு கொண்டு ஆளில்லா உளவு விமானங்கள் வாங்க விலை பேச……… அவர்கள் யானை விலை, குதிரை விலை அல்ல…… அதனையும் தாண்டி சொத்தை எழுதிக் கேட்க….. பார்த்தார்கள் நம்மவர்கள்…… அவர்களுக்கு எதிர் முகாமில் இருந்த போயிங் நிறுவனத்திடம் போய் ஆளில்லா கடலடி உளவு ட்ரோன்களை நம் இந்தியாவிலேயே தயாரிக்க ஒப்பந்தம் போட்டு கொண்டுவிட்டு….. லாக்ஹீட் மார்டீன் நிறுவனத்திடம் பேரம் பேசி லீசூக்கு ஆளில்லா உளவு விமானங்களை அவர்களை விட்டே இயக்க ஒப்பந்தம் போட்டு கொண்டு வந்து சேர்ந்திருக்கிறார்கள்.

இரண்டு ஆண்டுகளுக்கு லீஸ் ஒப்பந்தம். அதில் உள்ள மின்னணு சாதனங்கள் மற்றும் மென்பொருள்கள் நம்மோடையது.

இதனால் லாக்ஹீட் மார்டீன் நிறுவனத்தின் பரம எதிரியான போயிங் நிறுவனத்திடம் இருந்து வாங்கிய P8i உடன் வெகு சுலபமாக இணைக்க முடிந்தது. காரணம் இவையெல்லாம் நம்மவர்களின் கைவண்ணத்தில் உருவான மென்பொருட்கள். தங்கு தடையின்றி தரவுகளை…, அதுவும் துல்லியமான தகவல்களை சேகரித்து வருகிறார்கள்.

இந்த தென் சீனக் கடல் பிராந்தியத்தில் தைவான் முதல் மலாக்கா நீரிணை பகுதி வரையுள்ள தகவல்களுக்கும் சரி ……. சரிபார்ப்பு நடவடிக்கைகளிலும் சரி…… அமெரிக்காவே நம்மவர்களை தான் நம்பி இருக்க வேண்டி இருக்கிறது.

உதாரணமாக ஒன்று பாருங்கள்…….. உக்ரைன் ரஷ்யா மோதலை தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு நம் இந்திய கோதுமை ஏற்றுமதியை தடை செய்துவிட்டதை நமக்கு வெறும் செய்தியாக மட்டுமே தெரியும்….. ஆனால் நம்முடைய தொழில்நுட்ப பண்புகள் மூலம் சீனாவில் ஏற்பட உள்ள பெரும் வறட்சியை கண்டறிந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக சொல்கிறார்கள். அந்த அளவிற்கு வெகு துல்லியமான தகவல்களை…… வானிலை உட்பட….. தரவுகளாக பகுப்பாய்வு செய்து கொண்டு இருக்கிறார்கள் நம்மவர்கள்.

இந்திய செயற்கை கோள்கள் செயல் திறன் மிக்கது என அமெரிக்க முன்னாள் கடற்படை தொழில்நுட்ப உளவு பிரிவின் தலைவர் பீட்டர் டால்டன் உறுதி செய்து இருக்கிறார். தற்போது இவர் அங்கு அமெரிக்கா கடற்படை தொழில்நுட்ப பிரிவு பயிற்சி கல்லூரியின் தலைவராக இருக்கிறார். முன்னணி அச்சு ஊடகங்களில் தொடர் ராணுவ கட்டுரைகள் எழுதக்கூடியவர்‌. பல அமெரிக்க செனட்டர்களுடன் நேரடி தொடர்பில் உள்ளவர்.

* இலங்கை ஹம்பாந்தோட்டா துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட இந்த உளவு கப்பல் வேறெங்கும் செல்லாமல் மீண்டும் அது சீனாவிற்கே….. அதன் சொந்த தளத்திற்கே திரும்புகிறது என்றால் நிச்சயமாக அது இந்தியர்களின் வேலை தான்** என இவர் கட்டுரை பதிவில் விரிவாகவே எழுதியிருக்கிறார். அதன் மின்னியல் பொறிமுறையை இந்தியர்கள் குழப்பம் விளைவிக்கும் வேலைகளில் வெற்றி பெற்று இருக்கக்கூடும் என்கிறார் அவர்.

இது ஒரு புறம் இருக்க….
வரும் போது ஆட்டம் காட்டிக்கொண்டே வந்த இந்த உளவு கப்பல் திரும்பும் வழியில் அடக்கத்துடன் செல்கிறதா…. இல்லை மீண்டும் ஆட்டம் காட்டப் போகிறதா என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெரிந்து விடும். கப்பல் தற்போதைக்கு மலாக்கா நீரிணை நோக்கி வேகமாக இயக்கப்படுவதாக கப்பல் நகர்வுகளை காட்டும் ரேடார் சாதனங்கள் சொன்னாலும் அந்தமான் பகுதியில் வைத்து திசை திரும்பி மியான்மார் தேசம் தாரை வார்த்து கொடுத்த நம்முடைய கோக்கோ தீவு வரை சென்று திரும்பவும் வாய்ப்பு இருப்பதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது‌.

இஃது அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு நேர் வடக்கில் வருகிறது.அங்கிருந்து பங்களாதேஷ் மற்றும் கொல்கத்தா துறைமுகங்கள் கூப்பிடும் தூரத்தில் தான் இருக்கிறது.

பார்க்கலாம் சீனா என்ன செய்கிறது என்று…….

ஒன்று மட்டும் நிச்சயம்……
டிராகனை மிக நன்றாகவே பல் பிடித்து….. பதம் பார்த்து….. அனுப்பி வைத்திருக்கிறார்கள் நம்மவர்கள். கிட்ட தட்ட அதன் வாலை ஒட்ட நறுக்கி அனுப்பி வைத்திருக்கிறார்கள்.மீண்டும் ஒரு முறை இந்திய பெருங்கடல் பற்றின கனவுகளே பெய்ஜிங்கிற்கு வராது….. வருமானால்….. மீண்டு வர முடியாது போகலாம் என்பதை அழுத்தம் திருத்தமாக செய்தி வாசித்திருக்கிறார்கள்.

ஜெய் ஹிந்த்.

ஸ்ரீ ராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe