47ம் நாள்: ஐபிஎல் 2024 – 06.05.2024
- முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs மும்பை இந்தியன்ஸ்
சூர்யகுமாரின் அதிரடி ஆட்டத்தால் மும்பை வெற்றி
இன்று மும்பை வான்கடெ மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெற்றது.
ஹைதராபாத் அணியை (173/8, ட்ராவிஸ் ஹெட் 48, பேட் கம்மின்ஸ் 35, நித்தீஷ் குமார் ரெட்டி 20, ஹார்திக் பாண்ட்யா 3/31, பியூஷ் சாவ்லா 3/33) மும்பை அணி (17.2 ஓவரில் 174/3, சூர்யகுமார் யாதவ் 102*, திலக வர்மா 37*, புவனேஷ் குமார் 1/22, மார்கோ ஜான்சென் 1/45, பேட்கம்மின்ஸ் 1/35) 7 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
இன்றைய ஆட்டத்தில் பூவாதலையா வென்ற மும்பை அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. இதனால் ஹைதராபாத் அணி முதலில் மட்டையாடவந்தது. ஹைதராபாத் அணியில் இன்று ட்ராவிஸ் ஹெட் (30 பந்துகளில் 48 ரன், 7 ஃபோர், 1 சிக்சர்) வழக்கம்போல அதிரடியாக ஆட அடுத்த தொடக்க வீரர், அபிஷேக் ஷர்மா (16 பந்துகளில் 11 ரன்) 5.5ஆவது ஓவரில் பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அதற்குப் பின்னர் மாயங்க் அகர்வால் (5 ரன்) 7.4ஆவது ஓவரில் இன்று புதிதாய் ஆடவந்த அன்ஷுல் காம்போஜ் பந்தில் அவுட்டானார். நிதீஷ் குமார் ரெட்டி இதன் பின்னர் ஹார்திக பாண்ட்யாவும் பியுஷ் சாவ்லாவும் தலா மூன்று விக்கட் எடுத்து சன்ரைசர்ஸ் அணியை 20 ஓவரில் 8 விக்கட்டுகள் இழப்பிற்கு 173 ரன் கள் என்ற நிலையில் இன்னிங்க்ஸை முடித்தனர்.
174 ரன் என்பது அடையக்கூடிய சற்றே கடினமான இலக்கை அடைய மும்பை அணி களம் இறங்கியது. ஆனால் பவர்பிளே முடிவதற்குள் ரோஹித் ஷர்மா (4 ரன்), இஷான் கிஷன் (9 ரன்) மற்றும் நமன் தீர் (பூஜ்யம் ரன்) மூவரும் சொற்ப ரன்னுக்கு ஆட்டமிழந்தனர்.
அதன் பின்னர் சூர்ய குமார் யாதவ் (51 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 102 ரன், 12 ஃபோர், 6 சிக்சர்) மற்றும் திலக் வர்மா (32 பந்துகளில் 37 ரன், 6 ஃபோர்) அணியை வெற்றிப்பாதைக்கு இட்டுச் சென்றனர். இதனால் அந்த அணி 17.2 ஓவரில் 3 விக்கட்டுகள் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்து 7 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மும்பை அணியின் சூர்யகுமார் யாதவ் தனது சிறப்பான பேட்டிங்கிற்காக ஆட்டநாயகன் விருது பெற்றார்.
நாளை டெல்லியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெறும்.
06.05.2024 அன்று நிலவரப்படி புள்ளிப்பட்டியல்
அணி | ஆ | வெ | தோ | புள்ளி | நெட் ரன் ரேட் |
கொல்கொத்தா | 11 | 8 | 3 | 16 | 1.453 |
ராஜஸ்தான் | 10 | 8 | 2 | 16 | 0.622 |
சென்னை | 11 | 6 | 5 | 12 | 0.700 |
ஹைதராபாத் | 11 | 6 | 5 | 12 | 0.065 |
லக்னோ | 11 | 6 | 5 | 12 | -0.371 |
டெல்லி | 11 | 5 | 6 | 10 | -0.442 |
பெங்களூரு | 11 | 4 | 7 | 8 | -0.049 |
பஞ்சாப் | 10 | 4 | 6 | 8 | -0.062 |
மும்பை | 12 | 4 | 8 | 8 | -0.212 |
குஜராத் | 111 | 4 | 7 | 8 | -1.320 |