கருத்துக் கணிப்பு நம்புவதற்கு இல்லைன்னு மோடியும்தான் சொல்லுறாரு! ஆக… ஆக… நீங்க செய்யவேண்டியது…!

"வீரமே, மானமே, நெஞ்சுரமே, தமிழினமே" ன்னு யாராவது உணர்ச்சியை தூண்டினால் முட்டாள் தனமாக அவன் பின்னால் அலையாமல், அதில் உண்மை இருக்கின்றதா என்று ஆராயுங்கள்...

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் நம்புவதற்கு இல்லை என்று எதிர்க்கட்சிகள் அமளிதுமளிப் பட்டுக் கொண்டிருக்க, கருத்துக் கணிப்புகள் பாஜக.,வுக்கு சாதகமாக வந்திருக்கும் போதும், அவற்றை தாமும் நம்புவதற்கு இல்லை என்று கூறி இருக்கிறார் பிரதமர் மோடி.

இந்நிலையில் கருத்துக் கணிப்புகள் எப்படி வேண்டுமானும் இருக்கட்டும், மோடி மீண்டும் வருகிறார் அல்லது வரவில்லை… எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும்… அதற்காக ஒரு மனிதனை இத்தனை பேர் சூழ்ந்து கொண்டு வசைபாடுவீர்களா? அது என்ன அப்படி ஒரு வெறுப்பு என்று கேட்டு ஒரு பதிவினை வைரலாக்கி வருகின்றனர் மோடி ஆதரவாளர்கள்.

அந்தப் பதிவு இதுதான்…!

Exit poll எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும்…அவர் தோற்கட்டும் அல்லது ஜெயிக்கட்டும்….அது வேறு… ஆனால் இப்போது நீங்கள் ஏன் இப்படி கதறுகிறீர்கள்?

நீங்கள் செய்தது பூராவும் என்ன?

1) பரம்பர கொள்ளைக்காரக் கும்பலையும் ஒரு நேர்மையானவரையும் ஒன்று போல் பாவித்தது..

2) அவரைப் பற்றி தேவையில்லாத வெறுப்பை மக்கள் மத்தியில் பரப்பியது..

3) அவரைப் பார்த்து ஒருவன் ‘ஒழிக’ என்று கத்தினால் போதும், அவன் புல்லுருவி தேசதுரோக அயோக்கியனாக இருந்தாலும் அவனை ஆதரித்தது…..அவன் தூண்டப்பட்டவனாக இருக்கலாம் என்று தெரிந்தும் கண்களை மூடிக்கொண்டது..

4) வெறும் உணர்ச்சிகளை தூண்டும் வகையில் பேசினால் போதும், அவனை ஹீரோவாக கொண்டாடுவது..

5) வெறும் மதத்தின் அடிப்படையிலேயே அவரை வெறுத்து, வெறுக்கப்படுபவரை மதவாதி என்றது…

6) தன் மத வழிபாட்டை செய்து, தன் தெய்வத்துக்கு உண்மையாக இருந்தவரை மதவாதி என்று கூறியது..ஆனால் இந்து மதத்தை மேடை போட்டு பகிரங்கமாக பழித்த தலைவர்களை வெட்கமில்லாமல் மதச்சாற்பற்றவர் என்றது..

7) மாட்டுக்காக ஒரு கும்பல் உத்திர பிரதேசத்தில் கொலை செய்தால் போதும்.. அதை இவரே தன் மேற்பார்வையில் நின்று செய்தது போன்று பேசியது..அதே இங்கு நடந்த ராமலிங்கம் கொலையையும் லொயோலாவின் அயோக்கியத்தனத்தையும் மூடி மறைத்தது..

8) நாட்டின் முன்னேற்றத்தின் சான்றாக எத்தனை தரவுகளை காட்டி பேசினாலும் எதையுமே ஒத்துக் கொள்ளாமல் மீம்ஸ்
மட்டுமே போட்டு கலாய்த்தது..

9) அங்கே பார் France ஜனாதிபதி எவ்வளவு எளிமையாக இருக்கிறார்! – என்று குழந்தைகளுக்கு நுணிநாக்கு ஆங்கிலத்தில் சொல்லித் தந்துவிட்டு, பிரதமரின் தாயார் ஆட்டோவில் அரசு மருத்துவமனைக்கு சென்றதையும் அவர் சகோதரர் மளிகை கடை வைத்திருப்பதையும் மீம்ஸ் போட்டு கிண்டல் செய்தது…  இதுதானே?

என்ன ஆரோக்கியமான வாதங்களை இதுவரை முன்வைத்து தர்க்கம் செய்துள்ளீர்கள்?

1) Soil health cards எவ்வளவு தரப்பட்டுள்ளது இதுவரை என்று தெரியுமா?

2) விவசாய நிலங்களும் காடு நிலங்களும் (Afforestation) எவ்வளவு அதிகரித்துள்ளது என்று தெரியுமா?

3) கொளுத்தும் வெயிலிலும் அரை மணிநேர மின்வெட்டு கூட இல்லாமல் இருப்பது யாரால் என்று தெரியுமா?

4) நாட்டின் உணவு ஏற்றுமதி அதிகரித்திருப்பதும் உணவு வீக்கவிகிதம் (food inflation) கணிசமாக குறைந்துள்ளதும் தெரியுமா?

5) Krish Dak Services மூலம் விவசாயிகளுக்கு நேரடியாக தரமான விதைகளின் விணியோகத்தை தொடங்கியது யார் என்று தெரியுமா?

6) Neem coated urea என்றால் என்ன? அதை கொண்டு வந்தது யார்? அதனால் விவசாயிகளுக்கு என்ன பயன் என்று தெரியுமா?

7) LED பல்புகளின் விணியோகத்தின் மூலம் CO2 வெளியீட்டை கணிசமாக குறைத்தது யார் என்று தெரியுமா?

8) NASA வின் அறிக்கையின் படி உலகத்தின் வெப்பத்தை பெருமளவு குறைக்கும் முயற்சியில் இந்தியாவும் சீனாவும்தான் முன்னோடி என்று தெரியுமா? இதற்காக Indo France agreement மூலம் Mass tree plantations ன் மூலம் கிட்டதட்ட 7 கோடி மரங்களை வெறும் 12 மணிநேரத்தில் நட்டு சாதனை புரிந்தது இந்த அரசு என்று தெரியுமா?

9) ENAM PORTAL மூலம் விவசாயிகளின் நேரடி வியாபாரத்தால் கிட்டதட்ட இரண்டு பங்கு லாபம் கிடைப்பது தெரியுமா?

10) உலகத்தின் மிகப்பெரிய health insurance இவர் கொண்டுவந்தது தான் என்று தெரியுமா?

11) எல்லோருடைய வீட்டிலும் கழிப்பறைகளை கட்டித்தந்ததன் மூலம் diarrhoeal deaths கணிசமாக இந்தியாவில் குறைந்துள்ளது என்று WHO சான்றிதழ் அளித்துள்ளது தெரியுமா?

12) நாட்டின் வரிப்பணத்தில் பட்டேல் சிலை கட்டப்படவில்லை…மாறாக SVPRET (Sardar Vallabhai Patel Rashtriya Ekta Trust) மூலமாக Loha campaign நடத்திதான் அந்த சிலை வடிவமைக்கப்பட்டது என்று தெரியுமா?

  • இதையெல்லாம் தெரிந்து கொள்ளாமல் இருந்ததற்காகவாவது என்றாவது வெட்கப்பட்டிருக்கிறீர்களா?

அரசின் எந்த திட்டத்தை நீங்கள் பாராட்டி பொறுப்புடன் பேசியிருக்கிறீர்கள், அதை இகழ்வதற்கு?

உங்களுக்கு வெறுக்க மட்டும் கற்றுக்கொடுத்தார்கள்..
வெறுத்தீர்கள்..

இப்போது என்ன ஆயிற்று? அவர் இன்னும் பத்து மடங்கு பூதாகாரமாக வளர்ந்து நிற்கிறார்!

இனியாவது திருந்துங்கள்… “வீரமே, மானமே, நெஞ்சுரமே, தமிழினமே” ன்னு யாராவது உணர்ச்சியை தூண்டினால் முட்டாள் தனமாக அவன் பின்னால் அலையாமல், அதில் உண்மை இருக்கின்றதா என்று ஆராயுங்கள்…

மாறாக கண்மூடித்தனமாகவும் மதத்தின் பெயராலும் மட்டுமே அவரை வெறுக்க நீங்கள் பத்து பேர் ஒன்று கூடினால், அதே கண்மூடித்தனமாகவும் மதத்தின் பெயராலும் அவரை ஆதரிக்க நூறு பேர் ஒன்று கூடுவார்கள்!

  • என்று மோடி ஆதரவாளர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...