தெற்கு ரயில்வே தலைமையக அதிகாரிகளுக்கும் மதுரை கோட்ட ரயில்வே அதிகாரிகளுக்கும் செங்கோட்டை ரயில் பயணிகள் நலச்சங்கத்தினரின் பணிவன்பான வேண்டுகோள்
ஐயா!நாங்கள் வந்தே பாரத் ரயிலை கேட்கவில்லை
ஆனால் — வாரத்தில் 3 நாட்கள் சென்னையிலிருந்து செங்கோட்டை வந்து சென்னை திரும்பும் “ சிலம்பு ரயிலை” தினசரியாக்க வேண்டுமென்று கேட்கிறோம்!
ஐயா!நாங்கள் வந்தே பாரத் ரயிலை கேட்கவில்லை ஆனால்- செங்கோட்டை – மயிலாடுதுறை – செங்கோட்டை ரயில்களின் பெட்டிகளை அதிகரிக்க கேட்கிறோம்!
ஐயா! நாங்கள் வந்தே பாரத் ரயிலை கேட்கவில்லை
ஆனால் கீழ்க்கண்ட சிறப்பு ரயில்களை நிரந்தரமான தினசரி ரயில்களாக இயக்கிட கேட்கிறோம்!
1) எர்ணாகுளம் – வேளாங்கண்ணி -எர்ணாகுளம் (வழி கொல்லம் புனலூர் செங்கோட்டை தென்காசி)
2) திருநெல்வேலி – தாம்பரம் – திருநெல்வேலி ( வழி தென்காசி)
3) திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் – திருநெல்வேலி ( வழி தென்காசி)
ஐயா!நாங்கள் வந்தே பாரத் ரயிலை கேட்கவில்லை
ஆனால் தெற்கு பிராந்திய ரயில்வே அட்டவணை கமிட்டி சில ஆண்டுகளுக்கு முன் பரிந்துரைத்த கீழ்கண்ட ரயில்களை இயக்க கேட்கிறோம்.
1) குருவாயூர் – புனலூர் – குருவாயூர் ரயிலை செங்கோட்டை வழி மதுரைக்கு இயக்க வேண்டும்
2) தாம்பரம் – செங்கோட்டை – தாம்பரம் விரைவு ரயிலை விரைவில் இயக்க வேண்டும்.
** ஐயா! நாங்கள் வந்தே பாரத் ரயிலை கேட்கவில்லை**
ஆனால்—எல்லா நாட்களிலும் சென்னை – செங்கோட்டை – சென்னை பொதிகை விரைவு ரயில்களில் முன்பதிவில்லாத இரண்டு இரண்டாம் வகுப்பு பெட்டிகளை இணைக்க வேண்டுகிறோம்.
** ஐயா! நாங்கள் வந்தே பாரத் ரயிலை கேட்கவில்லை**
ஆனால் – குட்டி ஜப்பான் என்றழைக்கப்படும் தொழில் நகரான சிவகாசியில் 16101 சென்னை கொல்லம் விரைவு ரயில் தற்போது நிற்பது கிடையாது. உடனடியாக சிவகாசி நிறுத்தம் வழங்கிட வேண்டும்.
நன்றிகள்! வணக்கங்கள்!