மதுரையில் பிரதமர் மோடி! தொண்டர்கள் உற்சாகம்!

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுவதற்காக, மதுரை விமான நிலையம் வந்தடைந்தார் பிரதமர் மோடி. விமான நிலையத்தில் பிரதமர் மோடியை ஆளுநர், முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்டோர் வரவேற்கின்றனர்!

சற்றுநேரத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட உள்ளார் பிரதமர் மோடி பிரதமர் மோடி வருகையை ஒட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மதுரை தோப்பூரில் ரூ 1264 கோடி திட்ட மதிப்பீட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படுகிறது. 202 ஏக்கரில் 750 படுக்கை வசதியுடன் கட்டப்படும்- 48 மாதங்களில் இப்பணி நிறைவு பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

100 எம்.பி.பி.எஸ் படிப்புக்கான இடங்களும், 60 செவிலியர் படிப்பிற்கான இடங்களும் அனுமதிக்கப்படும். பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸார் செய்துள்ளனர்.

2 மணி நேரத்திற்கு மதுரை விமான நிலையத்தில் தற்காலிகமாக விமானங்கள் இயக்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. பிரதமரின் வருகையை ஒட்டி மதுரை நகரில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. பிரதமரின் வருகையை ஒட்டி மதுரையில், டிஜிபி ராஜேந்திரன் தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

மதுரை #எய்ம்ஸ் மருத்துவமனையில்..

நிர்வாகப் பிரிவு திறந்தவெளி அரங்கம் இரவு தங்கும் இடம் விருந்தினர் இல்லம் விடுதிகள் மற்றும் குடியிருப்பு வசதிகள் குறிப்பாக மதுரை விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக அமையும்.. #MaduraiThanksModi#TNWelcomesModi#TNWelcomesModiji

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...