spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉரத்த சிந்தனைஐயா வைகுண்டர் அவதார நிகழ்வில் ஆளுநர் ரவி பேசியதும், பின்னணியும்!

ஐயா வைகுண்டர் அவதார நிகழ்வில் ஆளுநர் ரவி பேசியதும், பின்னணியும்!

- Advertisement -

தமிழக ஆளுநர் ரவீந்திர நாராயண் ரவி, ஐயா வைகுண்டரின் அவதார தினத்தில் ஒரு கருத்தை வெளியிட்டார். அதில், ஐயா வைகுண்டர், நாராயணரின் அவதாரம் என்று அவரது வழி வந்தவர்கள் கருதுகிறார்கள் என்றும், அவர் ஆங்கிலேய கிறிஸ்துவ மதமாற்றத்தைத் தடுத்து நிறுத்துவதில் முக்கியப் பங்காற்றியதாகவும் கூறினார். இதை வழக்கம் போல் சர்ச்சை ஆக்கிய தமிழக ஊடகங்கள், சாமித்தோப்பு பாலபிரஜாபதி அடிகள் சொன்ன மறுப்பை மட்டும் பிரதானமாக பேசி வருகின்றன. இந்நிலையில், இதன் உண்மை என்ன பின்னணி என்ன என்பது குறித்து சமூகத் தளங்களில் பலர் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். அவர்களில் பா.இந்துவன் எழுதிய கருத்து இங்கே…


ஆளுநர் ரவி அவர்கள், மகான் அய்யா வைகுண்டர் அவதார தினத்தின் 192வது பிறந்தநாளை கொண்டாடும் நிகழ்வில், சனாதன தர்மத்தை அதை அழிக்க சதி செய்தவர்களிடமிருந்து பாதுகாப்பதில் அய்யா வைகுண்டர் வழங்கிய ஆழமான பங்களிப்பை நினைவுகூர்ந்தார். அய்யா வைகுண்டர் சனாதன தர்மத்துக்கு புத்துயிரூட்டி, பெரிதும் வளப்படுத்தினார். சமூக பாகுபாடுகளுக்கு எதிராகப் போராடி, விளிம்புநிலை மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு சமூக நீதியை உறுதி செய்தார். அவர் கொண்டிருந்த பார்வை, அனைவருக்கும் சமமான நலத்திட்ட அணுகலையும் திட்டங்கள் அனைவருக்குமானது என ஒருவரைக் கூட விட்டு விடாமல் உறுதிப்படுத்தும் #பிரதமர்மோடி தலைமையிலான அனைவரையும் உள்ளடக்கிய பாரதத்தில் உயிர்ப்புடன் விளங்கி #சப்காசாத்சப்காவிகாஸ் என்ற அனைவருடனும் அனைவரின் நலனுக்காகவும் என்ற உள்ளடக்கிய வளர்ச்சி மாடலில் பிரதிபலிக்கிறது.


தமிழகத்தின் மேதகு ஆளுநர் ஆர்.என். ரவி அவர்கள் “அய்யா வைகுண்டரைப்” பற்றி கூறியிருப்பது 100 சதவீதம் உண்மையாகும். அய்யா வைகுண்டர் நாரயணணின் அவதாரம், சனாதன தர்மத்துக்கு பாதிப்பு ஏற்படும் போதெல்லாம் இராமர், கிருஷ்ணர், வள்ளலார், அய்யா வைகுண்டர் போன்றோர் அவதாரங்களை எடுத்துள்ளனர் என்று கூறியது அய்யாவழி மக்களின் ஆண்டாண்டுகால நம்பிக்கையை பிரதிபலிப்பதாகவே உள்ளது. அகிலத்திரட்டு அம்மானை கூறுவது போல அய்யாவழி மக்கள் காலம் காலமாக விஷ்ணுவின் அவதாரமாகவே அய்யா வைகுண்டரைக் காண்கின்றனர். அய்யா வைகுண்டரை சனாதன எதிரியாக முன்னிறுத்த நினைப்பது வரலாற்றுத் திரிபே ஆகும்.

“ஏரணியும் மாயோன் இவ்வுலகில் தவசுபண்ணி காரணம்போல் செய்தகதை கட்டுரைக்க பூரணமாய் ஆராய்ந்து பாட அடியேன்சொல் தமிழ்க்குதவி நாராயணர் பாதம் நாவினில் பாண்டவர் தமக்காய்த் தோன்றி பகைதனை முடித்து மாயோன்”

  • அய்யா வைகுண்டர் (அகிலம்)

இப்படி மகாபாரதத்தில் பாண்டவர்களுக்காக தூது சென்ற கிருஷ்ணனும் நானே, நாராயணனும் நானே, மாயோனும் நானே என்று கூறும் அய்யா வைகுண்டர் இராமர் உட்பட விஷ்ணுவின் அனைத்து அவதாரங்களைப் பற்றியும் விரிவாக அகிலத்தில் குறிப்பிடுகிறார். இராம அவதாரம் பற்றி குறிப்பிடுகையில் இராவணனை போகிற போக்கில் அரக்கன் என்று கூறி மிதித்துவிட்டேச் செல்கிறார். அதாவது,

“பாணமது தன்னாலும் பத்தினிதன் கற்பாலும்
நாணமது கெட்ட அரக்கா உன் நல்ல பத்து தலை இழந்து சேனைத்தளம் இழந்து சிரசு இழந்து வாழ்விழந்து வானரங்கள் வந்து உன்றன் வையகத்தை சுட்டழித்து உன் சடலம் எல்லாம் உழுத்துப் புழுபுழுத்து சஞ்சலப்பட்டு சண்டாளா நீ மடிய வேண்டுவேன் தவசு விமலன்தனை நோக்கி”

அகிலத்திரட்டு அம்மானை.

“ஆடுகிடாய் கோழிபன்றி ஆயனுக்கு வேண்டாம்” என்று கூறும் அய்யா வைகுண்டர், அக்காலத்தின் கொடுங்கோல் ஆட்சியாளர்களை கலிநீசன் என்று குறிப்பிட்டு மிஷநரிகளை “வெண்நீசர்கள்” என்று குறிப்பிடுகிறார். இவரை இந்துத்துவ்வாதியாக காணாமல் சனாதன எதிரியாக எவ்வாறு காண முடியும்???

“ஒரு வேதம் தொப்பி உலகமெல்லாம் போடு என்பான், மற்றொரு வேதம் சிலுவை வையமெல்லாம் போடு என்பான்”

என்று மதம் மாற்ற வந்தவர்களை நேரடியாகவேச் சாடியுள்ளார். இதனால்தான் அக்காலத்தில் அய்யா வைகுண்டருக்கு எதிராக மிஷநரிகள் லண்டன் வரை “ப்ராது” லெட்டர் எடுத்துச்சென்றனர். அதாவது மிஷநரிகளால் 1864 ஆம் ஆண்டு “Santhapooram District” ல் இருந்து லண்டனுக்கு அனுப்பப்பட்ட ரிப்போர்ட்டில் 6 மற்றும் ஏழாவது பக்கங்களில் அய்யா வைகுண்டரை விஷ்ணுவின் கடைசி அவதாரம் என்பதை மக்கள் ஏற்றுக்கொண்டு மக்கள் அவரை வழிபட துவங்கியது மதமாற்றத்திற்கு பெரிதும் இடையூறாக இருக்கிறது என்று பதிவு செய்துள்ளனர். மேலும் 1859 ஆண்டு அனுப்பப்பட்ட ரிப்போர்ட்டில் “Ebenezer Lewis” என்பவர் அய்யா வைகுண்டரை மோசடிக்காரன் என்று நேரடியாக திட்டுகிறார். (பக்கம் 15-16)

(“Ebenezer Lewis calls Vaikundar as an “imposter”)

ஏன் தெரியுமா???

“This report presents the reply of an Ayyavazhi follower to a Christian Mossionary as, “We worship the true God, what business have you here? We need not your instructions, begone… Narayanan (Vaikuntacami) is the true God; it is he who created us… All who deny the divinity of Narayanana are fools and mad men, for no man of sense will do it.” It also says that, “thousands continue to worship him still, believing that before long he will rise from the dead.”

அதாவது இந்த லெட்டரை, ஒரு அய்யாவழிக்காரர் ஒரு மிஷநரிக்கு கூறும் பதிலாக எழுதியுள்ளார் எபநேசர் லீவிஸ். அதாவது மதமாற்றம் செய்ய வந்தவர்களிடம் “நாங்கள் உண்மையான கடவுளை வணங்குகிறோம், உங்களுக்கு இங்கே என்ன தொழில் இருக்கிறது? என்று மிஷநரிகளை அன்றே தெறிக்கவிட்டுள்ளனர் அய்யாவழிக்காரர்கள். அதோடு எங்களுக்கு உங்கள் அறிவுறுத்தல்கள் தேவையில்லை, எங்களுக்கு நாராயணன் தான் (வைகுண்டசாமி) உண்மையான கடவுள். அவர் தான் நம்மை படைத்தார் என்று, மெய்யான தேவன் இயேசு என்று சொன்ன மிஷநரிகளை விரட்டியுள்ளனர். அதோடு நாராயணனின் தெய்வீகத்தை மறுப்பவர்கள் அனைவரும் முட்டாள்கள் மற்றும் பைத்தியக்காரர்கள் என்றும் மிஷநரிகளுக்கே பாடம் எடுத்துள்ளனர் அய்யா வழி வந்தவர்கள்.

இப்படிப்பட்ட சனாதனவாதியான அய்யா வைகுண்டர், பகவத்கீதை அத்யாயம் 7:21 ல் கிருஷ்ணர் கூறுவது போல, எந்த எந்த பக்தன், நம்பிக்கையுடன் எந்த எந்த வடிவத்தை அர்ச்சிக்க விரும்புகிறானோ, அவனுடைய அசையாத நம்பிக்கைக்குத் தக்க வடிவத்தை நான் மேற்கொள்கிறேன் என்று கூறும் வரிகளுக்கு ஏற்ப “அவரவர் மனதில் ஆனபடி இருந்து எவரெவரையும் பார்த்திருப்பேன் நான்” என்று அகிலத்திரட்டு அம்மானையில் குறிப்பிடும்போது அவரை நாராயணனின் அவதாரம் என்று குறப்பிடாமல் சனாதன எதிரி என்று குறப்பிடுவது எவ்வகையில் நியாயம்? ஏன்? நாராயணர் சனாதனத்திற்கு எதிரானவரா?

Source :

  1. Annual Report of the Travancore District Committee in Connection with the LMS,
  2. அகிலத்திரட்டு அம்மானை.

– பா இந்துவன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe