December 8, 2025, 4:55 AM
22.9 C
Chennai

இந்தியாவின் காலடியில் ஆதிக்க சக்திகள்!

pm modi in bavani kalpakkam - 2025

மோடி கல்பாக்கம் வந்து சென்றது நம்மில் பலருக்கும் தெரியாமல் போனதுதான் மிகவும் வருத்தமானது. ஏனெனில் உலகத்தில் வளர்ந்த நாடுகள் தங்களது மின்சார தேவைக்கு பயன்படுத்துவது நியூக்ளியர் எனெர்ஜி அது விலை குறைவானது, அது தரும் மின்சாரம் மிக அதிகம். எனவே இந்தியாவும் வல்லரசு ஆக வேண்டும் என்றால் நியூக்ளியர் எனெர்ஜிக்கு செல்ல வேண்டும்.

அதற்கு பெரியளவில் பயன்படுத்தப்படுவது யுரேனியம். அதை நாம் தடையற்று வாங்க வேண்டும் என்றால், அதற்கு நாம் NSG (Nuclear Supplier Group) சேர்ந்தால்தான் அதை கொடுப்பார்கள்.

அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?

யுரேனியத்தில் நாம் மின்சார தேவைக்குப் பயன்படுத்தியபின் நமக்கு கிடைப்பது புளூட்டோனியம் என்ற உபரி. ஆனால் அதுதான் அணு ஆயுத உற்பத்திக்கு பயன்படுத்தும் மூலப்பொருள். அப்படியென்றால், அதை நாம் நமது அணு ஆயுத உற்பத்திக்கு பயன்படுத்த முடியும். ஏன் மற்றவர்களுக்கு கூட கொடுக்க முடியும்.

அதனால் நாம் கஜகிஸ்தான், உஸ்பெஸ்கிஸ்தான், கனடா போன்ற நாடுகளிடம் இருந்து யுரேனியம் வாங்குகிறோம். அதை பயன்படுத்திய பின்னர் புளூட்டோனியத்தை அவர்களுக்கு (NPT நாடுகள்) திருப்பி கொடுக்க வேண்டும். அதை கொடுக்கவும், திரும்ப பெறவும் நம்மிடம் மிகப்பெரிய பணம் வாங்குவார்கள்.

அதை நாமே வைத்துக்கொள வேண்டுமெனில், நாம் NPT( Non-Prolifration of Nueclear Weapons) என்று சொல்லப்படும் அணு ஆய்தங்களை நாம் துறக்க வேண்டும், மேலும் எந்த அணு ஆயுத சோதனைகளை செய்யக்கூடாது. அப்படி நாம் செய்தால் பாகிஸ்தானும், சீனாவும் டுபாக்கூர் அணு ஆய்தத்தை வைத்தே நம்மை மிரட்டி பணியவைக்க மாட்டார்களா?

அப்படி செய்யாததால், நம்மால் தங்கு தடையற்ற யுரேனியத்தை வாங்க முடியவில்லை. அதனால் நாம் நியூக்ளியர் ரியாக்டர் மின் உற்பத்திக்கு அணு மின் நிலையங்களை கட்ட முடியவில்லை. வாஜ்பாய் அணு ஆயுத சோதனையை செய்து முடித்தபின்னர், நமக்கு யாரும் யுரேனியம் கொடுக்கக்கூடாது என்று தடுத்துவிட்டார்கள்.

அதனால் பின்பு வந்த சோனியா அரசாங்கத்திற்கு பல கட்டளைகளை போட்டார்கள். அதில் நாம் ராக்கெட் சோதனை செய்யக்கூடாது, சென்சிடிவான ஆராய்ச்சிகள் செய்யக்கூடாது என்று பல கீழ்படிதலுக்கு பின்பு நம் பொம்மை பிரதமர் யுரேனியத்தை பெற முடிந்தது. நம் தேஜஸ் விமான தயாரிப்பு முதல், விமானம்.தாங்கி கப்பல்கள் வரை நிறுத்தப்பட்டது!

அதாவது ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கக்கூடாது, வாங்கினால் தடை போடுவோம் என்ற கட்டளை போலத்தான். அப்போது ஒரு பொம்மையும், ஊழல்வாதிகளும் நாட்டை ஆண்டதால், அவர்கள் கட்டளைக்கு அடிபணிந்தது. ஆனால் இன்று நமது மோடி, முடிந்தால் தடை செய்துபார் என்றார். நமது வாத்தி, நான் வாங்குவது ரஷ்ய ஆயுள் என்றால் யூரோ யூனியன் வாங்குவது என்ன தக்காளி சட்டினியா என்று அமெரிக்க மண்ணிலேயே கேட்டு அவர்களின் ரெட்டை வேஷத்தை அசிங்கப்படுத்தினார்.

அது போன்ற தடைகள் என்பது தவிர்க்க முடியாதது. அதற்கு மாறாக தோரியம் என்ற பொருளை அணு மின் உற்பத்திக்கு பயன்படுத்த முடியும். உலகில் இருக்கும் தோரியம் இருப்பில் 25% நம்மிடம்தான் உள்ளது. அதை வைத்து நம்மால் அணுமின் நிலையத்தில் பயன்படுத்தினால் யாரையும் இந்தியா சார்ந்திருக்க வேண்டியதில்லை.

அதற்காக நமது அணுசக்தி தந்தை ஹோமி பாபா 1954 ல் யுரேனியத்திற்கு பதிலாக தோரியத்தை பயன்படுத்தலாம் என்று சொன்னார். ஆனால் அதற்குரிய டெக்னாலஜி நமக்கு கிடைக்கவில்லை என்பதைவிட அதற்குரிய ஆராய்ச்சிக்கான டெக்னாலஜியை நமக்கு US, Euro நாடுகள் தடுத்துவிட்டது. அதை நம்மால் மட்டுமல்ல, உலகில் எந்த நாடும் செய்யவில்லை.

இந்த நிலையில் சமீபத்தில் ரஷ்யா அதை வெற்றிகரமாக செய்து முடித்தது. அதை நாமும் இப்போது செய்து முடித்துள்ளோம். எனவே நமக்கு இனிமேல் மேலை நாடுகளை யுரேனியத்துக்காக சார்ந்திருக்க வேண்டிய தேவை இல்லை, பயன்படுத்திய பின் அவர்களுக்கு புளூட்டோனியத்தை கணக்கு காட்ட வேண்டியதில்லை.

அதைதான் நமது கல்ப்பாக்கம் அணு மின் உலையில் வெற்றிகரமாக செய்துள்ளார்கள், மோடி அதை தொடக்க வந்தார். அப்படியெனில் அது உலக சாதனை, ஆனால் ஏன் நமக்கு தெரய்வில்லை!

அதைப்பற்றிய புரிதல்.என்பது மிகவும் சிக்கலானது. ஆனால் எளிதாக பார்த்து புரிந்துகொண்டால், நாமும் அணு அறிவியல் விஞ்ஞானியே, அதற்காக முயற்சிக்கிறேன்! எனக்கே அது புரிந்தால் அனைவருக்கும் புரிந்துவிடும்.என்ற நம்பிக்கையில்!

அதற்கு முன்பாக அணு பற்றி ஒரு அடிப்படை புரிதல் தேவை. ஒரு அணுவை பிளந்து அதில் உள்ள ஒரு எலெக்ட்ரானை வெளியேற்றினால், அப்போது மிக அதிக அளவில் வெப்பம் உருவாகும். அதை நாம் நீரை கொதிக்க வைத்து, டர்பைன் மூலம் இயக்கி மின்சாரம் தயாரிக்கிறோம். அதற்கு பெரயர் ஃபிஸன் (Fission) என்பதாகும்.

உதாரணமாக ஒரு யுரேனியம் தாதுவில் 92 புரோட்டான்களும், 146 எலெக்ட்ரான்களும் இருக்கிறது. அதை இரண்டையும் சேர்த்தால் (92+146=238) வருகிறதல்லவா, அதனால்தான் அதை யுரேனியம் 238 என சொல்கிறோம்.

அதில் நாம் ஒரு புரோட்டானை அதனுள் செலுத்தும்போது அது யுரேனியம் 239 ஆக மாறும் அப்போது பெருமளவில் வெப்பம் உருவாகும். அங்கே புரோட்டான், எலக்ட்ரான் சமனாக இல்லாததால் அது ஒரு புரோட்டானை 23 நிமிடங்கள் கழித்து உள்வாங்கி அது நெப்டூனியம் என்று மாறும். அப்போது அதுனுள் 93 புரோட்டான்களும், 146 நியூட்ரானுங்களும் இருக்கும்.

அதிலிருந்து மேலும் ஒரு எலெக்ட்ரானை Fission மூலம் வெளியேற்றினால், 94 புரோட்டான்கள், 145 நியூட்ரான்களை கொண்ட புளூட்டோனியமாக மாறும். இந்த புளூட்டோனியம் தான் அணு ஆயுத உற்பத்திக்கு பயன்படுத்தும் மூலப்பொருள்.

இப்போது அடுத்த Fusion டெக்னாலஜியை பற்றி பார்க்கலாம். சென்ற முறையில் ஒரு எலெக்ட்ரானை வெளியே எடுக்கும்போது அங்கே பெருமளவில் வெப்பம் உருவாகும் என்று பார்த்தோம். அதற்கு நேர்மாறன டெக்னாலஜி தான் இந்த ஃபிஸைல் டெக்னலாஜி.

இதில் ஒரு எலெக்ட்ரானை வெளியேறுவதற்கு பதிலாக, ஒரு எலெக்ட்ரானை கூடுதலக சேர்ப்போம். அப்போதும் அதே போல பெருமளவில் வெப்பம் உறுவாகும். அதன் மூலம் கிடைக்கும் வெப்பத்தை வைத்து, நாம் மின்சாரம் பெற முடியும். ஆனால் பிரிப்பதை விட சேர்ப்பது என்பது மிக கடினமான வேலை.

எனவே அதை செய்ய அமெரிக்கா, ரஷ்யா உற்பட உலகில் பல நாடுகள் பல வருடங்களாக முயற்சி செய்து வந்தது. இந்தியாவும் பெருமளவில் முயற்சி செய்தது. அதாவது நமது அணு விஞ்ஞானத்தின் தந்தை என்ற ஹோமி பாபா, அதை 1954 ல் முன் வைத்தார்.

ஏன் இந்தியா இதற்கு முயற்சித்தது என்றால், நம் நாட்டில் தோரியம் 232 என்பது பெருமளவில் கிடைக்கிறது. அதை பயன்படுத்தி மற்ற நாடுகளை யுரேனியத்திற்காக சார்ந்திருக்காமல் நமது இயற்கை வளத்தையே பயன்படுத்த முடியும் என்பதால்ப்தான்..,

ஆனால் அதை நம் அடிமை அரசாங்கங்களால் செய்ய முடியவில்லை. அந்த நிலையில் ஹோமி பாபா மர்மமாக கொலை செய்யப்பட்டார். அவரின் இறப்பும் லால் பக்தூர் சாஸ்திரி இறப்பு போல காங்கிரஸ் அரசால் மூடி மறைக்கப்படது.

தோரியத்தில் இருக்கும் 232 மூலக்கூறுகளில் 90 புரோட்டான்களும், 142 எலெக்டார்ன்களும் (90+142=232) இருக்கிறது. அதில் ஃப்யூஸன் (Fusion) டெக்னாலஜி மூலம் ஒரு எலெக்ட்ரானை சேர்க்கும்போது அது யுரேனியம் 233 ஆக மாறுகிறது.

இந்த Fusion Technology ஐத்தான் நமது இந்திய விஞ்ஞானிகள் வெற்றிகரமாக கண்டுபிடித்து, அதை கல்பாக்கம்.அணு மின் நிலையத்தில் Fast Breader மூலம் வெற்றிகரமாக சேர்த்துள்ளார்கள். இதன் வெற்றி கண்காணிக்கப்பட்டு, பின்பு மற்ற அணு உலைகளுக்கும் விரிவாக்கி அதை தரம் உயர்த்தப்போகிறார்கள்.

அணு உலைக்கும், அணு ஆயுதத்திற்கும் என்ன வித்தியாசம்?

இந்த அணுக்களை பிளப்பதோ, அல்லது சேர்ப்பதோ கட்டுபாடாக நடந்தால் அது அணு விசை. அதுவே திறந்த வெளியில் கட்டாபாடு இல்லாமல் வெடிக்க அனுமதித்தால் அதுவே அணு ஆயுதம்!

இதற்கும் மோடிக்கும் என்ன சம்பந்தம் எனு கேட்கிறீர்களா?

இந்திய விஞ்ஞானிகள் உலகளவில் சென்று மிகப்பெரிய கண்டுபிடிப்புகளை செய்யும்போது, இந்தியாவில் மட்டும் ஏன் செய்ய முடியவில்லை?

காரணம், நம் அரசுகளை ஆண்டவர்கள் மேலை நாடுகளின் கைக்கூலிகளாக இருந்தார்கள். இன்று ஒரு ஆண்மையுள்ள நேர்மையான, தலைவர் மோடி இருபதால்தான் கோவிட்டுக்கு தடுப்பூசி முதல் தோரியம் அணு மின் விசை வரை கண்டுபிடிக்க முடிந்தது! 1954 ல் ஒரு மாமா நேருவுக்கு பதிலாக பட்டேல் அல்லது மோடி இருந்திருந்தால், இது அன்றே நடந்திருக்கும்.

குறிப்பு: இதை என் மரமண்டையில் புகுத்த நிறைய படித்து அதை எளிதாக்கி கொடுத்திருக்கிறேன். இதை நாளை ஓட்டுப்போடும் இந்தியாவை நேசிப்பவர்களுக்கும், வருங்கால இந்தியாவை உருவாக்கப்போகும் உங்கள் குழந்தைகளுக்கும் கொண்டு சேர்த்துவிட்டேன் என்று சொன்னால் சந்தோஷப்படுவேன்! செய்வீர்களா? அதைச் செய்தால், நேற்றுவரை உலகின் கைகளில் இருந்த இந்தியாவின் கைகளில் இனி உலகம் இருக்கும்! 🌹

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

IND vs SA ODI: தொடரை வென்ற இந்தியா!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்றது. இத்டொடரில் முதல் ஆட்டம் ராஞ்சியில் நடைபெற்றது.

Topics

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

IND vs SA ODI: தொடரை வென்ற இந்தியா!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்றது. இத்டொடரில் முதல் ஆட்டம் ராஞ்சியில் நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories