April 26, 2025, 8:43 AM
29.5 C
Chennai

உங்கள் சந்தேகங்களை நீக்கும் சமையல் குறிப்புக்கள்!

samaiyal tips
samaiyal tips

ஓட்டலில் சுடுவதுபோல் கல்தோசை

பச்சரிசியையும், உளுந்தையும் மூன்றுக்கு ஒன்று என்கிற விகிதத்தில் போட்டு ஒன்றாகவே 2 மணி நேரம் ஊற வைத்து நைஸாக அரைத்துக் கொள்ளவும். தோசைக்கல்லில் மாவை ஊற்றிய பிறகு எண்ணெயை விட்டு தோசையைத் திருப்பிப் போட்டதும் லேசாக தோசையின் மீது தண்ணீர் தெளித்து, உடனே மறுபடியும் திருப்பிப் போட்டு கல்லிலிருந்து எடுத்துவிடவும்.

kal thosai

இட்லி ‘புஸ்புஸ்’ என்றும், சாஃப்ட்டாகவும் வருவதற்கு

உளுந்து அரைக்கும்போது அவ்வப்போது கொஞ்சம் கொஞ்ச மாக நீர் ஊற்றி பொங்க பொங்க அரைக்க வேண்டும். ஒரு டேபிள்ஸ்பூன் ஊற வைத்த வெந்தயம், 2 டீஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்து அரைத்த£ல் இட்லி சூப்பராக வரும்.

idly

ஆப்பம் மிருதுவாக வர

புழுங்கல் அரிசி மற்றும் பச்சரிசி தலா ஒரு ஆழாக்கு, ஒரு கைப்பிடி உளுந்து, ஒரு டீஸ்பூன் வெந்தயம் சேர்த்து ஊற வைத்து… அரைக்கும்போதுதேங்காய் துருவல் ஒரு கப், வெந்த சாதம் ஒரு கரண்டி சேர்த்து அரைத்து சுட்டால்… ஆப்பம் சூப்பரப்பு!

aappam

சப்பாத்தி சுடுவதற்கும், தோசை சுடுவதற்கும் தனித்தனி தோசைக்கல்

ALSO READ:  தை அமாவாசை தர்ப்பணம்; மந்திரங்கள் - செய்யும் முறை!

அதிக கனமுள்ள கல்லை தோசைக்கும்,கன மில்லாத மெலிதான கல்லை சப்பாத்திக்கும் உபயோகிக்க வேண்டும்.

puri

பூரி உப்பி வர
மாவு பிசையும்போது கோதுமை மாவுடன் ஒரு டேபிள்ஸ்பூன் மக்காச்சோளமாவும், அரை டேபிள்ஸ்பூன் ரவையும், அரை டீஸ்பூன் சர்க்கரையும் சேர்த்துக் கலக்கி, அந்த மாவை பூரியாக செய்தால்… உப்பலான பூரி

pasalai

குழந்தைகளை பசலைக் கீரை சாப்பிட வைக்க
வதக்கிய பசலைக் கீரையுடன் சிறிது பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து சப்பாத்தி மாவோடு சேர்த்துப் பிசைந்து சப்பாத்தியாக சுட்டு, சாஸ் உடன் பரிமாறினால்.. தட்டு ‘சட்’டென்று காலியாகிவிடும்.

vadai

வடை மாவு சரியான பதத்தில் இருக்கிறதா தெரிந்து கொள்ள்
அரைத்த மாவை கொஞ்சம் கிள்ளி, ஒரு கிண்ணத்திலுள்ள தண்ணீரில் போடவும். மாவு தண்ணீரில் மிதந்தால்… சரியான பதம். மிகவும் தண்ணீராகஅரைத் திருந்தால் மாவு பிரிந்து தண்ணீரில் கலந்துவிடும். கெட்டியாக அரைத் திருந்தால்… தண்ணீரில் மூழ்கி விடும்!

ketti thir

தயிர் கெட்டியாக கிடைக்க
பாலை சுண்டக் காய்ச்சுங்கள். ஆறவிடும்போது… வெதுவெதுப்பான சூட்டுக்குவந்ததும், ஒரு துளி மோர்விட்டு, 4, 5 முறை நன்கு ஆற்றி (காபிக்கு ஆற்றுவதுபோல) மண்சட்டியில் தோய்க்க… நல்ல கெட்டித் தயிர் கிடைக்கும்.

ALSO READ:  சம்ஸ்க்ருத ந்யாயமும் விளக்கமும்: கபி முஷ்டி ந்யாய:
kuuttu

கூட்டு நல்ல சுவையில் இருக்க
எந்த வகை கூட்டு செய்தாலும் ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய் துருவல், 2 பச்சை மிளகாய், கொஞ்சம் சீரகம் சேர்த்து அரைத்துக் கலக்கினால், கூட்டு செம டேஸ்ட்டு!

mor kuzhambu
mor kuzhambu

மோர்க்குழம்பு திக்காக வர,
மோர்க்குழம்புக்கு அரைக்கும் பொருட்களோடு பச்சைக் கடுகு ஒரு டீஸ்பூன் சேர்த்து அரைத்து வடிகட்டி கெட்டித் தயிரில் போட்டு, சின்ன வெங்காயம் 4, பூண்டு 2 பல் இரண்டையும் சற்று கரகரப்பாக அரைத்துச் சேர்க்கவும். இதனுடன் கடுகு, மிளகு, கறிவேப்பிலை பெருங்காயம் தாளித்து, 2 முறை நுரைத்து வரும்போது அடுப்பிலிருந்து இறக்கி வேறொரு பாத்திரத்தில் ஊற்றி 2, 3 முறை ஆற்றவும் (காபிக்கு ஆற்றுவது போல). இப்படிச் செய்தால், மோர்க்குழம்பு திக்காக இருக்கும். அதிக நேரம் அடுப்பில் வைத்தால் நீர்த்துப் போய்விடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்.26 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

IPL 2025: கடைசி இடத்தில் தொடரும் தோனியின் சிஎஸ்கே

ஐ.பி.எல் 2025 – சென்னை vs ஹைதராபாத் – எம்.ஏ. சிதம்பரம்...

‘இஸ்ரோ’ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் காலமானார்!

'இஸ்ரோ' முன்னாள் தலைவர் கி.கஸ்தூரி ரங்கன் தம் 84ம் வயதில், வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, பெங்களூருவில் ஏப்.25 இன்று காலமானார்.

பயங்கரவாதிகளின் முதுகெலும்பை முறிக்கத் தேவையான சக்தி..!

இந்நிலையில், நேற்று பீகார் மாநிலத்துக்குச் சென்றிருந்த பிரதமர் மோடி, அங்கே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், காஷ்மீர் படுகொலைச் சம்பவத்தில்

IPL 2025: கோலி அதிரடி; பெங்களூருக்கு சிறப்பான வெற்றி!

பெங்களூரு அணியின் பந்துவீச்சாளர் ஹேசல்வுட் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இன்றைய ஆட்டத்தில் இரண்டு

Topics

பஞ்சாங்கம் ஏப்.26 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

IPL 2025: கடைசி இடத்தில் தொடரும் தோனியின் சிஎஸ்கே

ஐ.பி.எல் 2025 – சென்னை vs ஹைதராபாத் – எம்.ஏ. சிதம்பரம்...

‘இஸ்ரோ’ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் காலமானார்!

'இஸ்ரோ' முன்னாள் தலைவர் கி.கஸ்தூரி ரங்கன் தம் 84ம் வயதில், வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, பெங்களூருவில் ஏப்.25 இன்று காலமானார்.

பயங்கரவாதிகளின் முதுகெலும்பை முறிக்கத் தேவையான சக்தி..!

இந்நிலையில், நேற்று பீகார் மாநிலத்துக்குச் சென்றிருந்த பிரதமர் மோடி, அங்கே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், காஷ்மீர் படுகொலைச் சம்பவத்தில்

IPL 2025: கோலி அதிரடி; பெங்களூருக்கு சிறப்பான வெற்றி!

பெங்களூரு அணியின் பந்துவீச்சாளர் ஹேசல்வுட் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இன்றைய ஆட்டத்தில் இரண்டு

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ஶ்ரீரங்கம் சித்திரை தேரோட்டம்!ஆண்டாள் சூடிய பட்டு வஸ்திரம் அனுப்பி வைப்பு!

ஏப் 25 ஶ்ரீரங்கம் சித்திரை திருவிழா தேரோட்டம்! ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிய பட்டு வஸ்திரம் அனுப்பி வைப்பு!

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories