லெஃப்ட் ஓவர் போண்டா
தேவையானவை:
மிகுந்துவிட்ட ஏதேனும் ஒரு பொரியல் – ஒரு கப், வெங்காயம், தக்காளி (நறுக்கவும்), – தலா ஒன்று
சாட் மசாலா – சிறிதளவு, ரஸ்க்தூள் அல்லது பிரெட் தூள் – கால் கப்,
நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு, எண்ணெய் – 250 கிராம்,
உப்பு -சிறிதளவு.
மேல்மாவுக்கு:
மைதா மாவு, சோள மாவு (சேர்த்து) – 150 கிராம்,
உப்பு, மிளகாய்த்தூள் – சிறிதளவு, பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை.
செய்முறை:
வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு தக்காளி, வெங்காயத்தை வதக்கி… பொரியல், சாட் மசாலா, உப்பு, நறுக்கிய கொத்தமல்லித்தழை, பிரெட் (அ) ரஸ்க் தூள் சேர்த்து நன்கு கிளறி, சிறிய உருண்டைகளாக உருட்டவும்.
மேல் மாவுக்கு கொடுத்துள்ளவற்றுடன் தண்ணீர் சேர்த்து தோசை மாவைவிட சற்று தளர்வாக கரைக்கவும். செய்து வைத்த உருண்டைகளை மாவில் தோய்த்து, சூடான எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.