அம்மை நோயில் கண்களைக் காப்பாற்ற…
அம்மை வந்துள்ள காலத்தில் கண்களைப் பாதுகாக்காவிடில் பூ விழுந்து பார்வை போய்விடும். அதனால் கொத்துமல்லி (தனியா) கஷாயத்தினால் கண்களை அடிக்கடி அலம்பி வர நோயின் கடுமையில் இருந்து கண்களை பாதிக்காமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.
உடல் நலம் பலம் பெற…
120 எருக்கன் பூவை எடுத்து உலர்த்தி அதனுடன் சாதிக்காய், லவங்கம், சாதிபத்திரி, வகைக்கு ஒரு தோலா சேர்த்து பன்னீர் விட்டு அரைத்து குன்றிமணியளவு மாத்திரைகளாகச் செய்து நிழலில் உலர்த்தி வைத்துக் கொண்டு ஒரு நாளைக்கு ஒரு மாத்திரை பாலோடு சாப்பிட்டு வர உடல் நல்ல பலம் பெறும்.