
உறுதியானது உள்ளாட்சித் தேர்தல்! டிசம்பர் 2ந் தேதி உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்படும் – உச்ச நீதிமன்றத்தில் மாநில தலைமை தேர்தல் ஆணையம் மனு!
தமிழக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், டிச.13 ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அறிக்கை வெளியிட வேண்டும். 9 மாவட்டங்களில் மறுசீரமைப்பு நடத்திய பிறகு உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
இதனால் டிச.2 ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பாணை வெளியிடப்படும் என தமிழக தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது.
ஆக, உள்ளாட்சி தேர்தலை எப்போது நடத்துவோம் என்பதை டிசம்பர் – 2 ஆம் தேதி கூறுவோம் என்று தமிழக தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ள நிலையில், அதற்குள் வேறு ஒரு காரணம் சிக்காமலா போய்விடும்? – என்று கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர் சமூக வலைத்தளங்களில்!
முன்னதாக, உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவிடாமல் தடுப்பதாக அதிமுக., மீது திமுக.,வும், திமுக., குறித்து அதிமுக.,வும் மாறி மாறி குற்றச்சாட்டுகளைத் தெரிவித்து வருகின்றன.