நிதியாண்டு நீட்டிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
நடப்பு நிதியாண்டு வரும் ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்படுவதாக சில ஊடகங்களில் வெளியான செய்திக்கு மத்திய நிதித்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இந்திய முத்திரைச் சட்டத்தில் செய்யப்பட்ட வேறு சில திருத்தங்கள் தொடர்பான அறிவிப்பு சில ஊடகங்களில் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதியாண்டு வழக்கம்போல் மார்ச் 31ஆம் தேதியும் முடிவடைவதாகவும், நீட்டிக்கப்படவில்லை என்றும் நிதித்துறை அமைச்சகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக 2020 – 2021 ஆம் நிதியாண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதிக்குப் பதில், ஜூலை ஒன்றாம் தேதி தொடங்கும் என செய்தி வெளியானது.
இதனிடையே பிப்ரவரி ஒன்றாம் தேதியுடன் முடிந்த வாகனங்களுக்கான அனுமதி, ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றை புதுப்பிக்க ஜூன் 30ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.