ஏப்.5 இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின்விளக்குகளை அணைத்து அகல்விளக்கு, டார்ச் லைட், மொபைல் டார்ச் அடித்து ஒளி ஏற்ற மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இன்று காலை 9 மணிக்கு ஒரு வீடியோ வெளியிடுவேன் என்று பிரதமர் மோடி அறிவித்திருந்தார். அதன்படி இன்று வீடியோவில் சில தகவல்களைச் சொல்லியுள்ளார். மேலும் நாட்டு மக்களுக்கு ஒரு வேண்டுகோளும் விடுத்துள்ளார்.
அந்த வீடியோவில்… ஊரடங்கு உத்தரவிற்கு நாட்டு மக்கள் காட்டி வரும் ஆதரவிற்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ள மோடி, ஏப்ரல் 5ஆம் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் வீட்டின் அனைத்து மின் விளக்குகளையும் அனைத்துவிட்டு, அகல் விளக்கு அல்லது மொபைல் டார்ச் லட்டை அடிக்கவும் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
மேலும், ஊரடங்கை வெற்றிகரமாக கடைபிடிக்கும் அனைத்து இந்தியர்களுக்கும் நன்றி என்றும், இந்த ஊரடங்கு சமயம் நிச்சயம் ஒருநாள் கடந்துவிடும். இது 130 கோடி இந்திய மக்களின் சக்தியை நிரூபிக்கும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
மக்கள் அனைவரும் இணைந்து கொரோனாவை கட்டுப்படுத்த முயற்சி எடுத்துள்ளீர்கள்! நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கொரோனாவுக்கு யுத்தம் நடத்தியதற்கு நன்றி என்று, கொரோனா தொடர்பாக பிரதமர் மோடி வீடியோ வெளியிட்டு நாட்டு மக்களிடம் உரை
நிகழ்த்தினார்.
நாம் எடுக்கும் நடவடிக்கைகளை உலக நாடுகள் பின்பற்றி வருகின்றன என்று குறிப்பிட்டுள்ள மோடி, நாம் தனி ஆட்கள் இல்லை, 130 கோடி மக்களில் ஒன்றிணைந்துள்ளோம்! நெருக்கடியான நேரத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்தது பாராட்டத்தக்கது… கொரோனாவை எதிர்கொள்வதில் உலகிற்கே இந்தியா முன்மாதிரியாக உள்ளது என்று நாட்டு மக்களை பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
ஏப்ரல் 5ஆம் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் வீட்டின் அனைத்து மின் விளக்குகளையும் அனைத்துவிட்டு, அகல் விளக்கு அல்லது மொபைல் டார்ச் லட்டை அடிக்கவும்! 5ஆம் தேதி இரவு 9 மணிக்கு பால்கனியில் நின்று செல்போன் விளக்குகளை ஒளிர விடுங்கள். வரும் ஞாயிற்றுக்கிழமை இரவு நாட்டு மக்கள் அனைவரும் கொரோனாவுக்கு எதிரான மஹாசக்தியை வெளிப்படுத்துவோம்.
சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் – ஒன்று கூடி விளக்கு ஏற்ற கூடாது! நாம் எடுக்கும் நடவடிக்கைகளை உலக நாடுகள் பின்பற்றி வருகின்றன! அனைவரும் ஒன்றிணைந்து கொரோனவை வீழ்த்துவோம் என்று பிரதமர் மோடி அதில் தெரிவித்துள்ளார்.
A video messsage to my fellow Indians. https://t.co/rcS97tTFrH
— Narendra Modi (@narendramodi) April 3, 2020