தில்லியில் தப்ளிக் இ ஜமாத் கூட்டத்தில் பங்கேற்று கொரோனா தொற்று காரணமாக எம்.எம்.ஜி. மாவட்ட மருத்துவமனையில் தனிமைப் படுத்தப் பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப் பட்டவர்கள், அங்குள்ள நர்சுகளைப் பார்த்து ஆபாச சைகைகள் செய்தும், டிரவுசர் உள்ளிட்ட ஆடைகளை அவிழ்த்து விட்டு உலவுவதும் பெரும் சர்ச்சையாகியுள்ளது. இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸார் எஃப்.ஐ.ஆர்., பதிவு செய்துள்ளனர்.
கடந்த மார்ச் மாத மத்தியில், தில்லி நிஜாமுதீன் பகுதியில், தப்ளிக் – இ – ஜமாத் அமைப்பின் தலைமை அலுவலகத்தில் கூட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, வெளிநாடுகளில் இருந்து பலர் சுற்றுலா விசாவில் வந்துள்ளனர். ஆயினும் அவர்கள் அனைவரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவே வந்துள்ளதாகத் தெரியவந்தது. வெளிநாட்டுப் பங்கேற்பாளர்களால், இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட உள்நாட்டினர் பலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்தக் கூட்டத்தை முடித்துக் கொண்டு, உள்நாட்டினர் பலரும் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பி விட்டனர். எனவே அவர்கள் மூலம் அவர்கள் குடும்பத்தினருக்கும், நாடு முழுமைக்க்கும் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, தில்லி காஸியாபாத் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட தில்லி தப்ளிக் – இ – ஜமாத் உறுப்பினர்கள் 6 பேர் மருத்துவமனைக்குள் நிர்வாணமாக சுற்றித் திரிவதாகவும், நர்சுகளைப் பார்த்து ஆபாசமாகவும் அநாகரிகமாகவும் நடந்து கொள்வதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் காஸியாபாத் எம்.எம்.ஜி. மாவட்டமருத்துவமனை சார்பில், போலீசுக்கு புகார் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. அந்தப் புகார் கடிதத்தில்… கொரோனா தொற்றுடன் காஸியாபாத் மருத்துவமனையில் தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள தப்ளிக் இ ஜமாத் பங்கேற்பாளர்கள், ஆடைகளின்றி நிர்வாணமாக சுற்றித் திரிகின்றனர். மோசமான பாடல்களை கேட்கின்றனர். நர்ஸ்களிடம் ஆபாசமான மற்றும் அறுவெறுக்கத்தக்க செய்கை செய்கின்றனர். ஊழியர்களிடம் சிகரெட் பீடி கேட்டு தொல்லை செய்கின்றனர். இவர்களுக்கு சிகிச்சை அளிப்பது மிகவும் கடினம் என்று அந்தப் புகாரில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இதையடுத்து நேற்று நள்ளிரவு மருத்துவமனைக்குச் சென்ற போலீஸார், அவர்களிடம் விசாரணை நடத்தி 6 பேர் மீது எப்.ஐ.ஆர்., பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து, அவர்களை வேறு மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்தனர்.
Ghaziabad: FIR has been registered against persons from Tablighi Jamat who are in quarantine at MMG District Hospital for ‘walking around the ward without their trousers on and making lewd gestures towards the nurses’.