கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரானா வைரஸ் நோய்த் தொற்று கண்டறியப்பட்ட 5 நபர்களின் தொடர்புகளை ஆய்வு செய்ததில் கொரானா நோய்த் தொற்று கண்டறியப்பட்டவர்கள் 165 நபர்களுடன் தொடர்பில் இருந்தது கண்டறியப் பட்டுள்ளது.இந்த 165 நபர்களும் தற்போது வீட்டு தனிமைப் படுத்துதலில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்று கூறப் பட்டுள்ளது.
இதனிடையே, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் அலட்சியத்தால் நாகர்கோவிலில் கரோனா கூடுதலாக பரவ வாய்ப்பு உள்ளது என்று புகார் கூறுகின்றனர் அங்குள்ளவர்கள்.
நான்கு நிருபர்கள் அவரிடம் சென்று, வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் வீட்டில் தனிமைப் படுத்தும் ஸ்டிக்கர் ஓட்டினீங்க… ஆனால் அவர்கள் வெளியில் சுற்றித் திரிகிறார்கள்… என்று மாவட்ட ஆட்சியர் அலுவத்தில் வைத்து சொன்னார்கள். அப்போது அவர் அந்த நிருபர்களிடம் வீடியோ ஆதாரம் இருக்கா..? என்று கேட்டார். அது மட்டும் அல்லாமல், நீங்க முதல்ல தூரமா நின்னு பேசுங்க என்று சொல்லி அவமானப்படுத்தினார்.
தாங்கள் கண்டதைச் சொன்ன நிருபர்கள் வார்த்தைகளை அலட்சியபடுத்திய இந்த ஆணையர் பொதுமக்கள் சொன்னால் கேட்பாரா? என்று கேள்வி எழுப்புகின்றனர் பொதுமக்கள்.
இந்நிலையில், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் முகத்தில் முககவசம் அணியாமல், வெறுமனே சென்று பேசிக் கொண்டிருக்கும் படத்தை வெளியிட்டு, ஆணையரே இப்படி செய்யலாமா என்று கேள்வி கேட்டு வருகின்றனர்.
முகக் கவசம் அணிந்து பொது மக்களுக்கு எடுத்துக்காட்டாக அதுவும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் அரசு அதிகாரியாக இருக்க வேண்டிய ஆணையரே, முகக்கவசம் அணியாதபோது வேறு யார் அணிவார்? அவர் சொல்லி யார் கேட்பார்? அதுவும் அவர் நிற்கும் இடம் எது தெரியுமா? கரோனாவால் பாதிக்கப்பட்ட டிஸ்லரி சாலையில் உள்ள தெரு தான் என்ரு கூறுகின்றனர் பொதுமக்கள்