IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ipl 2026 season - 2026
  • முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது. இதில், மார்ச்சு 28 முதல் மே 31ஆம் தேதி வரை மொத்தம் 74 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. சென்ற வருடம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பஞ்சாப் கிங்க்ஸ் அணியை வென்று சாம்பியன் பட்டத்தை வென்றது.

இந்த வருடம் 10 அணிகள் போட்டியில் கலந்துகொள்கின்றன. இதில் சென்னை சூப்பர் கிங்க்ஸ், கொல்கொத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்க்ஸ் ஆகிய அணிகள் குரூப் A பிரிவில் உள்ளன. மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், குஜராத் டைடன்ஸ், டெல்லி கேபிடல்ஸ், லக்னே சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய ணிகள் குரூப் B பிரிவிலும் உள்ளன.

குழுப் போட்டி வடிவமானது, 2023 IPL தொடரில் பின்பற்றப்பட்டதைப் போன்றே அமையுமாறு அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அணியும் தங்கள் குழுவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறையும், மற்றொரு குழுவில் உள்ள அணிகளுடன் தலா இரண்டு முறையும் மோதும்.

குழு நிலைப் போட்டிகள் நிறைவடைந்த பிறகு, ஒட்டுமொத்தப் புள்ளிகளின் அடிப்படையில் முன்னிலையில் உள்ள முதல் நான்கு அணிகள் ‘பிளே-ஆஃப்’ (Playoffs) சுற்றுக்கு முன்னேறும். இந்தச் சுற்றில், முதல் இரண்டு இடங்களைப் பிடித்த அணிகள் ஒன்றுடன் ஒன்று மோதும் (இப்போட்டி “Qualifier 1” என அழைக்கப்படும்); அதேபோல, எஞ்சிய இரண்டு அணிகளும் ஒன்றுடன் ஒன்று மோதும் (இப்போட்டி “Eliminator” என அழைக்கப்படும்). Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணியானது நேரடியாக இறுதிப் போட்டிக்குத் தகுதிபெறும்.

அதேவேளையில், அப்போட்டியில் தோல்வியடையும் அணிக்கு இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற மற்றொரு வாய்ப்பு வழங்கப்படும்—அவ்வணியானது Eliminator போட்டியில் வெற்றி பெற்ற அணியுடன் மோத வேண்டும் (இப்போட்டி “Qualifier 2” என அழைக்கப்படும்).

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

இந்த Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணியானது இறுதிப் போட்டிக்கு முன்னேறும். அணிகள் வென்றுள்ள கோப்பைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் அவை பல்வேறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு (seeded) வகைப்படுத்தப்பட்டன.

முதல் ஆட்டம் பெங்களூருவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் இடையே மார்ச்சு 28ஆம் தேதி நடந்தது. முதலில் ஆடிய ஹைதராபாத் அணி 9 விக்கட் இழப்பிற்கு 201 ரன் எடுத்தது. இஷான் கிஷன் 38 பந்துகளில் 80 ரன் எடுத்தார்.

இதில் 8 ஃபோர்கள் மற்றும் 5 சிக்சர்கள் அடித்தார். அனிகேத் வர்மா 18 பந்துகளில் 43 ரன் (3 ஃபோர் மற்றும் 4 சிக்சர்கள்) எடுத்தார். ஹென்றி கிளாசன் 22 பந்துகளில் 31 ரன் (2 ஃபோர் மற்றும் 1 சிக்சர்) எடுத்தார். பெங்களூரு அணியில் டஃப்ஃபி, ஷெப்பர்ட் தலா மூன்று விக்கட்டுகள், புவனேஷ் குமார், அபிநந்தன் சிங், சுயேஷ் ஷர்மா தலா ஒரு விக்கட் எடுத்தனர்.

ஆனால் இந்த ஸ்கோரை பெங்களூரு அணி 15.4 ஓவர்களில் எடுத்து அபார வெற்றி பெற்றது. விராட் கோலி ஆட்டமிழக்காமல் 69 ரன் (5 ஃபோர், 5 சிக்சர்), தேவதத் படிக்கல் 61 ரன் (7 ஃபோர், 4 சிக்சர்), ரஜத் படிதார் 31 ரன் (2 ஃபோர், 3 சிக்சர்) அடித்தனர். ஆட்டநாயகனாக ஜேகப் டஃப்ஃபி அறிவிக்கப்பட்டார்.

ALSO READ:  பெட்ரோல் சிக்கனம்; வெளிநாட்டு பயணம், தங்கம் வாங்குதலைத் தவிர்க்கவும்; பிரதமர் மோடி வேண்டுகோள்!

இரண்டாவது ஆட்டம் மும்பையில் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையே மார்ச்சு 29ஆம் தேதி நடந்தது. முதலில் ஆடிய கொல்கொத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 220 ரன் எடுத்தது. தொடக்க வீரர்கள் அஜிங்க்யா ரஹானே 67 ரன்( 3 ஃபோர், 5 சிக்சர்) மற்றும் ஃபின் ஆலன் 37 ரன்(6 ஃபோர், 2 சிக்சர்) அபாரமான தொடக்கம் தந்தனர்.

அங்க்ரிஷ் ரகுவன்ஷி 51 ரன்( 6 ஃபோர், 2 சிக்சர்) மற்றும் ரிங்கு சிங் 33 ரன் (4 ஃபோர்) அருமையாக விளையாடினர். பின்னர் ஆடிய மும்பை அணி 19.1 ஓவர்களில் 224 ரன் எடுத்து அபார் வெற்றி பெற்றது. ரியன் ரிக்கிள்டன் 81 ரன் (4 ஃபோர், 8 சிக்சர்), ரோஹித் ஷர்மா 78 ரன் (6 ஃபோர், 6 சிக்சர்) அடித்தனர். இவரிகளின் ஆட்டம் மும்பையின் வெற்றியை உறுதி செய்தது.

மூன்றாவது ஆட்டம் மார்ச்சு 30ஆம் தேதி கௌஹாத்தியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கும் ராஜஸ்தான் ராய்ல்ஸ் அணிக்கும் இடையே நடந்தது. முதலில் ஆடிய சென்னை அணி 19.4 ஓவர்களில் 127 ரன் எடுத்தது. இஅந்த அணியில் ஜேமி ஓவர்டன் மட்டும் சிறப்பாக ஆடி 43 ரன் சேர்த்தார். மற்றாவர்கள் சரியாக ஆடவில்லை. ராஜஸ்தான் அணியில் ஆர்ச்சர், பர்ஜர், ஜதேஜா ஆகியோர் தலா 2 விக்கட் எடுத்தனர்.

ALSO READ:  நல்ல வாய்ப்பை வீணடித்து விட்டார்கள் இண்டி கூட்டணியினர்!

பின்னர் ஆடிய ராஜஸ்தான் அணி 12.1 ஓவர்களில் 2 விக்கட் இழப்பிற்கு 128 ரன் எடுத்து வெற்றிபெற்றது. ராஜஸ்தான் அணியின் வைபவ் சூரியவம்ஷி 17 பந்துகளில் 52 ரன் அடித்து வெற்றிக்கு வழி வகுத்தார். சென்ற ஐபிஎல் போட்டியில் கடைசி இடத்தைப் பெற்ற சென்னை அணி இந்த முறை தொடக்க ஆட்டத்திலேயே சொதப்பியது ரசிகர்களை ஏமாற்றியது.

நான்காவது ஆட்டம்மார்ச்சு 31ஆம் தேதி சண்டிகரில் குஜராத் அணிக்கும் பஞ்சாப் அனிக்கும் இடையே நடந்தது. முதலில் ஆடிய குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கட் இழப்பிற்கு 162 ரன் எடுத்தது.

இரண்டாவதாக ஆடிய பஞ்சாப் அணி 19.1 ஓவர்களில் 7 விக்கட் இழப்பிற்கு 165 ரன் எடுத்து வெற்றி பெற்றது. பஞ்சாப் அணியின் கூப்பர் கன்னோலி 72 ரன் எடுத்து வெற்றிக்கு வழிவகுத்தார். அவர் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.        

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA உலகக் கோப்பை கால்பந்து 2026: முதல் இரு சுற்றுகள்!

இரண்டாம் சுற்றான ரவுண்ட் 32 ஜூன் 28ஆம் தேதி தொடங்கி, ஜூலை 3ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.

பஞ்சாங்கம் ஜூலை 03 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

ஏ.வி.ஆர் ஸ்வாமியின் மறைவு ஒரு பொற்காலத்தின் முடிவைக் குறிக்கிறது. தில்லை திருச்சித்ரகூடமான சிதம்பரம் திருத்தலத்திற்கு அவர் ஆற்றிய கைங்கரியங்களும் அவரது நூல்களும் என்றும் நிலைத்து நின்று நல்வழிப்படுத்தும்.

குமரியில் மட்டும் ஏன் இப்படி ‘பகீர்’ புரளிகள்?

குமரி மாவட்டத்தின் சில கடற்கரை கிராமங்களில் கடற்கரை மணலில் மோனோசைட் போன்ற கனிமங்கள் இயற்கையாகவே கலந்துள்ளன. இந்தக் கனிமங்கள் இருப்பதால் அந்தப் பகுதியில் புற்றுநோய் அதிகமாக வருகிறது என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால், அந்தக் குறிப்பிட்ட காரணம் அறிவியல் ரீதியாக உறுதிப்படுத்தப்பட்ட முடிவாக நிரூபிக்கப்படவில்லை.

மதமாற்ற விவாதம் … மீண்டும்!

மத்திய உள்துறை அமைச்சரகம் கடந்த வாரம் வெளிநாட்டு நன்கொடை (FCRA) விதிகளில் சில திருத்தங்களை அறிவித்துள்ளது. வெளிநாட்டிலிருந்து நன்கொடை பெறும் என் ஜி ஓ க்களின் ( அரசு சாரா அமைப்புகள்) செயல்பாடுகளை வரைமுறை படுத்துவது அதன் நோக்கம்.

Topics

FIFA உலகக் கோப்பை கால்பந்து 2026: முதல் இரு சுற்றுகள்!

இரண்டாம் சுற்றான ரவுண்ட் 32 ஜூன் 28ஆம் தேதி தொடங்கி, ஜூலை 3ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.

பஞ்சாங்கம் ஜூலை 03 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

ஏ.வி.ஆர் ஸ்வாமியின் மறைவு ஒரு பொற்காலத்தின் முடிவைக் குறிக்கிறது. தில்லை திருச்சித்ரகூடமான சிதம்பரம் திருத்தலத்திற்கு அவர் ஆற்றிய கைங்கரியங்களும் அவரது நூல்களும் என்றும் நிலைத்து நின்று நல்வழிப்படுத்தும்.

குமரியில் மட்டும் ஏன் இப்படி ‘பகீர்’ புரளிகள்?

குமரி மாவட்டத்தின் சில கடற்கரை கிராமங்களில் கடற்கரை மணலில் மோனோசைட் போன்ற கனிமங்கள் இயற்கையாகவே கலந்துள்ளன. இந்தக் கனிமங்கள் இருப்பதால் அந்தப் பகுதியில் புற்றுநோய் அதிகமாக வருகிறது என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால், அந்தக் குறிப்பிட்ட காரணம் அறிவியல் ரீதியாக உறுதிப்படுத்தப்பட்ட முடிவாக நிரூபிக்கப்படவில்லை.

மதமாற்ற விவாதம் … மீண்டும்!

மத்திய உள்துறை அமைச்சரகம் கடந்த வாரம் வெளிநாட்டு நன்கொடை (FCRA) விதிகளில் சில திருத்தங்களை அறிவித்துள்ளது. வெளிநாட்டிலிருந்து நன்கொடை பெறும் என் ஜி ஓ க்களின் ( அரசு சாரா அமைப்புகள்) செயல்பாடுகளை வரைமுறை படுத்துவது அதன் நோக்கம்.

பஞ்சாங்கம் ஜூலை 02 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 01 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

மக்கள் மனங்களை ஈர்த்த ‘நீண்ட கால’ ஒரே பிரதமர்!

நீங்கள் மோடியை விரும்பலாம் அல்லது வெறுக்கலாம். ஆனால் 'மோடி என்ற தகுதி முத்திரை'யை அலட்சியப்படுத்த முடியாது. மாபெரும் அதிகாரம் பெரும் பொறுப்புடன் சேர்ந்தே வருகிறது. மக்கள் நேரடியாக அவருக்கு அளித்துள்ள பெரும்பான்மை ஆதரவுக்கு முழு நியாயம் செய்வதாக

Entertainment News

Popular Categories