உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஒரே நாளில் 172 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிதாக கொரோனா உறுதியான 172 பேரில் 42 பேர் தில்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்று உத்தரப் பிரதேச அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,301 ஆக அதிகரித்துள்ளது கொரோனா பாதிப்பில் 335 பேருடன் மஹாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. 309 பேருடன் தமிழகம் 2வது இடத்தில் உள்ளது.
இதுவரை கொரோனாவால், 56 பேர் உயிரிழந்துள்ளனர். அதே நேரம், 157 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
உலகளவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 10 லட்சமாக அதிகரித்துள்ளது. சர்வதேச அளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 51 ஆயிரத்தை தாண்டியது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 2 லட்சத்து 10 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர்.
இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், இன்று காலை அதற்காக சில ஆலோசனைகளைச் சொல்லி, பிரதமர் மோடி ஒரு வீடியோ வெளியிட்டார். தொடர்ந்து, கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பாக விளையாட்டு பிரபலங்கள் 40 பேருடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையில் சச்சின், கங்குலி, பி.வி.சிந்து, ராணி ராம்பால் உள்ளிட்டோர் காணொலி மூலம் பங்கேற்றனர்.