மும்பையில் ஒரு மருத்துவமனையின் மருத்துவர் உட்பட 6 மருத்துவ ஊழியர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள பாட்டியா மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவர் உட்பட 6 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆறு பேரும் பாட்டியா மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அனைவரும் நலமுடன் இருக்கிறார்கள் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.