கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுவோரை தாக்கினால் 7 ஆண்டுகள் வரை சிறை! பிரகாஷ் ஜவடேகர்!

இந்தியா பொது தகவல்கள்
jewadekar - 2026

மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்களை தாக்கினால் 6 மாதங்கள் முதல் 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கும் அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதார ஊழியர்களுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவரும் பொருட்டு மத்திய அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது.

அதன்படி, கொரோனா தடுப்புப் பணியில் உள்ள மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்களை தாக்கினால் 6 மாதங்கள் முதல் 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கும் அவசர சட்டம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.

அதன்படி, மருத்துவர்கள், செவிலியர்கள், இதர சுகாதாரப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தினால் அவர்கள் மீது குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்தார்.

மத்திய அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜவடேகர் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.