ஏப்ரல் 24,25 தேதிகளில் நிவாரணப் பொருட்கள் வாங்க டோக்கன்! அரசு அறிவிப்பு!

தமிழகம்
ration - 2026

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. முதலில் ஏப்ரல் 14 வரை இருந்த ஊரடங்கு, மீண்டும் மே மாதம் 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வேலைகளுக்கு செல்ல முடியாமல், வருமானமின்றி தவித்து வருகின்றனர். அதனால் மக்களுக்கு மீண்டும் நிவாரண பொருட்கள் வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது.

இந்த முறை வரும் 24, 25 ஆகிய தேதிகளில் வழங்கப்படும் என்றும் மக்களின் கூட்ட நெரிசலை தடுக்க வீடு வீடாக சென்று டோக்கன்கள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்த டோக்கனில் ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ துவரம்பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய், அரிசி உள்ளிட்ட இலவச ரேஷன் பொருட்கள் எப்போது வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருக்கும் என்றும் அதன் படி மக்கள் ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை மக்கள் முறையாக பின்பற்ற வேண்டும் என்றும் விலையில்லாமல் அரசின் அனைத்து நிவாரண பொருட்களையும் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

ALSO READ:  பழனி கோயில் நில விவகாரத்தில் கைதானவர் மரணம்; சந்தேகம் எழுவதாக இந்து முன்னணி குற்றச்சாட்டு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.