
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் நாடு முழுவதும் கடந்த மாதம் 25-ம் தேதி முதல் லாக்டவுன் கொண்டுவரப்பட்டது. முதல் இரு கட்ட லாக்டவுன் 3-ம் தேதியுடன் முடிந்துவிட்டது. 3-வது கட்ட லாக்டவுனில் சில கட்டுப்பாடுகள் தளர்வுடன் நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. அதற்கான வழிகாட்டி நெறிமுறைகளையும் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இதைப் பின்பற்றி பல்வேறு மாநிலங்களும் லாக்டவுன் தளர்வை கொரோனா பாதிப்பு குறைந்த மாவட்டங்களில் அமல்படுத்தி, மக்கள் நடமாட்டத்துக்கு அனுமதித்துள்ளனன. ஆந்திரப் பிரதேச அரசு சிவப்பு மண்டலங்கள் தவிர்த்து பச்சை, ஆரஞ்சு மண்டலங்களில் மதுக்கடைகளை நேற்று திறந்தன. ஆந்திர அரசு சார்பில் 3,468 மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 2,345 மதுக்கடைகள் நேற்று திறக்கப்பட்டன.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட லாக்டவுன் காரணமாக ஆந்திர மாநிலத்தில் 40 நாட்களுக்குப் பின் மதுக்கடைகள் நேற்று திறக்கப்பட்டன. ஒரே நாளில் ரூ.40 கோடிக்கு மதுவகைகள் விற்பனையாகின.
இந்நிலையில் ஆந்திராவில் மதுபானக கடைகளை திறக்க கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. விசாகப்பட்டினத்தில் மதுக்கடைகளை திறப்பதற்கு எதிர்ப்பு பல இடங்களில் பெண்கள் போராட்டம் நடத்தினர். கொரோனா ஊரடங்கால் குடி பழக்கம் குறைந்து வந்தநிலையில் வருவாய்க்காக மாநில அரசு மதுபானக் கடைகளை திறக்கக்கூடாது எனக்கூறி அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
Andhra Pradesh: Women in Visakhapatnam today held a protest against the liquor shops opened in the district by the state government amid #COVID19 lockdown. A protester says, "Vegetable markets stay open for only 3 hours but liquor shops are allowed to remain open for 7 hours". pic.twitter.com/KdQgMGldnX
— ANI (@ANI) May 5, 2020