கோயம்பேடு மார்க்கெட்டை தொடர்ந்து ஆவின் பால் பண்ணையிலும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கும் பகுதிகள் என்பதால் தட்டுப்பாடு ஏற்படுமோ என்று கேள்வி எழுகிறது.
சென்னையை அடுத்த மாதவரம் ஆவின் பால் பண்ணையில் ஏற்கனெவே 2 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் பதிவேடு நபர்கள் 4 பேர், லோடு மேன்கள் 2 பேர் என மேலும் 6 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மாதவரம் ஆவின் பால் பண்ணையில் கொரோனா வைரஸ் பாதித்த நபர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன் அவர்கள் மூலம் வேறு யாருக்கேனும் கொரோனா வைரஸ் பரவியிருக்கிறதா என்ற பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.