
மூத்த RSS சங்க பிரச்சாரகரும், பாரதீய மஸ்தூர் சங்கத்தின் (BMS).முன்னாள் தேசியத் தலைவருமான திரு.R.வேணுகோபால் ஜி (95) அவர்கள் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் கொச்சி காரியாலயத்தில் காலமானார். 1925 ஆம் வருடம் நிலாம்பூர் ராஜ குடும்பத்தில் பிறந்தவர். பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் தனது உயர் கல்வியை கற்றுத் தேர்ந்துள்ளார்.
1946 முதல் சங்க பிரச்சாரக். தத்தோபந்த் தெங்கடி தொடர்பு காரணமாக ஸ்வயம்சேவகர் ஆனார். துவக்கத்தில் ஜில்லா பிரச்சாரக், பின்பு ‘கேசரி’ வார இதழ் பணி, அதைத்தொடர்ந்து சிறிது காலம் பாரதீய ஜன சங்க வேலை, பின்னர் பாரதீய மஸ்தூர் சங்க பணி.
கேரளத்தில் பி.எம்.எஸ். துவக்ககால வேலை, மாநில செயலாளர், மாநில அமைப்பு செயலாளர், தொடர்ந்து அகில பாரத செயலாளர், அகில பாரத செயல் தலைவர் என பி.எம்.எஸ். தேசிய அளவிலான வளர்ச்சிக்கு பாடுபட்டவர்.
தொழிற்சங்க வேலையில் நீண்டகால அனுபவம் பெற்றவர். சிறந்த சிந்தனையாளர், நல்ல பேச்சாளர், மிகவும் எளிமையானவர்.
பாரத தொழிலாளர்கள் சார்பாக ஜெனீவாவில் நடைபெறும் சர்வதேச தொழிலாளர் மாநாட்டில் கலந்து கொண்டுள்ளார்.
ஒரு முறை அம்மாநாட்டில் அமெரிக்காவின் முயற்சியால் கொண்டு வரப்பட்ட தொழிலாளர் விரோத தீர்மானத்தை தனி மனிதராக தனது வாதத்திறமையால் தோற்கடித்தார்.
முதுமை காரணமாக கடந்த சில வருடங்களாக கொச்சி சங்க காரியாலயத்தில் தங்கி இருந்தார்.
ஒரு முன்னுதாரணமான பிரச்சாரக். அவரது மறைவு நமக்கு மிகவும் வருத்தம் தரக்கூடியது. திரு.R.வேணுகோபால் ஜி அவர்களுக்கு இதயபூர்வமான அஞ்சலிகள்