- முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
எலிமினேட்டர் ஆட்டம்
பெங்களூரு vs ராஜஸ்தான் – 22.05.2024
இன்று முதல் இறுதிப்போட்டிக்கான தகுதி ஆட்டம் அகமதபாத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்றது.
பெங்களூரு அணியை (172/8, ரஜத் படிதர் 34, விராட் கோலி 33, மஹிபால் லோமர் 32, காமரூன் கிரீன் 27, டியு பிளேசிஸ் 17, ஆவேஷ் கான் 3/44, அஷ்வின் 2/19) ராஜஸ்தான் அணி (யஸஷ்வீ ஜெய்ஸ்வால் 41, டாம் கோலர் 20, சஞ்சு சாம்சன் 11) 8 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
பூவாதலையா வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. இதனால் பெங்களூரு அணி முதலில் மட்டையாட வந்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் விராட் கோலி (24 பந்துகளில் 3 ரன், 3 ஃபோர், 1 சிக்சர்), மற்றும் டியு பிளேசிஸ் (14 பந்துகளில் 17 ரன்) நல்ல தொடக்கம் தந்தனர்.
மூன்றாவதாகக் களமிறங்கிய காமரூன் கிரீன் (21 பந்துகளில் 27 ரன், 2 ஃபோர், 1 சிக்சர்) கோலிக்கு கம்பனி கொடுத்தார். ஆனால் கிளன் மேக்ஸ்வெல் (பூஜ்யம் ரன்), தினேஷ் கார்த்திக் (11 ரன்), ஸ்வப்னில் சிங் (ஆட்டமிழக்காமல் 9 ரன்), கரண் ஷர்மா (5 ரன்) ஆகியோர்இன்று விரைவில் ஆட்டமிழந்தனர்.
ஆயினும் ரஜத் படிதர் (22பந்துகளில் 34 ரன், 2 ஃபோர், 2 சிக்சர்) மற்றும் மஹிபால் லோமர் (17 பந்துகளில் 32 ரன்)இருவரும் அணிக்கு ரன் சேர்க்க முயன்றனர். இருப்பினும் அஷ்வினின் அருமையான சுழப் பந்துவீச்சால் பெங்களூரு அணி அதிரடியாக ரன் சேர்க்க முடியவில்லை. இதனால் அந்த அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கட் இழப்பிற்கு 172 ரன் எடுத்தது.
173 ரன் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு யசஷ்வீ ஜெய்ஸ்வால் (30 பந்துகளில் 45 ரன், 8 ஃபோர்) மற்றும் டாம் கோலர் (15 பந்துகளில் 20 ரன், 4 ஃபோர்) சிறப்பான தொடக்கம் தந்தனர்.
இவர்களுக்குப் பின்னர் ஆடவந்த சஞ்சு சாம்சன் (13 பந்துகளில் 17 ரன், 1 சிக்சர்) மற்றும் ரியன் பராக் (26 பந்துகளில் 36 ரன், 2 ஃபோர், 2 சிக்சர்) இருவரும் இணைந்து ஆடி, வேகமாக ரன் சேர்த்தனர். இதன் பின்னர் ஆடவந்த துருவ் ஜுரல் (8 ரன்) இன்று ஜொலிக்கவில்லை.
ஆயினும் ஷிம்ரன் ஹெட்மயர் (14 பந்துகளில் 26 ரன், 3 ஃபோர், 1 சிக்சர்), ரொவ்மன் போவல் (8 பந்துகளில் 16 ரன், 2 ஃபோர், 1 சிக்சர்) இருவரும் அணியை 19 ஓவர்களில் தேவையான் ரன் (174/6) எடுத்து, அந்த அணி 4 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்தனர்.
ராஜஸ்தான் அணி வெற்றிபெற்ற போதிலும் இடையில் தடுமாறினர். சஞ்சு சாம்சன் தினேஷ் கார்த்திக்கால் ஸ்டம்பிங் செய்யப்பட்டபோதும் துருவ் ஜுரல் ரன் அவுட் ஆனபோது அந்த தடுமாற்றம் தெரிந்தது.
இருந்தாலும் 19ஆவது ஓவரில் ரொவ்மன் போவல் முதலிரண்டு பந்துகளில் அடித்த இரண்டு ஃபோர்களும், கடைசி பந்தில் அடித்த ஒரு சிக்சரும் வெற்றியை 19ஆவது முடிவிலேயே உறுதி செய்தன.
ராஜஸ்தான் அணியின் சுழல் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் தனது சிறப்பான பந்துவீச்சிற்காக ஆட்டநாயகன் விருது பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணி இரண்டாவது இறுதி தகுதி ஆட்டத்தில் நுழைகிறது. 24.05.2024 அன்று சென்னையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன.
இந்த ஆட்டத்தில் வெற்றிபெறும் அணியுடன் கொல்கொத்தா அணி 26.05.2024 அன்று சென்னையில் விளையாடும்.