
திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தான மூத்த மணியக்காரர் பேஷ்கார், சிறப்புப் பணி அதிகாரி, “பால சேஷாத்ரி’ (75) (சிறப்புப் பணியில் உள்ள அதிகாரி), எனப்படும் “டாலர் சேஷாத்ரி’ விசாகப்பட்டினத்தில் திங்கள்கிழமை இன்று அதிகாலை காலமானார்.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ஆன்மீக நிகழ்ச்சியான கார்த்திகதீபோத்ஸவம் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சிறப்புப் பணி அதிகாரி, டாலர் சேஷாத்ரி ஞாயிற்றுக்கிழமை நேற்று விசாகப்பட்டினத்துக்குச் சென்றிருந்தார்.
சேஷாத்ரிக்கு நேற்று இரவில் மாரடைப்பு ஏற்பட்டது. திங்கள்கிழமை அதிகாலையில் அவர் உயிர் பிரிந்தது. கடந்த ஜூலை 31, 2006 அன்று பணி ஓய்வு பெற்ற பால சேஷாத்ரி, அன்றிலிருந்து பணி நீட்டிப்பில் இருந்து வந்தார்.

டாலர் சேஷாத்ரி கடந்த 50 ஆண்டுகளாக திருமலையில் வேங்கடேசப் பெருமாளுக்கு சேவை செய்து வந்தார். கோவில் சடங்குகள் மற்றும் நிர்வாகத்தை கையாளும் ஆகம சாஸ்திரத்தின் மீது அவர் சிறந்த ஆளுமையைக் கொண்டிருந்தார். இது ஜூலை 31, 2006 அன்று அவர் ஓய்வு பெற்ற பிறகும் திருமலை திருப்பதி பாலாஜி கோவிலில் சேவை செய்ய அவரை வழிவகுத்தது.
ஓய்வு பெற்ற பிறகும் 15 ஆண்டுகளாக அவரது சேவை நீட்டிக்கப்பட்டது. அந்த வகையில் அவர் கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் பாலாஜியின் சேவையில் இருந்துள்ளார்.
அவரது மறைவுக்கு ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அதிர்ச்சியும் வருத்தமும் தெரிவித்துள்ளார். 1978 ஆம் ஆண்டு முதல் TTD உடன் இருந்த சேஷாத்ரியை இழந்து வாடும் குடும்ப உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் தனது இரங்கலைத் தெரிவித்தார்.