விஷப்பாம்புகளில் மிகவும் நீளமான ராஜ நாகம் அல்லது கரு நாகம். அதை கண்டாலே நமது உடல் நடுங்கும் வகையில், பயங்கரமான தோற்றத்தையும், கடுமையான விஷத்தையும் கொண்டது.
அந்த நிலையில் இரு ராஜ நாகங்களுக்கு இடையே கடுமையான சண்டை ஏற்பட்டால், எப்படி இருக்கும்
சமூக ஊடகங்களில் விலங்குகள் தொடர்பான ஆயிரக்கணக்கான வீடியோக்கள் தொடர்ந்து வைரலாகி வரும் நிலையில், ராஜ நாகங்களுக்கு இடையிலான கடும் சண்டை வீடியோ ஒன்றும் மிகவும் வைரலாகி வருகிறது
காட்டில் இருந்த பெண் ராஜ நாகத்தை கவர்ந்திழுக்க, இரு ராஜநாகங்கள் இடையே கடுமையான போர் தொடங்கியது. பெண் பாம்பின் முன்னிலையில் இரண்டு பாம்புகள் மோதிக் கொண்டது.
இந்தியாவின் காடுகளில் ஏராளமான ராஜ நாகங்கள் உள்ளன. அதை ஆவணப்படம் எடுக்க வெளிநாடுகளில் இருந்து மக்கள் வருகிறார்கள்.
அதில் பெண் நாகம் மற்றும் ஆண் நாகம் குறித்த ஒரு சம்பவத்தை கேமராவில் படம் பிடித்த பிறகு, அதை யூடியூப்பில் பதிவேற்றப்பட்ட நிலையில், இந்த வீடியோ பெரிய அளவில் வைரலாகியுள்ளது.
பெண் ராஜா நாகப்பாம்பை கவர ஒரு ஆண் ராஜா நாகப்பாம்பு நீண்ட நேரம் போராடுவதை வீடியோவில் காணலாம், இரண்டு ஆண் ராஜா நாகப்பாம்புகளும் பரஸ்பரம் சுமார் 5 மணி நேரம் சண்டையிட்டுள்ளது..
இறுதியில், இரண்டு ஆண் ராஜா நாகப்பாம்புகளில் ஒன்று தோல்வியை ஒப்புக் கொண்டு காட்டிற்குள் விலகிச் செல்கிறது,
வென்ற ஆண் ராஜா நாகப்பாம்பு இப்போது பெண் நாகப்பாம்புடன் இருக்கலாம். இந்த சண்டைக் காட்சி கேமராவில் பதிவாகியுள்ளது.
வைரலாக பரவி வரும் இந்த வீடியோவை ஸ்மித்சோனியன் சேனல் யூடியூப்பில் பதிவேற்றம் செய்துள்ளது, இதுவரை இந்த வீடியோவை சுமார் 2 லட்சம் பேர் பார்த்துள்ளனர், இந்த வைரல் வீடியோவை முழுமையாக பார்த்து மக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
யூடியூப்பில் உள்ள ஸ்மித்சோனியன் சேனல் (Smithsonian Channel) வீடியோவின் விளக்கத்தில், ‘இரண்டு ஆண் ராஜா நாகப்பாம்புகள் காதலை அடைய நடத்திய போராட்டம்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
வெற்றியாளரை வாழ்த்துவதற்காக அருகில் காத்திருக்கும் பெண் ராஜ நாகப்பாம்பு, தனது துணையை வரவேற்க தயாராக உள்ளது.