வருமான வரி தொடர்பான புதிய விதிமுறைகள் ஏப்ரல் முதல் அமலுக்கு வந்துள்ளன
கிரிப்டோகரன்சிகள் மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு 30% வரி விதிக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது . இந்த 30% கிரிப்டோ வரி ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
கிரிப்டோ மட்டுமல்லாமல் NFT போன்ற டிஜிட்டல் சொத்துகளுக்கும் 30% வரி உண்டு.
PF கணக்குதாரர்களின் கணக்கில் ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் பங்களிப்பு இருந்தால், வட்டித் தொகைக்கு வரி விதிக்கப்படும்.
இதில், அரசு ஊழியர்களுக்கு மட்டும் 5 லட்சம் ரூபாய்க்கு மேல் பங்களிப்பு இருந்தால் வட்டி தொகைக்கு வரி விதிக்கப்படும்.
அப்டேட்டட் வருமான வரி ரிட்டன்களை (Updated income tax returns) தாக்கல் செய்ய அனுமதிக்கப்படும் என கடந்த பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இதன்படி இனி அப்டேட்டட் வருமான வரி ரிட்டன்களை தாக்கல் செய்யலாம்.
ஒரு மதிப்பீட்டு ஆண்டு (Assessment year) முடிந்தபின் இரண்டு ஆண்டுகள் வரை அப்டேட்டட் ரிட்டன் தாக்கல் செய்யலாம். ஏற்கெனவே நீங்கள் செய்த தவறுகள், விடுபட்ட தகவல்களை அதில் சரிசெய்து கொள்ளலாம்.
வீட்டுக் கடன் வாங்கியோருக்கு கூடுதல் வரி சலுகைகளை வழங்குவதற்காக 2019-20ஆம் நிதியாண்டில் பிரிவு 80ஈஈஏ (Section EEA) அறிமுகப்படுத்தப்பட்டது.
கடந்த மார்ச் 31ஆம் தேதி வரை இந்த சலுகைகள் நீட்டிக்கப்பட்டன. இதற்கு மேல் பிரிவு 80EEA கீழ் சலுகைகள் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது