
PM Modi performs Rajya Abhishek of Bhagwaan Shree Ram in Ayodhya, Uttar Pradesh
தமிழில்: ராமஸ்வாமி சுதர்ஸன்
ஜய் ஜய் சியாராம். நிகழ்ச்சியிலே பங்கெடுக்கும், உத்தர பிரதேசத்தின் ஆளுனர், திருமதி ஆனந்திபேன் படேல், இங்கே மக்கள் நேசிக்கும், கர்மயோகி, முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்களே, அனைத்து பூஜிக்கத்தக்க புனிதர்களே, மேலும் இங்கே இருக்கும் வணக்கத்துக்குரிய சான்றோர்களே, பக்தகோடிகளே, சகோதர சகோதரிகளே. ஸ்ரீ ராம்லல்லாவின் தரிசனமும், அதன் பிறகு, ராஜாராமனின் அபிஷேகமும், இந்த சௌபாக்கியம், ஸ்ரீராமனின் கிருபையால் மட்டுமே சாத்தியமாகும். பகவான் ராமனுக்கு அபிஷேகம் ஆகும் போது, நமக்குள்ளே, பகவான் ராமனின் ஆதர்சங்களும், அவருடைய நற்பண்புகளும், மேலும் திடப்படுகின்றன. ராமனுடைய அபிஷேகத்தோடு கூடவே, அவர் காட்டிய பாதை, மேலும் தெளிவாகத் தெரிகிறது. அயோத்தி நகரின் துகள்கள் தோறும், ஒவ்வோர் அணுவிலும், அவருடைய தத்துவம் பொதிந்திருக்கிறது. இன்று அயோத்தியின் ராம்லீலா வாயிலாக, சரயூ நதி ஆரத்தி வாயிலாக, தீபோத்சவம் வாயிலாக, மேலும் இராமாயணத்தின் மீதான, ஆய்வு மற்றும் ஆராய்ச்சிகள் வாயிலாக, இந்தக் காட்சி, உலகெங்கிலும் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. எனக்கு சந்தோஷமாக இருக்கிறது, இந்த அயோத்தியின் வாசிகள், ஒட்டுமொத்த உத்திரபிரதேசம் மற்றும் உலகத்து மக்கள், இந்தப் பிரவாகத்தின் பங்குதாரர்களாக இருக்கிறார்கள், தேசத்திலே, மக்கள் நலன் என்பதற்கு வேகம் அளித்து வருகின்றார்கள். நான் இந்தச் சந்தர்ப்பத்திலே, உங்களுக்கும், நாட்டுமக்களுக்கும், மேலும் உலகெங்கிலும் பரவியிருக்கும், ராம பக்தர்களுக்கும் கூட, இதயபூர்வமான பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் பிரபு ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தி பிறந்த இடத்திலிருந்து, நாட்டுமக்கள் அனைவருக்கும், இன்று சோட்டீ தீபாவளி நன்னாளுக்கும், நாளைய தீபாவளி திருநாளுக்கும் இதயபூர்வமான நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே, இந்த முறை தீபாவளி, எப்படிப்பட்ட வேளையில் வந்திருக்கிறது என்றால், இப்போது நாம், சிலகாலம் முன்பாகத் தான், நாம் சுதந்திரம் அடைந்த, 75 ஆண்டுக்காலத்தை நிறைவு செய்திருந்தோம், நாம் சுதந்திரத்தின் அமிர்த மஹோத்சவத்தைக் கொண்டாடி விட்டு, இப்போது சுதந்திரத்தின் அமுதகாலத்திலே, பகவான் ராமனுடைய மனவுறுதிப்பாட்டு ஆற்றல், தேசத்தைப் புதிய சிகரங்களுக்கு இட்டுச் செல்லும். பகவான் இராமன், தன்னுடைய கூற்றினிலே, தன்னுடைய எண்ணங்களிலே, தன்னுடைய ஆட்சியிலே தன்னுடைய நிர்வாகத்திலே, எந்த நற்ப்பண்புகளை பதித்தாரோ, அது அனைவரையும் உள்ளடக்கிய அனைவருக்குமான முன்னேற்றம், மேலும் அனைவரின் முயற்சி அனைவரின் நம்பிக்கையின், ஆதாரமும் ஆகும். அடுத்த 25 ஆண்டுகளிலே, வளர்ச்சியடைந்த பாரதம் என்ற பேரவாவோடு, முன்னேறிக் கொண்டிருக்கும் நம் நாட்டு மக்களுக்கு, ஸ்ரீ இராமனின் ஆதர்சம், ஒரு கலங்கரை விளக்கம் போன்றதாகும். இது நமக்கு, கடினத்திலும் கடினமான இலட்சியங்களை, அடைவதற்குத் தேவையான வல்லமையை அளிக்கும்.
நண்பர்களே, இந்த முறை செங்கோட்டையிலிருந்து, நாட்டுமக்கள் அனைவரிடமும், ஐந்து உறுதிப்பாடுகளைச் செயல்படுத்த வேண்டும் என்று அறைகூவல் விடுத்திருந்தேன். இந்த ஐந்து உறுதிப்பாடுகளின் ஆற்றல், ஒரு தத்துவத்தோடு இணைந்திருகிறது என்றால், அது தான், பாரதநாட்டு மக்களினுடைய கடமைகள். இன்று அயோத்தி நகரினுடைய, தீபோத்சவத்தின் இந்தப் புனிதமான வேளையில், நாம், இந்த உறுதிப்பாடுகளை மீண்டும் நினைவில் கொள்ள வேண்டும். ஸ்ரீ இராமனிடமிருந்து, எந்த அளவுக்குக் கற்க முடியுமோ, அந்த அளவுக்குக் கற்க வேண்டும். பகவான் இராமன், மரியாதா புருஷோத்தமன் என்று அழைக்கப்படுகிறார். மரியாதா, கண்ணியத்தோடு வாழவும் கற்பிக்கிறது, கண்ணியத்தை பிறருக்கு அளிக்கவும் கற்பிக்கிறது. மேலும் மரியாதா, எந்தப் பாடத்தைக் கற்பிக்கிறது என்றால், அந்தப் பாடம், கடமையாற்றுதல் தான். நம்முடைய தர்ம சாஸ்திரங்களிலே கூறப்பட்டிருக்கிறது, ராமோ, விக்ரஹவான் தர்ம:. அதாவது, இராமன், சாக்ஷாத் தர்மத்தின், ஞானி, கடமையாற்றுதலின் உயிர்ப்புடைய சொரூபமாவான். பகவான் இராமன், இந்தப் பூமியில் வாழ்ந்த காலத்திலே, அப்போது அவர், கடமைகளுக்கே மிக அதிகமாக முக்கியத்துவம் கொடுத்தார். அவர் அரசகுமாரனாக இருந்த போது, அப்போது ரிஷிகளுடைய, ஆசிரமங்களையும் குருகுலங்களையும், பாதுகாக்கும் கடமையை நிறைவேற்றினார். ராஜ்யாபிஷேக காலத்திலே, ஸ்ரீராமன், தந்தைக்குக் கீழ்ப்பணிந்து நடக்கும் மகனாக நடந்து கொண்டார். 22.32 அவர் தந்தையுடைய… குடும்பத்தாருடைய ஆணைக்கு முக்கியத்துவம் அளித்து, ராஜ்ஜியத்தைத் துறந்து, வனத்திற்குச் செல்வதை, தனது கடமை என்று கருதி ஏற்றுக் கொண்டார். அவர் காட்டிலே இருந்த வேளையில், வனவாசிகளை அரவணைத்துக் கொண்டார். ஆசிரமங்களுக்குச் செல்லும் வேளையில், தாய் சபரியின் ஆசிகளைப் பெற்றார். அவர் அனைவரையும் அரவணைத்துச் சென்று, இலங்கையில் வெற்றிவாகை சூடினார். அதே போல சிம்மாசனத்தில் அமரும் போது, வனத்தின் அவரது கூட்டாளிகள், இராமனுக்கு அணுக்கமாக நிற்கின்றார்கள். ஏனென்றால், இராமன், யாரையும் கைவிட்டு விடுவதில்லை. இராமன், கடமை உணர்வினை, புறக்கணித்துச் செல்வதில்லை. அந்த வகையிலே, இராமன், பாரதத்தின் எந்த உணர்வின் அடையாளம் என்றால், என்ன உரைக்கிறது என்றால், நம்முடைய உரிமைகள், நாம் நமது கடமைகளை ஆற்றும் போதே, தாமே நிறைவேறி விடுகின்றன. ஆகையினாலே, நாம் நமது கடமைகளின்பால் அர்ப்பணிப்போடு இருக்க வேண்டியது அவசியம். தற்செயல்நிகழ்வைப் பாருங்கள்!! நம்முடைய அரசியலமைப்புச் சட்டத்தின், எந்த மூலப் பிரதியிலே, பகவான் இராமன், அன்னை சீதை, மேலும் இலக்குவனின் படங்கள் பொறிக்கப்பட்டிருக்கின்றனவோ, அரசியலமைப்புச் சட்டத்தின் அந்தப் பக்கமும் கூட, அடிப்படை உரிமைகள் பற்றிப் பேசுகின்றது. அதாவது, நமது அதிகாரங்கள் குறித்து அரசியலமைப்புச் சட்டத்தின் மேலும் ஒரு உத்திரவாதம், இதோடு கூடவே, பிரபு இராமன் வடிவிலே, கடமைகளின் சாசுவதமான கலாச்சார புரியவைத்தல். அந்த வகையிலே, நாம் எந்த அளவுக்கு, கடமைகளின் உறுதிப்பாட்டினை உறுதிப்படுத்துகிறோமோ, இராமனைப் போன்ற ராஜ்ஜியத்தை உருவாக்கும் கனவு, அந்த அளவுக்கு மெய்ப்பாடு ஆகும்.
நண்பர்களே, சுதந்திரத்தின் அமுதக்காலத்திலே, தேசமானது, நம்முடைய பாரம்பரியம் மீதான பெருமிதம், அடிமைத்தன மனோபாவத்திலிருந்து விடுதலைக்கான அறைகூவலை விடுத்தது. இந்த உத்வேகமே நமக்கு, பிரபு இராமனிடமிருந்தே கிடைக்கிறது. அவர் தானே கூறினார், ஜனனீ ஜன்மபூமிஸ்ச, ஸ்வர்காதபி கரீயஸி என்று. அதாவது, அந்த பொன் கொழிக்கும் இலங்கைக்கு எதிராக, குறைவாகப் பேசவில்லை. மாறாகக் கூறினார், தாயும் தாய்நாடும், சுவர்க்கத்தையும் விடச் சிறப்பானது என்றார். இதே தன்னம்பிக்கையின் துணையாலே தான், அவர் அயோத்திக்குத் திரும்ப வரும் வேளையில், அயோத்தி குறித்துக் கூறப்படுகிறது, நவக்கிரஹ நிகர அனிக்க பனாயி, ஜனு த்யேய அமராவதி ஆயி. அதாவது, அயோத்தியின் ஒப்பீடு, சுவர்க்கத்தோடு செய்யப்படுகிறது. ஆகையால் சகோதர சகோதரிகளே, தேசத்தின் நிர்மாணம் பற்றிப் பேசும் போது, தேசத்தின் பொருட்டு குடிமக்களின் சேவையுணர்வு இருக்கிறது, அப்படித்தான், அப்போது தான், தேசம் மிகப்பெரும் உச்சங்களைத் தொட முடிகிறது. முன்னொரு காலத்திலே, இராமனைப் பற்றி, நமது கலாச்சாரம், மற்றும் நாகரீகம் குறித்து, பேசுவது கூட விலக்கப்பட்டு வந்தது. இதே தேசத்திலே, இராமன் வாழ்ந்தது குறித்தும், வினா எழுப்பப்பட்டு வந்தது. அதன் விளைவு என்னவாக இருந்தது? நம்முடைய தார்மீக கலாச்சாரப் பெருமை, மற்றும் மாட்சி, பின் தங்கிக் கொண்டே போனது. நாம் அயோத்தியின் இதே ராம்காட்டிற்கு வந்திருக்கிறோம். இதன் அவலநிலையைப் பார்த்து மனம் துக்கத்தில் ஆழ்ந்து போகும். காசியின் கஷ்டநிலையும் அதன் மாசும், அதன் சந்துகளும், மனதில் வலியை ஏற்படுத்தும். எந்த இடங்களை நமது அடையாளங்களாக, நமது இருப்பின் எடுத்துக்காட்டுகளாய் கருதினோமோ, அவற்றின் மோசமான நிலையைக் கண்டு, தேசத்தின் உயர்வுக்கான மனோபலம், தானாகவே சிதைந்து போய் விடும்.
நண்பர்களே, கடந்த எட்டு ஆண்டுகளாக, தேசமானது, ஈனமான உணர்வு என்ற தளைகளை அறுத்தெறிந்தது. நாங்கள் பாரதத்தின் தீர்த்தங்களின் மேம்பாடு குறித்த ஒருங்கிணைந்த எண்ணத்தை முன்வைத்தோம். நாங்கள் இராமன் கோயில் மற்றும் காசி விசுவநாதர் ஆலயம் தொடங்கி, கேதார்நாத், மஹாகால் மஹாலோக் வரையான, கொடூரமான புறக்கணித்தலால் சிதைவுற்ற, நமது நம்பிக்கையின் தலங்களுக்குப் புத்துயிர் ஊட்டத் தொடங்கினோம். ஒரு ஒருங்கிணைந்த முயற்சி, எப்படி, ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கான காரணமாக முடியும், என்பதை தேசம், இன்று காண்கிறது. இன்று அயோத்தியின் மேம்பாட்டிற்காக, ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவிடப்பட்டிருக்கிறது. சாலைகளின் மேம்பாடு செய்யப்படுகிறது, நாற்சந்திகள் படித்துறைகள் அழகூட்டப்படுகின்றன, புதிய கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படுகின்றன. அதாவது அயோத்தியின் முன்னேற்றம், புதிய உயர்வுகளைக் காண்கிறது. அயோத்தியின் ரயில் நிலையத்தோடு கூடவே, உலகத்தரம் வாய்ந்த விமானநிலையமும் ஏற்படுத்தப்படவிருக்கின்றது. அதாவது இணைப்பு மற்றும் சர்வதேச சுற்றுலாவால் ஆதாயம், இந்தப் பகுதி முழுவதற்கும் கிடைக்கும். அயோத்தியின் மேம்பாட்டுடன் கூடவே, இராமாயணச் சுற்றின் மீதும் பணிகள் நடந்தேறி வருகின்றன. அதாவது, அயோத்தியிலிருந்து தொடங்கப்பட்டிருக்கும் வளர்ச்சிப் பயணம், இதன் விரிவாக்கம்….. அக்கம்பக்கத்திலிருக்கும் பகுதி முழுமையிலும் நடைபெறும்.
நண்பர்களே, இந்தக் கலாச்சார வளர்ச்சியின் பல சமுதாய மற்றும், சர்வதேச அளவிலான இலக்குகளும் இருக்கின்றன. சுங்கவேபூர் தலத்திலே, நிஷாத்ராஜ் பூங்கா நிறுவப்பட்டு வருகின்றது. இங்கே பகவான்…. இராமன், மற்றும் நிஷாத் ராஜனுடைய, 51 அடி உயரத்திலான, கண்ணாடியாலான திருவுருவச் சிலை நிறுவப்படும். இந்தச் சிலைகள், இராமாயணத்தின், அனைவருக்குமான சமத்துவம் என்ற செய்தியையும் கூட, அனைவரிடமும் கொண்டு சேர்க்கும். இது நம்மிடத்திலே, சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் பற்றிய உறுதிப்பாட்டை ஏற்படுத்தும். இதைப் போன்றே, அயோத்தியிலே, இராணி ஹோ நினைவுப் பூங்காவும் நிறுவப்பட்டு இருக்கிறது. இந்தப் பூங்கா, பாரதம் மற்றும் தென் கொரியா, தேசங்களின் சர்வதேசத் தொடர்புகளை மேலும் வலுப்படுத்த, இருநாடுகளின் கலாச்சாரத் தொடர்புகளை வளப்படுத்த, ஒரு சாதனமாகத் திகழும். நீங்களே சிந்தனை செய்து பாருங்கள்!! இந்த வளர்ச்சி காரணமாக, சுற்றுலாவுக்கான இத்தனை சாத்தியக்கூறுகளாலே, நமது இளைஞர்களுக்கு, வேலைக்கான எத்தனை வாய்ப்புகள் உருவாகும் பாருங்கள்!! அரசாங்கம், இயக்கும் இராமாயண விரைவுரயிலானது, இது ஆன்மீகச் சுற்றுலா என்ற நோக்கிலே, ஒரு மிகச் சிறப்பான தொடக்கமாகும். இன்று தேசத்திலே, சார்தாம் திட்டமாகட்டும், புத்தச் சுற்று ஆகட்டும், அல்லது பிரசாத் திட்டத்தின்படி நடைபெற்றுவரும் வளர்ச்சிப் பணிகளாகட்டும், நம்முடைய இந்த கலாச்சார உன்னதம், புதிய பாரதத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியின் மங்கலத் தொடக்கமாகும்.
நண்பர்களே, இன்று அயோத்தி நகரிடத்திலே என்னுடைய, ஒட்டுமொத்த தேசத்திடமும் கூட, ஒரு விண்ணப்பம் இருக்கிறது. ஒரு பணிவான வேண்டுகோளும் கூட. அயோத்தியா, பாரதத்தின் மகத்தான கலாச்சார பாரம்பரியத்தின் பிரதிபலிப்பாகும். இராமன், அயோத்தியின் அரசகுமாரனாக விளங்கினான். ஆனால் அவரை தேசம் முழுவதிலும் ஆராதிக்கிறார்கள். அவரளிக்கும் உத்வேகம், அவருடைய தவம் தியாகம், அவர் காட்டிய மார்க்கம், நாட்டுமக்கள் அனைவருக்குமானவை. பகவான் இராமன் சுட்டிய ஆதர்சங்களின்படி நடப்பது, பாரதீயர்களான நம்மனைவரின் கடமையாகும். அவருடைய ஆதர்சங்களை நாம் தொடர்ந்து வாழ்ந்து காட்ட வேண்டும். வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும். மேலும் இந்த ஆதர்சப் பாதையில் பயணிப்போம். அயோத்தி வாசிகளிடம், இரண்டு பொறுப்புகள் இருக்கின்றன. உங்களுக்கு டபுள் ரெஸ்பான்சிபிலிடி இருக்கிறது அயோத்தியின் சகோதர சகோதரிகளே. அந்த நாள் வெகு தொலைவில் இல்லை, அப்போது உலகெங்குமிருந்து, இங்கே வருவோரின் எண்ணிக்கை, பலமடங்கு அதிகரித்து விடும். எங்கே அணுஅணுதோறும் இராமன் உறைகின்றானோ, அங்கே இருக்கும் மக்கள் எப்படி இருக்க வேண்டும், அங்கே இருப்போரின் மனங்கள் எப்படி இருக்க வேண்டும், இதுவும் கூட, அதே அளவு முக்கியமானது. எப்படி இராமபிரான், அனைவரையும் அரவணைத்தாரோ, அதைப் போலவே, அயோத்திவாசிகளும் கூட, இங்கே வரக்கூடிய ஒவ்வொருவரையும் நம்மவர் என்றெண்ணி, அன்போடு வரவேற்க வேண்டும். அயோத்தியின் அடையாளம், கடமையாற்றும் நகரம் என்பதாகவும் இருக்க வேண்டும். அயோத்தியா, அனைத்தையும் விடத் தூய்மையானதாக இருக்க வேண்டும். இங்கே சாலைகள் விரிவானவையாக இருக்க வேண்டும். ஈடற்ற அழகோடு இருக்க வேண்டும். இதன் பொருட்டு, யோகிஜியும் அவரது அரசாங்கமும், தொலைநோக்குப் பார்வையோடு, பல முயல்வுகளை மேற்கொண்டுள்ளார்கள் பல பணிகளை ஆற்றி வருகிறார்கள். ஆனால் இந்த முயற்சிகளிலே, அயோத்திவாசிகளுடைய ஒத்துழைப்பு, மேலும் அதிகரிக்கும் போது, அயோத்தியின் தெய்வீகத்தன்மையும், மேலும் சிறப்பாக மெருகேறும். என்னுடைய விருப்பமெல்லாம், எப்போதெல்லாம், குடிமக்களின் கண்ணியம் பற்றிப் பேசப்படுகிறதோ, குடிமக்களின் ஒழுங்குமுறை பற்றிப் பேசப்படுகிறதோ, அயோத்தி நகரவாசிகளின் பெயர், அனைவரை விடவும் முன்னே பேசப்பட வேண்டும். நான் அயோத்தியின் புண்ணிய பூமியிலே, பிரபு ஸ்ரீ இராமனிடம் இதையே வேண்டுகிறேன், இந்த தேசத்தின் ஒவ்வொரு குடிமகனின் கடமையுணர்வாலே, பாரதத்தின் வல்லமை, சிகரங்களைத் தொட வேண்டும். புதிய பாரதத்திற்கான நமது கனவுகள், மனித நலன்களுக்கான சாதனமாக ஆகட்டும். இந்த நல்விருப்பங்களோடு, நான் என் உரையை நிறைவு செய்கிறேன். ஒரு முறை மீண்டும், நாட்டுமக்கள் அனைவருக்கும், தீபாவளிக்கான பலப்பல வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன். உங்கள் அனைவருக்கும் பலப்பல நன்றிகள். போலோ….. நன்றி மக்களே.