புது தில்லி: கடந்த 2 ஆண்டுகளாக ரயில்வேயில் பணி அமர்த்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாததால் 90 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து கடந்த மாதம் எஞ்சின் டிரைவர்கள், தொழில்நுட்பத் துறை, தண்டவாள சோதனைக் குழு உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் வரையில் இதுவரை 2 கோடியே 50 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இது ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகையை விட அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.