
கோயமுத்தூர்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததால் பொள்ளாச்சி எம்.பி-க்கு கூரியர் மூலம் எலி மருந்தை பார்சலில் அனுப்பியுள்ளார் ஒருவர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததால் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் மகேந்திரனுக்கு வாக்காளர் ஒருவர் கூரியர் மூலம் எலி மருந்து அனுப்பி வைத்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தற்கொலைக்குக் கூடத் தயார் என அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததால் பொள்ளாச்சி கிணத்துக்கடவைச் சேர்ந்த பெரியார் மணி என்பவர் தமது தொகுதிக்குட்பட்ட எம்.பி. மகேந்திரனின் தில்லி முகவரிக்கு எலி மருந்தை அனுப்பி வைத்துள்ளார்.
இந்த மருந்தை அவர் குடிப்பாரா என்று சமூக தளங்களில் அதற்குள் விவாதங்கள் களைகட்ட, ஒரு எம்.பி.யை தற்கொலைக்குத் தூண்டி, எலி மருந்தைக் கொடுத்துள்ள ’பெரியார்’ குறித்து பேச்சுகளும் களை கட்டியுள்ளன.



