ஸ்டாலின் மிசா கைதி இல்லை!? பொன்முடி சொன்ன பதிலும் வெச்சி செய்யும் நெட்டிசன்களும்!

மிசா சட்டதில் ஸ்டாலின் சிறைக்கு சென்றார் என்பது கூட பொய்தானாம்.. பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த கட்சி திமுக.. அப்புறம் கருணாநிதியே ஒரு துண்டு சீட்டுதானாம்..

ponmudi

திமுக.,வின் பொன்முடியுடன் வின் டிவி., சார்பில் ஒரு கேள்வி பதில் நிகழ்ச்சி ஒளிபரப்பானது. இதில் பொன்முடியிடம் கேட்கப் பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் இப்போது சுவாரஸ்யமாக இணையதளங்களில் உலா வருகின்றன.

மு.க.ஸ்டாலின் துண்டுச்சீட்டு வைத்துக் கொண்டு பேசியும், அவ்வப்போது உளறிக் கொட்டி, கேலிப்பொருளாக ஆகிவிடுகிறார் என்றும், ஸ்டாலின் பேச்சில் ஏதாவது இப்படி அகப்படுகிறதா என்று பலரும் எதிர்பார்த்துக் காத்திருப்பது வழக்கமாகி விட்டது என்றும் கேள்வி முன்வைக்கப் பட்டது.

அதற்கு பதிலளித்த பொன்முடி, திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின் உளறுவது குறித்து தப்பில்லை என்றும், துண்டுச் சீட்டு எடுத்து படிப்பதும் தவறில்லை என்றும் கூறினார். ஆனால், இதை விட பகீர் தகவலாக பொன்முடி சொன்னது… மு.கருணாநிதியும் கூட சண்முகநாதன் எடுத்துக் கொடுத்த விஷயங்களை வைத்துதான் பேசியிருக்கிறார் என்று கூறி திமுக.,வினரையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறார்.

ஸ்டாலினுக்கு வக்காலத்து வாங்குவது போல் கருத்தைச் சொல்லி, கருணாநிதிக்கு சுய புத்தி இல்லை, சண்முகநாதன் எடுத்துக் கொடுத்த தரவுகளைக் கொண்டுதான் அவர் போக்கில் பேசியிருக்கிறார் என்ற உண்மையைச் சொல்லியிருக்கிறார் பொன்முடி.

ஷா கமிஷன் அறிக்கையில், ஸ்டாலின் பெயர் இல்லை என்றும், மிசா காலத்தில் ஸ்டாலின் சிறை சென்றாரே தவிர மிஸா கைதியாக இல்லை என்றும் அறிக்கையில் குறிப்பிடப் பட்டிருப்பது குறித்து கேள்வி எழுப்பப் பட்டது.

அதற்கு பதிலளித்த பொன்முடி, இதை இப்பதான் கேள்விப் படுகிறேன்… எனக்குத் தெரியாது. இது குறித்து நான் படிக்கவுமில்லை என்று கூறியுள்ளார்!

அவரது இந்த பதில்கள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

உதய்ணா ரசிகன்@Nativebullz :
பெரியார் யுனெஸ்கோ
பெரியார் கோவில் நுழைவு
பெரியார் கீழ்வெண்மணி
கருணாநிதி ரயில் மறியல்
அண்ணா மொழி போராட்டம் மாதிரி…
ஸ்டாலின் மிசா
ஸ்டிக்கர்_திரவிடம்

வணங்காமுடி???????? @itz_katti:
மிசா சட்டதில் ஸ்டாலின் சிறைக்கு சென்றார் என்பது கூட பொய்தானாம்..
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த கட்சி திமுக.. அப்புறம் கருணாநிதியே ஒரு துண்டு சீட்டுதானாம்..
காப்பி பேஸ்ட் கட்சி திமுக..

  • எமெர்ஜென்சி மற்றும் மிசா குறித்து விசாரித்த ஷா கமிஷன் அறிக்கையில் மு க ஸ்டாலின் என்றோ அல்லது அவரது இயற்பெயரான அய்யாதுரை என்றோ எங்காவது குறிப்பிடப்பட்டுள்ளதா என்பது கேள்வியென்றால் , அதற்கு பதிலளிக்க வேண்டும் , அதை விடுத்து மிரட்டல் விடுவது , அசிங்கமாக பேசுவது என்று அதே பழைய தி மு க பாணியையெல்லாம் இப்பொழுதும் கடைபிடிப்போம் என்றால் செருப்படி தான் பதிலாகக் கிடைக்கும் … காலம் மாறிவிட்டது
  • அன்னைக்கு எவனை கைது பண்ணாலும் மிசா தான். அது பிக்பாக்கெட்டோ…பிளேடு பக்கிரியோ , ஈவ் டீஸிங்கோ ,, இன்னும் சொல்லவேண்டுமென்றால் , இந்த தி மு க பொறுக்கிகள் எல்லாம் அடக்கி வைக்கப்பட்டு சட்டம் ஒழுங்கு சரியாக இருந்த காலக்கட்டம் எமெர்ஜென்சி காலகட்டம் என்பார்கள் அன்று தமிழகத்தில் வாழ்ந்த மக்கள்
  • கிஷோர் கே.ஸ்வாமி
Advertisements
வெள்ளித்திரை செய்திகள் :