
திமுக., என்.ஆர்.சி., சிஏஏவுக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்துவதாகக் கூறி, மு.க.சுடாலின் தலைமையில் பல இடங்களில் பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கி வருகிறார்கள். பல இடங்களில், தாங்கள் எதற்கு கையெழுத்து போடுகிறோம் என்று தெரியாமலேயே திமுக.,வினர் மிரட்டியும் பொய் சொல்லியும் கையெழுத்து பெற்றுவருகின்றனர்.
அந்த வகையில், தி.மு.க உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பில் திருச்செந்தூர் முருக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவதாகக் கூறி, ஒரு பந்தல் ஏற்பாடு செய்துள்ளனர். அந்த அன்னதான நிகழ்ச்சியில் பாதயாத்திரை வரும் முருக பக்தர்களை ஏமாற்றி உணவுப் பொட்டலம் கொடுத்து NRC மற்றும் CAA Bill எதிராக கையெழுத்து பெற்று வந்துள்ளனர்.
அன்னதானத்தின் பெயரில் அரசியல் இயக்கம் நடத்தி, மறைமுகமாக அப்பாவி பக்தர்களை ஏமாற்றி பிழைப்பு நடத்துகிறது திமுக., என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து முருக பக்தர்கள் கூறிய போது, உணவு பொட்டலங்கள் கொடுத்ததற்கு பதிவு செய்கிறார்கள் என்று நினைத்தோம். ஆனால் நாங்கள் இவ்வாறு ஏமாற்றப்பட்ட விஷயம் அறிந்து வருத்தப் படுகிறோம் என்றனர்.